Wednesday, October 26, 2011

இளைஞர் எழுச்சி!


இளைஞர் எழுச்சி!

துரை. சந்திரசேகரன்
துணைப் பொதுச் செயலாளர்
திராவிடர் கழகம்

அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் அருமை  - பெருமைகளை விளக்கியும், அளப்பரிய தொண்டினை தொகுத்துரைத்தும், மூடத்தனத்தி லிருந்து மக்களை மீட்டு அறிவுப் பாதையில் அணிவகுத்திடச் செய்திட ஆற்றிய பரப்புரையை - போராட்டங் களை எடுத்துரைத்திடவும் வாய்ப்பாக வும், பார்ப்பன பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடித்திட திராவிடர் கழகத்தின் பின்னால் மக்கள் அணி திரள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும்.

அய்யாவின் வாழ்வு நீட்சிக்கு காரணமாக இருந்ததுடன் அய்யா வின் மறைவுக்குப் பின்னால் இயக் கத்தை கட்டிக் காத்து, வழி நடத் திட்ட ஈகத்துக்கு எடுத்துக்காட்டான அன்னை மணியம்மையாரின் வர லாற்றுச் சுருக்கமும், கருத்தாக்கமும் இணைந்ததொண்டில் உயர்ந்த தூயவர் ஈ.வெ.ரா. மணியம்மையார் என்ற முனைவர் ந.க. மங்கள முருகேசன் தொகுத்திட்ட அற்புத மான நூலினை அறிமுகம் செய்தும்,

திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நாடு தழுவிய அளவில் செப்டம்பர் 17 தொடங்கிய அக்டோபர் 1 வரை 50 ஊர்களில் எழுச்சி மிக்க வண்ணம் தந்தை பெரியார் 133ஆவது பிறந்த நாள் பெரு விழாவை எடுத் திட்ட - நடத்திட்ட பாங்கு பாராட்டுக் குரியது. பிரச்சாரப் பணி எனும் அளவில் பெருமைப்படத்தக்கது. மூன்று கோணங்களில் அய்யா பிறந்த நாள் விழாவை கொண்டாடச் செய்த துடன், அன்னை மணியம்மையார் பற்றிய நூலினை ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 500-க்கு விற்பனை செய்திட்ட வித்தகம் போற்றற்குரியது. ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்வுகள் நிகழ்த்தப்பெற காரணமான மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா. செயக்குமாரின் பணி பாராட்டுக்குரியது.

தமிழர் தலைவரின் கட்டளைக்கு காத்து நிற்கும் களப்பணியாளர்களாக கழகத் தோழர்கள் அனைவரும் இருந் தாலும் கழக இளைஞரணியும், திராவிடர் மாணவர் கழகத்தினரும் முன்னோடும் படையாக துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாக்களாக தலைமைக் கழகத்தின் ஆணையை  செயல்படுத்தும் போர் மறவர் களாக எதற்கும் தயாராய் எப்போதும் பணியாற்ற தயார் நிலையில் உள்ளது வேறு எந்த இயக்கத்துக்கும் இல்லாத நமது இயக்கத்துக்கு மட்டுமே கிடைத் திட்ட பெரும் வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

திராவிடர் மாணவர் கழகத்தின் மாநில மாநாடு - மாநாட்டை ஒட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி 13.8.2011-ல் நாகையில் நடத்த விதம் மாற்றாரை மருளச் செய்தது; உற்றாரை வியக்க வைத்தது என்றே சொல்லலாம்; நாகை அவ்வளவு பெரிய கூட்டத்தை திறந்தவெளி மாநாட் டில் அண்மைக் காலத்தில் கண்டதில்லை என்றே பலரும் சொன்னார்கள். ஏலாக் குறிச்சி - நாயக்கர் பாளையத்தின் மாண வரணி தோழர் சவுந்தரராசன் பொறுப்பில் நடத்திய அய்யா படிப்பகமும், சிலை திறப்பும், அந்நிகழ்வில் திரண்ட கிராமப் புறத்து மக்கள் திரளும் திராவிட கழகத்துக்காரர் ஒவ்வொருவரும் தனி மனித ராணுவத்துக்கு ஒப்பானவர்கள் என்பதை மெய்ப்பித்த காட்சியன்றோ!

திராவிடர் கழக இளைஞரணியினர் பொறுப்பெடுத்து நடத்திய காஞ்சி மண்டல மாநாடு திருத்தணியில் 28.8.2011-லும், கடலூர் மண்டல மாநாடு 10.9.2011-ல் திருக்கோவிலூரிலும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டவை திருக்கோவிலூரில் எடைக்கு எடை5 மடங்கு அளித்து தமிழர் தலைவரின் தளர்ச்சியில்லா தொண்டுக்கு பராக்கு கூறிய பாங்கு மறக்க முடியாத நிகழ்ச்சியன்றோ! இளைஞர்கள் நினைத் தால் எதனையும் செய்து முடிப்பர் என்பதை நிரூபித்த காட்சிகளும்கூட!

கழக இளைஞரணியினரின் எழுச்சி மிக்க பணிகளை கண்ட தமிழர் தலைவர் எதற்கும் தயாரான 1000 இளைஞர்களை தாருங்கள் தத்துவப் பேராசான் தந்தை பெரியாரின் எண்ணங்களை ஈடேற்றி காட்டுகிறேன் என்ற தம் அவாவினை வெளிப்படுத்தினார். தமிழர் தலைவரை தாண்டி எங்களுக்கு வேறு எதுவும் பெரிதில்லை என ஆர்ப்பரித்து நிற்கும் இளைஞர்கள் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டு விடக் கூடாது என்பதில் போட்டி போடுவதை காண முடிகிறது. எங் களுக்கு எல்லாமும் நீங்கள்தான் என்று தலைவரை வரித்துக் கொண்ட வாலிபர் கள் அய்யாவின் லட்சியத்தை ஈடேறச் செய்திட ஆர்ப்பரித்து நிற்கும் காட்சி திராவிடர் கழகத்துக்கு மட்டுமே உரியது.

கடலூர், நெய்வேலி நகரம், புதுச்சேரி, சிவகங்கை, தங்கச்சி மடம், மதுரை, புதுக் கோட்டை, நாகை, கரூர், ஆலங்குடி, குன்றத்தூர், சிவகிரி, வைப்பூர், அரக் கோணம், ஆவடி, கும்மிடிப்பூண்டி, திங்கள் நகர், கோபி, ஜெயில்பேட்டை, ஓமலூர், மதுக்கூர், விக்கிரவாண்டி, செஞ்சி, வேட்டவலம், திருப்பைஞ்ஞீலி, காவேரிப் பட்டினம், சேலம், காஞ்சிபுரம், பாளையம் பட்டி, திருவையாறு, சங்கராபுரம், பழனி, திருப்பூர், பாளையங்கோட்டை, குடியாத் தம், பள்ளத்தூர், திட்டக்குடி, தூத்துக்குடி, ஒரத்தநாடு, திருவொற்றியூர், செங்கல் பட்டு, பொள்ளாச்சி, திருநாகேசுவரம், கோயம்புத்தூர்,குன்னூர், மருதூர், சிதம் பரம், நிலக்கோட்டை, பரமத்தி வேலூர் ஆகிய 50 ஊர்களில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாக்கள் சீரும் சிறப்புமாக நடை பெற்றன.
மிகப் பெரிய கொள்கைப் பரவல் இளை ஞரணியினரின் எழுச்சிமிக்க கூட்டங்களால் நடந்தேறியது என்றே சொல்ல வேண்டும். கழகத்தின் அனைத்து நிலை சொற்பொழிவாளர் களும் பங்கேற்று பரப்புரையில் ஈடு பட்டனர். அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் இளை ஞரணியினரின் சீரிய முயற்சி வெற்றி பெற முழுமையான ஒத்துழைப்பினை அளித்தமை குறிப்பிடத் தக்கது. தொடர் மழையின் காரண மாகவும், தேர்தல் நெருக்கத்தின் காரண மாகவும் சில ஊர்களில் நிகழ்ச்சிகள் நடத்திட விரும்பியும் இயலாமற்போனது. மீண்டும் அவர்கள் விடுபட்ட நிகழ்வினை நடத்திட தயார் நிலையில் இருப்பதை அறிய முடிகிறது. தொண்டில் உயர்ந்த தூயவர் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை நூல் முற்றிலும் விற்றுத் தீர்ந்து போயின. இன்னமும் இருந்தால் மக்கள் படித்துப் பயன் பெற வாய்ப்பாக்கி இருக்கலாம் என்ற நிலை.
குறிக்கும் உன் இளைஞர் கூட்டம் எங்கே?

மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளுக்கொப்ப பார்ப்பன பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்திட, அய்யா வின் கொள்கையை அவனி எல்லாம் பரப்பிட தமிழர் தலைவர்தம் கட்டளை ஏற்று காரிய மாற்றிட கழகத்தின் இளைஞரணி மாணவரணி சூளுரைத்து, சுடர்முகம் காட்டி தயார் நிலையில் வெற் றியை ஈட்டிட காத்திருக்கிறது என்பதை அய்ம்பது கூட்டங்களும் வெளிப்படுத் தின.
வெல்க பெரியாரியல்! வீழ்க மூடநம்பிக்கை!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...