Tuesday, September 27, 2011

கட்சிகள்-கடவுள்களின்-சக்தி-மகாசக்தி இதோ


கட்சிகள்-கடவுள்களின்-சக்தி-மகாசக்தி இதோ

தமிழ்நாட்டு உள்ளாட்சித் தேர்தலில் ஒரு நல்ல திருப்பம் சிறப்பான ஒரு நிலைப்பாட்டினை பல அரசியல் கட்சிகள் எடுத்துள்ளன!
முக்கிய பிரதான பெரிய அரசியல் கட்சிகள் தி.மு.க-அ.தி.மு.க. இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன.
காங்கிரஸ் கட்சி சுமார் அரை நூற்றாண்டுக்குப் பிறகு-தனித்து நிற்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி யுள்ளது.
நேற்று பெய்த அரசியல் மழையில் இன்று முளைத்த காளான் கட்சிகள் கூட எங்காவது ஒட்டிக்கொண்டு எவர்தோளி லாவது ஏறி உட்கார்ந்துகொண்டு-குருவியால்தான் ரயிலே ஓடியது-என்று கூறும் வேடிக்கைபோல, தாங்களால் தான் பெரிய கட்சிகள்  வெற்றி பெற்றன என்று முண்டா தட்டுவது உண்டு!
இதற்கெல்லாம் தி.மு.க. அ.தி.மு.க. முற்றுப்புள்ளி வைத்து, உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப்பின் யார் யாருக்கு எவ்வளவு பலம், எவரது உயரம் எவ்வளவு என்று அளந்துவிடும் வகையில், தனித்தே நின்று உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக் கின்றன. பெரிதும் வரவேற்கத்தக்க முடிவே இது.
இத் தேர்தல் முடிவுக்குப்பின் சில கட்சிகள் காணாமற் போய்விடும்; அல்லது சு.சாமி கட்சியே மாதிரி ஒரு நபர் கட்சியாகி தனிமரத்தோப்பு (?) ஆக நின்று விடக்கூடும்.
*  *    *   * *   *
சென்ற 100 நாள்களுக்கு முன் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பேரூ ருவான கூட்டணி டமீல், டுமீல் என்று வேட்டுச் சத்தத்துடன் உடையாமல், வோட்டுக்கண்ணோட்டத்தோடு உடைந்து விட்டது.
சி.பி.அய். என்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுதான் இன்றுவரை போயஸ் தோட்டத்துக் கதவு திறப்பதற்காக தவமாய் தவம் இருக்கிறது.
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டோ, மதியார் தலைவாசல் மிதியாமை இனி கோடி பெறும் என்று அவர்கள் தே.மு.தி.க.வுடன் கூட்டணிப் பேச்சு நடத்தி வருகின்றனர்.
வி.சி. தம்பிக்காக உருகு உருகுவென உருகிய மருத்துவரின் கட்சியும் அவரை வேறு விதத்தில் மட்டும் நாம் நட்பாக இருக்கலாம்; இப்போது மட்டுமே டூ விட்டுக்கொள்வோம் என்று கூறி ஒதுக்கி விட்டு, நாடு தழுவிய அளவில் எட்டுத்திசைகளில் வேட்பாளர்களைப் போட்டு வெற்றிப் பதாகையை(?) சுமக்கிறது. திராவிடக் கட்சிகளோடு இனி எக்காலத்திலும் கூட்டு இல்லை என்று கூறி குழம்பு சோறுடன் சாப்பிட்டு மகிழ்கிறது.
எல்லாம் உள்ளாட்சித் தேர்தல் முடிவு தெரிந்தவுடன்-கூட்டணி-உடன்பாடு-விவகாரம் முடிந்துவிடும்.
ஆரோக்கிய அரசியல் தமிழ்நாட்டில் இனிமேலாவது உருவாக வேண்டும்.
அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பதுதான் நம் நாட்டிலேயே சுலபமான, முதல் தேவைப்படாத எளிய வழி. இரண்டொரு சினிமாப் படங்களில் நடித்து விளம்பரம் பெற்றால், பதவி அரிப்பு காரணமாக சொறிந்து கொள்ள ஆசைப்படும் புதிய கோடீசுவரர்கள், இந்த சினிமா கட்சியை நோக்கி வந்து தட்சணை வைப்பார்கள். எந்தக்கட்சியும் ஏற்காத-ஏற்க பயப்படும் சிலருக்கும் அங்கே அளந்தே அடைக் கலம் கிடைக்கும்!
பலே பலே நல்ல மூவ்தான்-மற்ற எந்த டீக்கடை பெட்டிக்கடை, வெற்றிலை பாக்குக் கடைதுவங்கக்கூட, முன் தேவை, லைசென்ஸ், அப்படி இப்படி தேவை.
ஆனால் இப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்க எதுவும் தேவைப்படாது-மூளை உட்பட!
*      * * * *
அய்யப்பப் பக்தர்களின் பாதுகாப்பு பரிந்துரைகளை அமுலாக்க கேரள அரசு முடிவு
-இப்படி தலைப்புகளோடு ஒரு தமிழ்நளேட்டில் இன்று ஒரு செய்தி!
கேரள உம்மன் சாண்டி தலைமையில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசு, சபரிமலை அய்யப்ப பக்தர்களின் பாது காப்பு குறித்த இடைக்கால பரிந்து ரைகளை அமுலாக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.
இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி புல்லு மேடு பகுதியில் ஒரு ஜீப் பக்தர்கள் மீது மோதியதால் ஏற்பட்ட குழப்பத் தாலும் நெரிசலாலும் 102 பேர் இறந் தனர்-பழைய கும்பகோணம் மகாமகக் குளத்தில் பக்தர்கள் பலரும் இறந்து போனது போல- (சங்கரராமன் கொலை வழக்கில் பிறழ் சாட்சியர்களையே பெரிதும் நம்பியுள்ள பெயிலில் வந்து செயிலுக்கு மீண்டும் செல்லாமல் இருந்து எதை எதையோ செய்யும்-காஞ்சி நடமாடும் தெய்வமும் அந்நாள், இந்நாள் முதல்அமைச்சரும் அவரது சகோதரியும் குளிக்கச் சென்ற போது சூத்திரச்சி குளித்ததால்தான் இப்படி என்றும் கூறியதும் நினைவில் நிற்கிறது) நடந்து நீதிபதி விசாரணை 30 பரிந்துரைகளை எடுத்தது.
சபரிமலை அய்யன் புலிமேலே சவாரி செய்தவன்; அவன் பக்தர்களுக்குப் பாதுகாப்பு அவனல்லவோ தர வேண் டும்? அரசா தருவது- அசல் நாஸ்திகம் அல்லவா அது-ராமசாமி நாயக்கர்- வைக்கத்தில் (பெரியாரை அப்படித் தான் கேரளத்து நண்பர்கள் அழைப்பார்கள்). சொன்னது கடவுளை மற, மனிதனை நினை என்று ஆகிவிட்டதே, அபச்சாரம், அபச்சாரம்!
ஹரிஹர புத்திரன்-அய்யப்பன் தர வேண்டிய பாதுகாப்பு கேவலம் மனி தர்கள்-அதிலும் இழிவே. உம்மன் சாண்டி இப்ராகிம் குஞ்சு போன்றோர் தலைமையில் உரிய அரசு தரலாமோ?
என்ன செய்வது? நாளுக்கு நான் நாஸ்திகம் பெருகுகிறது, இல்லையா னால் பத்மநாப சுவாமி கோயில் கொள்ளைக்காரர்களை முன்னாள் கேரள முதல்அமைச்சர் இந்நாள் எதிர்க் கட்சித்தலைவர் அச்சுதானந்தனே வெளி யிடுவாரா? ஹீகும். என் செய்வது கலிமுத்திப்போச்சு!
*  * * * *
அரசியல் தரகர் சு.சாமிக்கும் சரியான பாதுகாப்பு இல்லையாம்! காங்கிரஸ் அல்கொய்தா அச்சுறுத்தல் உள்ளதாம். இதனால் டில்லியில் ஒரு (ஞடிளா) பாஷ்-பல அடுக்கு மாடி உள்ள வீடு தேவை யாம். ஹக்ஷ டைப் வீடு வேணுமாம்! மத்திய அரசு தரவும் கூடும்.
அறம், பொருள், இன்பம், வீடு என்பதில் உள்ள வீடு அடையாமலிருக்க இவர் வீடு தேவை என்கிறார். அவர் அடிக்கடி செல்லும் ஹார்வேடு அல்லது சீனா சென்று அங்கிருந்தே கூட இனி அரசியல் நடத்தினால் அதிசயம் இல்லை; மீடியா பூணூல்கள் அப்போதும் அபார விளம்பரத்தை அய்யர்வாளுக்கு அளிக்கத் தவறவே தவறாது. காரணம் மனுவின் மைந்தர் அல்லவா அவர்.

1 comment:

aotspr said...

உங்கள் பதிவுக்கு நன்றி....
தொடர்ந்து எழுதுங்கள்..

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...