Thursday, September 22, 2011

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதிகள் பெரியாரும் - மணியம்மையாரும்!

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சீர்திருத்தவாதிகள் பெரியாரும் - மணியம்மையாரும்! அறிவியல் தொழில் நுட்பத்தில், முன்னேற்றத்தில் முன்னோடியாகத் திகழும் இப்பல்கலைக் கழகத்தில் பயில்வதைப் பெருமையாகக் கருதுவீர்!


பட்டமளிப்பு விழாவில் விஞ்ஞானி டாக்டர் வி. செல்வமூர்த்தி உரை
தஞ்சை வல்லத்தில் நேற்று நடைபெற்ற பட்ட மளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தலைசிறந்த விஞ் ஞானி மற்றும் முதன்மைக் கட்டுப்பாட்டு அலுவலர்   (DRDO - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை பாதுகாப்பு அமைச்சகம்) டாக்டர் வி. செல்வமூர்த்தி அவர்கள் ஆற்றிய பட்டமளிப்புப் பேருரையில் - அறிவியல் தொழில்நுட்ப முன்னேற் றத்தில் இந்தப் பல்கலைக் கழகம் முன்னோடியாக உள்ளது என்றும், தலை சிறந்த சீர்திருத்தவாதி களின் பெயரில் நடைபெறும் இப்பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படிப்பது பெருமைக் குரியது என்றும் குறிப் பிட்டார்.

டாக்டர் வி . செல்வ மூர்த்தி அவர்கள் தலை சிறந்த விஞ்ஞானி மற் றும்  முதன்மை கட்டுப் பாட்டு அலுவலர் (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் துறை பாது காப்பு அமைச்சகம்) (DRDO)  இந்திய அரசு. பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றினார். தமது உரையில் குறிப் பிட்டதாவது:

பெரியார் மணி யம்மை பல்கலைக்கழ கத்தின்   பட்டமளிப்பு விழாவில்  கலந்து கொள் வதில் மகிழ்ச்சி அடை கின்றேன். இன்று பட் டம் பெறுகின்ற மாண வர்களையும், ஆசிரியர் களையும், முன்னாள் மாணவர்களையும் மற் றும் சிறப்பு விருந்தினர் களையும் வாழ்த்து கிறேன்.

இப்பட்ட மளிப்பு விழாவிற்கு என்னை அழைத் தமைக்கு பெரியார் மணியம்மை  பல்கலைக் கழகத்திற்கு எனது நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் மணி யம்மை அறப்பணிக் குழுவினரால் 1988 ஆம் ஆண்டு  பெரியார் மணி யம்மை பெண்கள் பொறி யியற் கல்லூரியாக தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல்கலைக் கழகமாக வளர்ந்து இருப்பது கண்டு பெரி தும் மகிழ்ச்சி அடை கிறேன். தந்தை பெரியார் என்று அழைக்கப்படும்  ஈ.வெ.ராமசாமி மற்றும் கொடையுள்ளம்  கொண்ட  அவரது துணைவியார் அன்னை மணியம்மையார் ஆகிய இருவரும் இருபதாம் நூற்றாண்டின் இணை யற்ற சமூக சீர்திருத்த வாதிகள். இவர்களின் பெயரால் அமைந்த இப்பல்கலைக்கழகத்தில் பயில்வதை மாணவர்கள் மிகுந்த பெருமையாக கருத வேண்டும்.

உலகி லேயே முதன் முதலாக  பெண்களுக்கென்று  தோற்றுவிக்கப்பட்ட ஒரு பொறியியற் கல் லூரி என்ற பெருமை இந்தக் கல்வி நிலையத் திற்கு  உண்டு. கல்லூரி தோன்றிய காலத்திலி ருந்து தந்தை பெரி யாரின் கொள்கைகளை செயல்படுத்தி வருவதில் முன்னோடியாகத் திகழ்கிறது.

அதிலும் குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பம் மேல் நிலைக் கல்வி மற்றும் நாடு தழுவிய சமூக  முன்னேற்றங்களிலும் இக்கல்வி நிறுவனம் முன்னோடியாக திகழ் கிறது. சமூக முன்னேற்றம்,  பெண்கள் உயர்வு, தொழிற்கல்வி மேம்பாடு ஆகியவற்றை தனது இலக்காகக்  கொண்ட இக்கல்வி நிறுவனம் பல்வேறு சாதனைகளை  புரிந்து வருகிறது. 

இளநிலை, முதுநிலை, பொறியியல், கட்டடக் கலை ஆகிய துறைகளி லும். இளங்கலை, முது கலை, ஆய்வியல் நிறை ஞர் மற்றும் முனைவர் பட்டங்களை பல்வேறு துறைகளில்   பெறுவ தற்கு  வேண்டிய வசதி களை இப்பல்கலைக் கழகம் செய்து தருகிறது. செய்வதோடு  கிராமப் புற மக்களின் சமூக பொருளாதார வாழ்வு  மேம்படும் வண்ணம் தேவையான  ஆலோ சனைகளையும் பணி களையும் செய்து வரு கிறது.

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பெண்கள் தங்களது  பணிகளை  ஆற்ற வேண் டும் என்று விரும்பிய தந்தை பெரியார் இரு பாலரும்  பயிலும்   கல்வியினையும்  ஆண் பெண் சமத்துவத்தையும் வற்புறுத்தினார். ஒரு காலத்தில் குடியிருப் புக்கு,  வேளாண்மைக்கு ஒவ்வாத    நாட்டுப்புற பகுதியாக  கிடந்த ஒரு முழுப்பரப்பளவில் பெருத்த மாற்றத்தை செய்து அறிவியல் தொழில் நுட்பம் கொஞ் சும் ஒரு பசுஞ்சோலை யாக  ஒரு பல்கலைக் கழகமாக  உருவாக்கிய பெருமை இக்கல்வி நிலையத்தின் தனிப் பெருஞ் சிறப்பாகும். எரிபொருள்  சிக்கனம்,   மாசு மருவற்ற  சூழ் நிலை, அமைதியான சூழல்  ஆகிய இவைதான்  கல்வி கற்றுத் தருவதற் குரிய  நல்ல அமைப்பும் வாய்ப்பும் ஆகும். 

அப் படிப்பட்ட கல்வி நிறு வனத்திலிருந்து  சிறந்த பொறியியற் வல்லுநர் களை  உருவாக்கிய ஆசிரியப் பெருமக்களை   மனதார வாழ்த்துகி றேன். நாட்டுப்புற வளர்ச்சியில்  அறிவி யல் தொழில்நுட்பத்தின் பங்கு என்பது பற்றிய எனது சிந்தனையை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிராமப் பகுதிகள் அய்க்கிய நாடுகளின்  அமைப்பின் வேளாண்மை வளர்ச்சிக்கான 2011 ஆம்  ஆண்டின் அறிக்கை ஒன் றின் படி உலகளாவிய சூழ் நிலையில் கோடிக் கணக்கான கிராமப்புற மக்கள் பொருளாதர நிலையில் மிகவும் தாழ்ந்து கிடப்பதை  சுட்டிக் காட்டுகிறது. அந்த அறிக்கை யின்படி உலக மக்கள் தொகையில்  55 பங்கு  அல்லது 3.1 மில் லியன் மக்கள் கிராமப் புறத்தில் வாழ்கின்றனர்.

காந்தியார்   நெடுங் காலத்திற்கு   முன்னரே   இந்திய நாடு கிராமங் களில் வாழுகின்றது என்று  குறிப் பிட்டுள்ளார். இன்றளவிலும்   அது உண்மைதான். சமூக பொருளாதார அரசியல் கண்ணோட்டத்தில்   அவருடைய கருத்து இன்றைய நிலை யிலும்  பொருத்தமாக உள்ளது. நம் நாட்டின் 80 பங்கு  மக்கள்  கிராமங் களில்  வாழ்கின் றனர்.  தமிழ்நாட்டை பொருத்தவரை ஏறத் தாழ 65 பங்கு தமிழக மக்கள்  கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.

இந்திய நாடு வளர்ந்து  வரும் நிலையில் தான் உள்ளது. கிராமத்திற்கும், நகர்ப்புறத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பெருமளவு குறைத்தால் ஒழிய, புதுவளர்ச்சி நிலையாகிய 8 விழுக் காட்டை அடைதல் அரிது. இந்தி யாவை ஒரு வளர்ந்த நாடாக்க வேண்டுமானால் பல்லாயிரக் கணக்கான  கிராமப்புற மக்களுக்கு, நகர்ப்புறத்தில் இருப்பது போலும் தரமான வாழ்க்கை, கல்வி, வேலை வாய்ப்பு, தரமான குடிநீர், மின்சக்தி ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

இவை இல்லையானால் கிராமப் புறத்தில் தொடர்ந்து வரும் ஏழ்மை, வேலையின்மை, கட்டுமான பற்றாக் குறை ஆகியவற்றினால் நலிவுற்ற கிராமத்து மக்கள் நகர்ப்புறத்தில் குடியேற தொடங்குவர் எனவே நகர்ப்புறத்துக்கு சமமான கிராமப்புற வளர்ச்சியும் பொருளாதாரமும் தரமான வாழ்க்கை நிலையும் அவர் களுக்கு  கிடைக்கப் பெற  வேண்டும்.

இது வரை  வாழ்க்கை தரமும் தொழில் வளமும் நகர்ப்புறத்குக்கு சாதகமாகவே அமைந்துள்ளன. எனவே நகர்ப்புறத்திற்கும் கிராமத் திற்கும் இடையில் காணப்படும் வேறுபாட்டை நீக்குவதில் இன்றைய அறிவியலும்  தொழில்நுட்மும் பெரும் பணியினை செய்யமுடியும். அவை இரண்டும் புதிய கோணத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதைப் பற்றி சில கருத்துகளைக் கூற விழைகிறேன்.

இது வரை ஒரு விதமான  வேறு பட்ட  அணுகுமுறை நகர தேவையை நோக்கியும் தொழிற் கூடங்களை நோக்கியும் இருந்து வருகிறது. இது வரை இல்லாத அளவிற்கு அறிவியல் தொழில் நுட்பம் கிராமத்தையும் நகரத்தையும் சமமாக இணைக்கும் பாலமாக செயல்பட வேண்டும்.

கிராமத்திற்கு  நகர்புற வசதிகளை வழங்குவதற்காக இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்  டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் புரா (PURA) என்ற   புதிய  திட்டத்தினை  கொண்டுவந்தார். அறிவியல் தொழில் நுட்பத்தின் மூலம் போக்குவரத்து, மின்சாரம் , மின்னணுசாதனம், அறிவு, சந்தை, தூய்மையான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தி கிராமங்களை மாற்றி அமைப்பதே இதன் கொள்கையாகும்.

இத்திட்டத் தின் முக்கிய பணி கிராமத்தில் வசிப் பவர்களுக்கு அனைத்துவித உள் கட்டமைப்பு வசதிகளையும் ஏற் படுத்தி தருவதேயாகும். இதன் தொடர்ச்சியாக கிராமங்களின் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற் படுத்தித் தருவதோடு அவர்களின் சொத்தின் இயக்கத்திற்கும், பரா மரிப்புக்கும் முதலீடு செய்வதற்கும் நகரத்தில் உள்ள தகுதியான செயல் பாட்டினை கிராமப்புறத்திற்கும் கொடுத்து செயல்பாட்டு நிலையை மேம்படுத்துவதே ஆகும். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் இப் பகுதியில் ஏற்கெனவே பல்வேறு புரா (PURA)  மாதிரிகளை  உருவாக்கி யுள்ளது. இதுப்போன்ற பல்வேறு கிராமப்புற குறைபாடுகளுக்கு அறிவி யியல் தொழில்நுட்பத்தின் மூலம் சரியான தீர்வுகளைப் பெற முடியும். எப்படி அறிவியல் தொழில் நுட்பம் சரியான நோக்கங்களை அடைய முடியும்?

அறிவியல்  தொழில் நுட்பம் மூலம் கிராமப்புற மக்களுக்கு பயன் பாட்டு தீர்வுகளை தருவதன் வாயி லாக இவ்விதமான நோக்கங்களை அடையமுடியும். நான் உங்களுக்கு னுசுனுடீ உற்பத்திகளில் இருந்து சில எடுத்துக்காட்டுகளை கூறுகிறேன்.

தூய்மையான குடிநீர் வழங்குதல்

தூய்மையான குடிநீர் என்பது கிராமங்களில் உள்ள பிரச் சினையாகும். தூய்மையான குடிநீரை  வழங்குவதன் மூலம் நீரினால் ஏற்படும் நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கலாம். நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீரில் கலந்திருக்கும் நச்சுத்தன்மைகளின்  தூய்மையை கண்டறியும் உபகர ணத்தின் மூலம் சோதனை செய்து நீரின் தன்மையை குடிப்பதற்கு உகந்ததா என்று ஒரு  தகுதியான   ஆய்வு செய்யும் நிபுணரால் குடிப் பதற்கு ஏற்ற நீர் என்று உறுதி செய் யப்பட வேண்டும். இந்த தூய்மை யைக்  கண்டறியும்  உபகரணம்   இயற்பியல் - வேதியல்,   மற்றும்   Bactrological  Parametres போன்ற  சோதனை வசதிகளை உள்ளடக்கி யுள்ளது. 

நம் நாட்டின்  கிழக்குப் பகுதியில் தான்   நீர்   நிறமாற்றம்  மற்றும் சேறு, சகதி,  சேகரித்து  வைத்து வழங்குதல்  ஆகியவற்றினால்   நீர் மாசு அடைந்து காணப்படுகிறது.  

TRL Tezpur  உருவாக்கியுள்ள  சிக் கனமான நீர் சுத்திகரிப்பு  இயந்தி ரத்தைக் கொண்டு  நீரிலுள்ள இரும்புத் தன்மை  நீக்கப்பட்டுள்ளது. இது ஒரு லிட்டர் நீரில் உள்ள  40 மில்லி கிராம் இரும்புக் கலவையை 0.3 மில்லி கிராமாகக் குறைக்கிறது.   இதனைப் பயன்படுத்தி  நாம்  ஒரு மணி நேரத்தில் 300 லிட்டர் அளவு கொண்ட நீரைத் தூய்மைப்படுத்தலாம்.

இந்த அளவின் மூலம் ஒரு  ராணுவக் குடியிருப்பின் தேவையை  பூர்த்தி செய்யலாம்.  ஒரு சாதாரண   மைக்ரோபயல்   நீர் சோதனை  செய்யும் உபகரணம் உரு வாக்கப்பட்டுள்ளது. இவ் உபக ரணத்தைக் கொண்டு  நிலத்தில் உள்ள நீரில் கலந்து இருக்கும் பாக்டீரியாவை  சோதனை செய்யலாம் இந்த உப கரணம் உலகில் உள்ள  ஏழு கண் டங்களிலேயே  சிறந்த உபகரணமாக  உலக சுகாதார அமைப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கழிவு மேலாண்மை

மனிதக் கழிவுகளை மேலாண்மை செய்ய DRDO  ஒரு BIO  DIGESTER ரை உருவாக்கியுள்ளது. இது மெல்லிய தாதுவாலோ - அல்லது மறு சுழற்சிக்கு உட்பட்ட  பைபர் பிளாஸ்டிக்னாலோ செய்யப்பட்ட  உருளைவடிவிலானது.  இதில் மனிதக் கழிவுகளை உள்ளே செலுத்துவதற்கும் அசுத்த மற்றும் Bio Gas ஆகியவற்றினை  வெளியே கொண்டுவருவதற்கும் ஏதுவாக  அமைக்கப்பட்டுள்ளது.

மனிதக் கழிவை   வீரியத் தன்மைக் குறைப்பை Microbial  மறு செயல்பாட்டின் மூலம்   Bio  Gass  ஆக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. பனிப் பிரதேசங்களிலும் குறைந்த வெட்பநிலைபகுதிகளிலும்   மனித கழிவுகளை அகற்றுவதில்  சுற்றுச் சூழலுக்கு இணங்க   இத்தொழில் நுட்பம் செயல்படுகிறது.  இத் தொழில்நுட்பம் விமானங்களிலும் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

DRDO  வால் உருவாக்கப்பட்டுள்ள இந்த Bio -  digester  இந்திய ரயில்வே துறையில் பல்வேறு தொடர் வண்டி களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக  சிறீநகரில் உள்ள  நீர் மாசுவை  நீக்குவதிலும் 12,000 பிரிவுகள் விரைவில் ஏற்படுத்த இருக்கின்றன.

Bio -  digester மூலம் உருவாக்கப் பட்ட எளிதில் தீப்பற்றக் கூடிய   Bio -  Gasயை கொண்டு சமைப்பதற்கும்  அறை மற்றும், நீரை சூடுப்படுத்து வதற்கும் பயன் படுத்தலாம்.

சுகாதாரம்

கிராமப்புரங்களில் சுலபமாக  பரவக்கூடிய     டெங்கு, சிக்கன்குன்யா, பன்றிக்காய்ச்சல், தோல்நோய், டைபாய்டு, பிளேக், மலேரியா மற்றும் மிருகங்களில் இருந்து மனிதருக்கு  பரவக்கூடிய  நோய்களை எளிதில் கண்டறியக் கூடிய உபகரணம் உருவாக்கப்பட்டுள்ளது. டெங்கு மற்றும் சிக்கன்குன்யா போன்ற தொற்றுநோய்களை முழுமையாக  ஒழிக்கக்கூடிய   நோய்க்கொல்லியும் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய பல்வேறு பூச்சிகளை ஒழிக்கக்கூடிய  (DEPA)  ஒரு உபகரணம் உருவாக்கப் பட்டு வணிக மய்யமாகவும் ஆக்கப் பட்டுள்ளது.

DRDO பூச்சிகளை கொல்லுவதற்கு ஒரு  கொசுவலை தயாரித்துள்ளது. இதனை கிராமப் புறங்களில் கொசுவை அகற்றுவதற்கு சிறப்பாக பயன்படுத்தலாம். ஒரு மூலிகை கொசு  ஒழிப்பான்  திறந்த வெளியில்  பயன் படுத்தப்படுகிறது. இவ்வுபகரணத்தை எவ்விதமான மின்சார உதவியும் இல்லாமல்   இயக்கலாம். உலகின் பொருளாதாரம் பெரும்பாலும் மின்சாரத்தை சார்ந்தே  இருக்கிறது. தற்பொழுது நாட்டின் மின்சார பாதுகாப்பு முக்கியமானதாகும். போதிய மின்சாரம் கிடைத்தால் மட்டுமே நம் உலகின் மக்கள் தொகை வளர்ச்சியை ஒரு நிலைபாட்டிற்கு கொண்டுவரலாம்.

வறட்சியான நிலங்களில் பயிரிடக்கூடிய காட்டா மணக்கு (JatrhoÇa  Curcas)களில் இருந்து  Bio  Disel உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை DRDO  உருவாக் கியுள்ளது. மேலும் மற்றொரு தாவர மான (Amelita)   மூலம்  க்ஷடி  னுளைநட  தயா ரிக்கலாம் என்று சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இத்தகைய Bio  Disel-லைக் கொண்டு இராணுவ வாகனங் கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சில தாவரங்கள் விண்வெளியில் உள்ள Co2 உள்ளிழுத்துக் கொண்டு பசுமை வாயுவின் வெளியேற்றத்தை குறைப்பதற்கு உதவுகிறது.  காட்டா மணக்கு பயிருக்கான தொழில்  நுட்பங்கள்  DRDO    மூலம் வழங்கப் படுகின்றன. மேலும் கிராமப்புற மக்கள் இத்தொழில்  நுட்பத்தை சுலபமாக பயன்படுத்த முடியும் இத்தொழில்  நுட்பம் அவர்களை வசதியானவர்களாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதற்கும் உதவுகிறது.   பயன் பாடற்ற  ஒரு மில்லியன் ஹெக்டேர் நிலத்தில் காட்டாமணக்கு பயிரிடு வதன் மூலம் 1.2 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பு  உருவாக்கப்படுகிறது.

தகவல் தொழில் நுட்பம்
நகரத்தின் சொத்தாக மட்டுமே அமைந்துவிடக் கூடாது இத்தொழில் நுட்பம் கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் கிராமப்புற மக்களும்   இத்தொழில்நுட்பத்தின் மூலம்   புதிய தொழில் நுட்பங்களை யும் தெரிந்துகொள்ளவேண்டி உள்ளது. தட்ப வெட்ப நிலை, கால வேறுபாடு,  இயற்கை பேரழிவு ஆகிய வற்றின் தகவல்களை கிராமப் புறத்தினர் கைப்பேசிகளின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.

DRDO ஒரு  பாதுகாப்பு மருந்து முறையை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் தலை சிறந்த மருத்துவ மய்யங் களை தொடர்பு கொள்ளவும் முதன்மை சுகாதார மய்யங்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கவும் இம்முறை பயன்படுகிறது.     இந்த தொலை மருத்துவ அமைப்பு  தலை சிறந்த மருத்துவர்களின் ஆலோ சனைகளை  கிராமப்புற மருத்து வர்களுக்கு வழங்க உதவுகிறது.

திறன் வளர்ச்சி

கிராமப்புறங்களில் சீரான வளர்ச் சிக்கான  தொழில்கல்விகளை வழங் குவதில் கல்வி நிறுவனங்களின் பங்கு நம் நாட்டில்  கல்விநிறுவனங்கள் கிராமங்களை தத்து எடுக்க வேண்டும். பேராசிரியர்கள் அல்லது மாணவர்கள் வார  இறுதி நாட்களில் கிராமத்திற்குச் சென்று  தொழில் நுட்பத்திறனுக்கான  பயிற்சியினை வழங்க வேண்டும்.  இம்முறையின் மூலம் கிராமங்களில் உள்ள வறுமையினை ஒழிக்கலாம். இதற்கு தேவை படும் நிதியினை  மத்திய அரசு அல்லது மாநில அரசு  கல்வி நிறுவனங்களுக்கு வழங்கலாம்.   மேலும் பன்முகத் திறனாளிகளை  கிராமங்களிடையே உருவாக்கி அன்றாடம் ஏற்படக்கூடிய வேளாண் சம்பந்தபட்ட சிக்கல்களை தீர்க்கலாம்.

கிராம மக்களிடையே சுற்றுப்புற  சூழலுக்கான விழிப்புணர்வை உருவாக்குதல்:

கிராம மக்களே இயற்கைப் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்க முடியும் மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களை பயிரிட்டு  வேலை வாய்ப்பினை இருக்கும் இடத் திலேயே உருவாக்கலாம்.    கிராமங் களைச் சார்ந்த பல்கலைக்ககங்கள் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் திட்டங்களுக்கு நிதியுதவி செய்து கிராமங்களை வளர்ச்சி அடைய செய்யலாம். 

லடாக் பகுதி வளர்ச்சியில் DRDO-இன் பங்கு

லே என்ற பகுதியில் உள்ள   DRDO   மய்யம்  வேளாண்மை  விலங்குகளின்  தொழில் நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய பங்கு ஆற்றுகிறது.  இத்தொழில் நுட்பம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

எடுத்துக்காட்டாக  முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்பு ஒரு சில காய்கறியே கிடைத்தன. அப்பகுதியில் இன்று பவ்வேறு வகையான காய்கறிகள் கிடைக்க   DRDO -வின் பங்களிப்பு முக்கியமானதாகும். புதிய தொழில் நுட்பங்கள் கண்டுபிடிப்பு களினால் இவ்விதமான  வளர்ச்சி  சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ    அய்யாயிரம் மெட்ரிக் டன் காய்கறிகள் உற்பத்தி செய்யப்பட்டு லடாக் பகுதி யில் பொருளாதர வளர்ச்சி மேம் படுத்தப்பட்டுள்ளது.   மாமிச தேவையை நிவர்த்தி செய்ய  உயர் இனக்கலப்பு முறையில் அதிக எடை கொண்ட    ஆடுகளை  உருவாக்கி மாமிசத் தேவை பூர்த்தி செய்யப் படுகிறது. தற்பொழுது கோழி வளர்ச்சிக்கு புதிய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு அதிக எண் ணிக்கையிலான கோழிகளையும், முட்டைகளையும் உருவாக்குகின்றனர்.   லடாக் பகுதியின் தேவைகள்   25ரூ பால் மற்றும் 15ரூ மாமிசம் ஆகியவற் றினால் னுசுனுடீ தொழில்நுட்பத்தின் மூலம் பூர்த்திசெய்யப்படுகிறது.

முடிவுரை

வளர்ச்சியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறிக்கொண்டிருக் கிறது . அறிவியல் சார்ந்த பொரு ளாதாரத்தின் தேவை அதிகரித் துள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகள்   புதிய தொழில் நுட்ப வளர்ச்சியிலும் உற்பத்தியிலும் முக்கிய பங்கு ஆற்றிக் கொண்டு இருக்கின்றன.   கோல்டுமான் சாஸின்  கணிப்பு யாதெனில் இந்தியா எதையும் சரியாக பெற்றால்  உலகின் தலைசிறந்த பொருளாதார நாடு களான    சைனா மற்றும் அமெரிக்கா இவற்றிற்கு அடுத்தபடியாக 2050  இல் மூன்றாம் இடத்தைப் பெறும்.

இந் நிலையை அடைய  அறிவியல் தொழில்நுட்பத்தை   கிராமப்புற வளர்ச்சியை நோக்கி  பயன்படுத்த வேண்டும் என்று பட்டம் பெறும் மாணவ மாணவிகளுக்கும், பேராசிரி யர்களுக்கும், குடும்ப உறுப்பினர் களுக்கும்   எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் . இன்று பட்டம் பெற்றுள்ள உங்களில்  பலர் முக்கிய பங்காற்றி இந்தியாவை உலகின் தலைசிறந்த நாடுகளில் ஒன்றாக கொண்டுவருவீர்கள் என்று நம்பு கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழச்சியில் பதிவாளர் அய் யாவு டாக்டர் பிறைநுதல்செல்வி, முனைவர் டாக்டர் நாகநாதன், வீ. அன்புராஜ் உள்ளிட்ட ஏராளமான னோர் பங்கேற்றனர்.


டாக்டர் எம். நாகநாதன், முன்னாள் தலைவர் தமிழ்நாடு அரசு திட்டக்குழு, டாக்டர் வீகேயென். கண்ணப்பன், இணைவேந்தர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்,டாக்டர். வி.செல்வமூர்த்தி அவர்கள் தலைசிறந்த விஞ்ஞானி மற்றும் முதன்மை கட்டுப்பாட்டு அலுவலர் (ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை) பாதுகாப்பு அமைச்சகம் (DRDO), இந்திய அரசு. வணக்கத்திற்குரிய வேந்தர் டாக்டர்.கி.வீரமணி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், டாக்டர் நல்.இராமச்சந்திரன், துணைவேந்தர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பேராசிரியர் சி.வி.சுப்பிரமணியன், இயக்குநர், மாணவர் நலப்பிரிவு, டாக்டர் மு.அய்யாவு, பதிவாளர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், மானமிகு வி.அன்புராஜ், ஆட்சிக்குழு உறுப்பினர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், ஆர்.கந்தசாமி, முதன்மையர், கட்டட எழிற்கலை பொறியியல் தொழில்நுட்ப ஆய்வுப்பள்ளி, பேராசிரியர். எஸ்.செயக்குமார், முதன்மையர், கணினி அறிவியல், பொறியியல் ஆய்வுப்பள்ளி, பேராசிரியர். ஜி. திருச்செல்வி, உதவி முதன்மையர், கணினி அறிவியல், பொறியியல் ஆய்வுப்பள்ளி , பேராசிரியர். அறம்வளத்தான், உதவி முதன்மையர், வாழ்வியல் அறிவியல் மேலாண்மைப்பள்ளி, மருத்துவர். பிறைநுதல்செல்வி, ஆட்சிக்குழு உறுப்பினர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பேராசிரியர். டி.இராசசேகரன், இயக்குநர்,  ஆன்லைன், திறந்தநிலை தொலைக்கல்வி மய்யம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் ஆகியோர் உள்ளனர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களின் குழு படம். (தஞ்சை 21-9-2011)

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...