Tuesday, September 27, 2011

விருகம்பாக்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., விஷமிகளின் கைவரிசை


சென்னை- விருகம்பாக்கத்தில் கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற - தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் (தமிழர் தலைவர் கி. வீரமணி அவர் களும் பங்கேற்ற நிகழ்ச்சி) ஆர்.எஸ். எஸ்., இந்து முன்னணி காலிகள் கோழைத்தனமாக மேடையை நோக்கி கல்லெறிந்தது - 50-க்கு மேற்பட்ட டியூப்லைட்டுகளை உடைத்துவிட்டு ஓடியது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் நேரில் புகார் கொடுத்துள்ளார் (26.9.2011).
காவல்துறை அதிகாரிகளின் எதிரி லேயே டியூப்லைட்டுகளை  விஷமிகள் அடித்து நொறுக்கியதைப் பார்த் திருந்தும், பொதுச் சொத்துகள் நாசப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் எந்தப் பிரிவின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்தும், வன்முறையில் ஈடுபட்டவர்கள், பாதிக் கப்பட்ட திராவிடர் கழகத் தோழர்கள் இரு தரப்பினர்மீதும் ஒரே வகையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறது காவல் துறை. அதாவது அடித்த வனும், அடிபட்டவனும் ஒன்று என்ற பார்வை காவல்துறைக்கு எப்படி வந்தது என்று தெரிய வில்லை.
இந்த இரண்டு நிலை குறித்தும் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் நேற்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் சிலைக்கு துளசி மாலை
சென்னை அண்ணாசாலை  - சிம்சன்  அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்குக் காலிகள் - விஷமிகள் 25ஆம் தேதி இரவோடு இரவாக துளசி மாலையைப் போட்டு விட்டு ஓடியுள்ளனர். இதுகுறித்தும் மாநகரக் காவல்துறை ஆணையரிடம் நேற்று புகார் கொடுக்கப்பட்டது.
விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை ஆணையர் திரிபாதி அய்.பி.எஸ். அவர்கள் கூறினார். கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றனும், வழக்குரைஞர் த. வீரசேகரனும்  சென்றிருந்தனர்.

1 comment:

aotspr said...

மிக கடுமையான சட்டங்கள் இயற்றி உடனுக்குடன் தண்டனை தந்தாலொழிய மக்கள் திருந்த மாட்டார்கள்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...