Saturday, October 22, 2011

ஹசாரேயின் பார்ப்பனத் தன்மை


லோக் அயுக்தா என்ற அமைப்பின் மூலம் வெளி உலகுக்கு வந்தவர் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த அன்னா ஹசாரே.
ஊழலை ஒழிப்பேன் என்று அறை கூவலிட்டார்.  சில செய்திகள் மக்களை வெகுவாக ஈர்க்கும்; அவற்றில் ஒன்று இந்த ஊழல் ஒழிப்பு.
அதைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டார். மத்திய அரசு சரியான முறையில் இதைக் கையாளாத காரணத்தால் ஹசாரே பெரிய மனிதராக ஆக்கப் பட்டார்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் சபையை விட,நாடாளுமன்றத்தை விட,அதிகார மய்யம் ஒன்றைஉருவாக்க வேண்டும்என்பதே ஒரு வகையான சர்வாதிகார மூர்க்கக் குணம்தான்.
உண்ணாவிரதம் இருந்ததன் மூலம் பாமர மக்கள் மத்தியில் மலிவான விளம்பரத்தைப் பெற்ற இந்த ஹசாரே - அதனைக் கொண்டு அரசியல் விளை யாட்டு ஆட ஆரம்பித்துவிட்டார்.
நான் சொன்னவகையில் லோக் அயுக்தா அமைக்கப்பட வில்லையென்றால், தேர்தலில் காங்கிரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வேன் என்று மிரட்டுகிறார்.
அரியானாவில் காங்கிரசை எதிர்த்துப் பிரச்சாரம் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் கூடாரத்துக்கு உள்ளேயே குடைச்சல் ஏற்பட்டு சிலர் விலகியுள்ளனர். மேலும் சிலர் விலகும் நிலையில் இருப்பதாகக் கூறப் படுகிறது.
ஹசாரேயின் சொந்த ஊரான ராலேகான் சித்தியில் மாமிச உணவு சாப்பிட அனுமதியில்லையாம். மீறி சாப்பிடுபவர்கள் மரத்தில் கட்டி வைத்து உதைக்கப் படுவார்களாம். இது குறித்து சமூக ஆர்வலர்கள் எதிர்க் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அன்னா ஹசாரேயுடன் நெருக்கமாக இருந்த சுவாமி அக்னிவேஷ் கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளார். ஹசாரேயின் நடவடிக்கைகள் அனைத்தும் பிராமணத் தன்மை கொண்டவைகளாகவே இருக்கின்றன என்று கூறியுள்ளார்.
தொடக்கத்திலிருந்தே ஹசாரேயின் நடவடிக் கைகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ்.பின்னணி குறித்தும் திராவிடர் கழகம், விடுதலையில் இந்தக் குற்றச் சாற்றை முன் வைத்து வந்திருக்கிறது. இப்பொழுது அவர் ஹசாரே அருகில் இருக்கும் முக்கிய பிரமுக ராலேயே அந்தக் கருத்து   ஏற்றுக் கொள்ளப்பட்டு, வெளிப்படுத்தியிருப்பது வரவேற்கத் தக்கதே!
பார்ப்பனீயம் பல வடிவங்களில் நடமாடும். அதில் ஒன்றுதான் இந்த ஊழில் ஒழிப்பு கதாநாயகர் ஹசாரே வேடம்.
பின்னணியில் இருப்பது ஆர்வம்! ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் உண்ணாவிரதம் - அதனைத் தொடர்ந்து எல்.கே.அத்வானி ரதயாத்திரை என்பதெல்லாம் இந்தப் பின்னணியில்தான் அரங்கேறி வருகின்றன.
முடிவு எடுக்கப்படுவது கூட கூட்டுப் பொறுப்பில் அல்ல. தான் மேற்கொள்வதுதான் முடிவு என்ற வகையில்தான்  அமைகிறது என்றும் சக தோழர்கள் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஹசாரேயும், கேஜ்ரிவாலும் எடுக்கும் முடிவுதான் அமைப்பின் முடிவாகச் சித்தரிக்கப்படுகிறது.
குழுவின் முக்கிய உறுப்பினரான பிரசாந்த் பூஷன்  காஷ்மீர் பிரச்னையில் தமது எண்ணத்தை வெளி யிட்டார். ஹசாரே குழு என்பது ஒரு அரசியல் கட்சியும் அல்ல. குறிப்பிட்ட ஒருவரால்  ஒரு பிரச்னைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது என்று வைத்துக் கொண்டாலும், அதில் உள்ள உறுப்பினர்கள் தங்களுக்கென்று உள்ளகருத்துக்களை வெவ்வேறு பிரச்னைகளில் வெளியிடக்கூடாதா?
ஹசாரே சிரித்தால் சிரிக்க வேண்டும்; அழுதால் மற்றவர்களும் அழுது தீர வேண்டும். இதுதான் அந்தக் குழுவில் உள்ளவர்களின் கதியா?
பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு பிரச்னைகளில் பல்வேறு கருத்துகளைக் கொண்ட வர்கள். அந்தக் குழுவில் இருக்கும் போது மூத்த வழக்கறிஞர் காஷ்மீர் பிரச்னை பற்றி கருத்துக் கூறிய தவறு என்று ஹசாரே கூறியிருப்பது எந்த வகையில் சரி?
அப்படி ஏதாவது அந்தக் குழுவுக்கு வரையறுக்கப் பட்ட கொள்கைகள், விதிகள் முறையாக உருவாக்கப் பட்டுள்ளனவா?
இந்தியாவில் வேஷம் போட்டு மக்களை ஏமாற்ற லாம். அதில் ஒருவர்தான் இந்த ஹசாரே. மக்கள் விழிப்புடன் இருந்து தீரவேண்டும் என்பதுதான் நமது முக்கிய வேண்டுகோள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...