திராவிடர் நாடகம் என்றாலே....
அந்தக்குழு விழுப்புரத்திலே தங்கி நாங்களெல்லாம் சென்று நாடகத்தை நடத்தக் கொண்டிருக்கும் போது பேசிக்கொள்வார்கள்; நாகை திராவிட நடிகர் கழகம் என்றல்லவா போடப்பட் டிருக்கும். நான் சொல்லுவது 1945------_46 ஆம் ஆண்டுகளில்.
கடைத்தெருவில் நாங்கள் போய்க் கொண்டிருப்போம். முதல்நாள் இரவு நடித்தவர்கள் நாங்கள் என்பது பலருக்குத் தெரியாது. கடைத்தெருவிலே பேசிக்கொண்டிருப்பார்கள். யாரோ நாகப்பட்டினத்திலே இருந்து நாற்பது,- அய்ம்பது பறையர்கள் வந்திருக்கிறார் கள். அவர்கள் ஏதோ சாந்தாவாம்.
பழனியப்பனாம் நாடகம் நடத்துகிறார் கள் என்று சொல்வார்கள். திராவிடர் என்றாலே அன்றைக்கு பறையர்கள், பள்ளர்கள் என்று இழித்துப் பேசுகின்ற நிலைமை இருந்தது! புரியாத நிலைமை இருந்தது! ஆதிதிராவிட மக்களை இழித்துப் பேசுகிற காலமாக இருந்தது!
அப்படிப் பேசப்பட்ட காலத்தில் விழுப்புரத்தில் நாங்கள் நாடகம் நடத் துகிறோம். அவர்கள் தான் ஏற்கெனவே முத்திரை குத்திவிட்டார்களே நாங்கள் யாரென்று! பிறகு வருவார்களா நாடகம் பார்க்க! ஒவ்வொரு நாளும் பிரமாத மான வசூல்! எண்பது ரூபாய், எழுபது ரூபாய், நாற்பது ரூபாய்!
இந்தக் கூத்தில் நாங்கள் ஒரு நாள் பேரறிஞர் அண்ணாவைத் தலைமை தாங்க வரவழைத்திருந்தோம்! விழுப் புரத்திலே நாடகம்! அங்கு நாடகம் நடந்து முடிந்த பிறகு அண்ணா அவர்களை வழியனுப்ப செலவுக்குப் பணமில்லை; அவ்வளவு அபாரமான வசூல்!
அறிஞர் அண்ணா தலைமையில் மு.கருணாநிதி நடிக்கும் சாந்தா அல்லது பழனியப்பன் நாடகத்திற்கு 30 ருபாய்க்கும் குறைவான வசூல்! அண்ணா அவர்கள் எங்களை மேலும் உற்சாகப்படுத்தி விட்டு.....நீங்கள் இந்த நட்டத்துக்காக கவலைப்படாதீர்கள்; தொடர்ந்து பணியாற்றுங்கள என்று கூறிவிட்டுச் சென்றார். அதன் தொடர்ச்சியாகத்தான் புதுவை மாநகரத்திலே கெப்ளே தியேட்டர் என்று அழைக்கப்படுகின்ற ஒரு தியேட்டரில் கழகப் பிரச்சார நாடகங்களை மீண்டும் தொடர்ந்து நடத்தினோம். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் நாடகங்கள் நடத்தப்பட்டன.
கலை விழாவில் கலைஞர்
(சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகம் நடத்திய கலை விழாவில் -_ 10.7.1985)
No comments:
Post a Comment