Saturday, September 24, 2011

சிங்கப்பூரில் சிறப்பான பெரியார் பிறந்த நாள் விழா

சிங்கப்பூரில் சிறப்பான பெரியார் பிறந்த நாள் விழா பெரியார் பொன்மொழிப்போட்டி - புரட்சிக்கவிஞர் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிகள் 30 கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு


- நமது சிறப்பு செய்தியாளர்: க.பூபாலன், சிங்கப்பூர்
சிங்கப்பூர், செப். 24- சிங்கப்பூரில் செப். 17 அன்று தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மாணவர்களுக்கிடையே போட்டிகள் நடத்திச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

செப். 17 சனிக்கிழமை மாலை சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் உள்ள Apollo Banana Leaf Hotel -இல் தந்தை பெரியாரின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றத்தின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்ச்சி தொடக்கத்தில் வந்திருந்த அனை வருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்விக்கப்பட்டது.

தமிழகத்திலிருந்து சிங்கப்பூர் வருகைதந்துள்ள பட்டுக்கோட்டை மாவட்ட தி.க. தலைவர் மானமிகு மன்னார்குடி ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், அவர்களின் துணைவியார், மகள்கள் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் அவர்களின் மருமகன் சரவணன் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் மன்னார்குடி சித்தார்த் தன் அவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள் மலையரசி, குந்தவி, மாறன் - கவிதா, இனியநிலா, ராஜராஜன் - தமிழரசி, வானதி, வளவன், பூபாலன் - பானு, எம்.இலியாஸ், பழனி, அத்தி வெட்டி ஜோதி, செந்துரை மதியழகன், அழகேசன், மற்றும் ஜெகன் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்குகொண்டவர்கள் திருச்சியில் உள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு இந்திய ரூபாய் 10,175 மதிப்புடைய சிங்கப்பூர் வெள்ளியை நன்கொடை அளித்து மகிழ்வுற்றார்கள்.

நிகழ்ச்சியில் பங்குகொண்ட அனைவருக்கும் விருந்தோம்பல் செய்து நிகழ்ச்சி இனிதே நிறை வுற்றது.

ஒப்புவித்தல் போட்டிகள்

பெரியார் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் மொழிப் போட்டிகள் 2011 புக்கிட் வியூ உயர் நிலைப் பள்ளியில் இம்மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற்றது. சிங்கப்பூர் தொடக்க நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பெரியார் பொன்மொழிகள் வாசிப்புப் போட்டி, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல்கள் ஒப்பு வித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

இப்போட்டியில் சுமார் 30 பள்ளிகளிலிருந்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண் டனர். நிகழ்ச்சி காலை சிற்றுண்டியுடன் தொடங் கியது. போட்டிகளில் பங்கேற்பதற்காக தொடக்க நிலை 4, 5ஆம் வகுப்பு, உயர்நிலை 1, 2ஆம் வகுப்பு மாணவர்கள்  தங்களின் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள்.

போட்டி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி வகுப்பு அறைகளில் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுக்கும் இண்டு ஆசிரியர்கள் என மொத்தம் ஆறு ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு போட்டியை வழி நடத்தினார்கள்.

பெரியாரின் பொன்மொழிகளை மாணவர்கள் வாசித்து ஒரு பொன்மொழியினை விளக்கிக்கூறும் போது மாணவர்களின் அறிவுக் கூர்மையும், தெளிவான சிந்தனையும் நடுவர்களையும், பார்வை யாளர்களையும் பெரிதும் கவர்ந்தது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோரின் பாடல்களைப் பாடும் போது மாணவர்களின் தெளிவான தமிழ் உச்சரிப்பும், குரலும் இனிமையாக இருந்தன.
பார்வையாளர்களின் ஒரு பகுதி (உள்படம்) சான்றிதழ் பெற்ற மாணவர்கள்
போட்டி முடிந்த பின் மாணவர்களுக்கும், பெற் றோர்களுக்கும் மதிய சிற்றுண்டி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடுவர்கள் வெற்றியாளர்களை அறிவித்தார்கள். மூன்று பிரிவுகளையும் சேர்த்து மொத்தம் 15 வெற்றியாளர்கள், 15 ஊக்கப்பரிசா ளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். போட்டிகளின் முடிவு உடனடியாக அறிவித்ததைக் கண்டு மாண வர்களும், பெற்றோர்களும் மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டார்கள்.

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி பெற்றோர் உதவிக் குழுத் தலைவர் ஜேம்ஸ் தாஸ் போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர் களையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் சமூக சேவை மன்றத்தின் தலைவர் வீ.கலைச்செல்வம் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் நிறைவாக சிங்கப்பூர் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர் மு.தங்கராசு அவர்கள் மாணவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்தி உரையாற்றினார்.

வெற்றிபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்கள் நவம்பர் மாதம் நடைபெற வுள்ள பெரியார் கண்ட வாழ்வியல் விழாவில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாணவர்களும், பெற்றோர்களும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் ஆண்டுதோறும் இதுபோன்று போட்டிகள் நடத்தவேண்டுமென்று கேட்டுக்கொண்டு விடைபெற்றார்கள்.

நிகழ்ச்சியில் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள், புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்ற உறுப்பினர்கள், புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...