Wednesday, September 28, 2011

மருத்துவ படிப்பிற்கு அனைத்திந்திய அளவில் நுழைவுத்தேர்வா?


மருத்துவ படிப்பிற்கு அனைத்திந்திய அளவில் நுழைவுத்தேர்வா?

மாணவர் சமுதாயத்திற்குப் பேரிடியாக எதிர்வரும் 2012 ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கல்லூரி களில் எம்.பி, பி.எஸ் பட்டப் படிப்பினை மேற்கொள்வதற்கான மாணவர்கள் தேர்விற்கும், எம்.டி., எம்.எஸ் போன்ற பட்ட மேற்படிப்பினை மேற்கொள்வ தற்கான மாணவர்கள் தேர்விற்கும், தேசிய அளவில் பொதுவானதான நுழைவுத் தேர்விற்கும் (Common Entrance Test-CET) முறையே, டெல்லி யிலமைந்த உயர்நிலைப் பள்ளிகளுக் கான மத்திய அமைப்பு (Central Board Of Secondary Education- CBSE) மற்றும் அகில இந்திய மருத்துவக் கழகத்தின் (All India Institute of Medical Sciences-AIIMS) வழிகாட்டுதலோடு நடத்தும் என்கிற இந்திய மருத்துவக்குழாமின் (Medical Council of India-MCI) முடிவாக செய்தி வெளியாகி இருப்பது மக்கள் தொகையில் எண்பது சதவிகிதத்திற் கும் (80ரூ) மேலாக இருக்கும் கிராமப் புற மற்றும் வசதி, வாய்ப்புகளற்ற ஏழை-எளிய மாணவ சமுதாயத்திற்கு பேரிடியாக அமைந்து சமுதாயச் சீரழி விற்கு வழிவகுக்கும்; அநீதியாகவும் அமையும்.
ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது......
ஏனெனில், தேசிய அளவில், அதுவும், அய்.சி.எஸ்.சி கல்விப் பாடத்திட்டத்தை மேற்கொள்ளும் மாணவர்களால் மட்டுமே தேசிய அளவிலான பொதுவான நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும்; வசதி வாய்ப்புகளற்ற கிராமப்புற மாணவர்களாலும் நகர்ப்புற ஏழை மாணவர்களாலும் நுழைவுத் தேர்வில் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது.
மருத்துவக் குழாமின் தன்னிச்சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா.....?
இந்திய மருத்துவக்குழாமின் அறிவிப் பாக செய்தி வெளியாகி இருப்பது, இந்திய மருத்துவக் குழாமின் தன்னிச்சையான முடிவா அல்லது மத்திய அரசின் கொள்கை முடிவா எனத் தெரியவில்லை.
ஏனெனில், இந்திய மருத்துவக் குழாமிற்கு தன்னிச்சையாக செயலாற்றக் கூடிய அதிகாரம் கொடுக்கப்பட்டிருந் தாலும், பொதுவான நுழைவுத் தேர்வினை நடத்தி எம்.பி, பி.எஸ் பட்டப் படிப்பிற்கும், எம்.டி, எம்.எஸ் போன்ற பட்ட மேற்படி ப்பிற்கும் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்கிற அறிவிப்பு தான்தோன்றித் தனமானது மட்டுமின்றி ஏழை-எளிய மக் களுக்கு வாய்ப்புகள் கிட்டாமல் செய் வதற்கான சூழ்ச்சி வலைகளோ என்று தான் எண்ணத்தோன்றுகிறது.
ஏழை எளிய மக்களுக்கு பெரும் பாதக மாக அமையும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணைபோகிறதா அல்லது அலட் சியம் காட்டுகிறதா என்று தெரியவில்லை.
தாறுமாறானதும், ஏற்றத் தாழ்வை ஏற்படுத்தக் கூடியதுமான அய்.சி.எஸ்.சி, கல்வி, சி.பி.எஸ்.ஈ., கல்வி, ஆங்கிலோ இந்தியக் கல்வி, ஓரியண்டல் கல்வி, மாநில மெட்ரிக் முறை கல்வி என்று மாறுபட்ட, வேறுபட்ட கல்வி முறைகளைக் களைந்து சமச்சீர் அளவிலான உயர் கல்வியை நாடு முழுவதும் அளிக்க வேண்டுமென்றும்; கிராமப்புற மாணவர் களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்கிக் கிராமப்புற மாணவர்கள் நலனைப் பாதுகாத்திட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக்கூடாது.
தேசிய அளவில் அனைத்துப் பள்ளிகளி லும், குறிப்பாக, அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறா தனியார் பள்ளிகளிலும், தனியார் கூட்டமைப்புப் பள்ளிகளிலும், கிராமப்புறப் பள்ளிகளிலும், நகர்ப்புறப் பள்ளிகளிலும் மாணவர்கள் பயிலக்கூடிய உயர்தரப் பள்ளி அமைப்புகள், செம்மையான ஆசிரியர்கள், பயிற்சிக் கூடங்கள், இன்னபிற  வசதிகளை உருவாக்கி ஒரே சீரான கல்வி, அதுவும் தரமான சமச்சீர் கல்வியைத் தாய்மொழி அல்லது வட்டார மொழியிலும், ஆங்கிலத்திலும் ஒரே சீராக அளிக்கப்பட்டால்தான் நாட்டளவில் பொதுவான நுழைவுத் தேர்வு பற்றி சற்றே பரிசீலனை மேற்கொள்ளலாம். அந்த நாள் வரை தேசிய அளவில் பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது.
ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அதற்குப் பாரதப் பிரதமர் மாண்பு மிகு டாக்டர் மன்மோகன்சிங் தலைமை யிலான மத்திய அரசு உடனடி நடவடிக் கைகளை மேற்கொண்டு, இந்திய மருத் துவக் குழாம் மேற்கொள்ளவிருக்கின்ற தேசிய அளவில்  பொதுவான நுழைவுத் தேர்வு என்கிற
முடிவினை விலக்கி முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்
இல்லையேல் நாடு தழுவிய ஏழை-எளிய மக்களும், மாணவர் சமுதாயமும், பிற்படுத்தப்பட்ட மக்களும், ஒடுக்கப் பட்ட மக்களும், சிறுபான்மையினரும் ஒன்று திரண்டு போராடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
அந்த அறப்போராட்டத்தை, ஒத்த மனமும் செயல்பாடுகளும் கொண்ட அரசியல் கட்சிகள், சமுதாய அமைப் புகள், மருத்துவர்கள்-மருத்துவத் துறையினர், ஆசிரியர் அமைப்புகள்- ஆசிரியர் கூட்டமைப்புகள், மாணவர் சமுதாயம், பொதுமக்கள் உள்ளிட் டோரை ஒன்று திரட்டி நாடு தழுவிய அளவில், தேசிய பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் மற்றும் சிறுபான்மையினர் கூட்டமைப்பு நடத்தும்.
குறிப்பிட்டுள்ள அமைப்புகளும் தத் தமக்கே உரிய எழுச்சியோடும் வேகத் தோடும், முனைப்போடும் போராட் டங்களை ஒன்றுபட்டு நடத்தி, உரிமைக் குப் போராடி, சமூக நீதி காத்து, சமுதாய நலன் காப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...