Thursday, September 15, 2011

அண்ணா கொடியில் இல்லை; கொள்கையில் இருக்கிறார்!

அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தார் அண்ணா கொடியில் இல்லை; கொள்கையில் இருக்கிறார்! தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, செப்.15- அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி தோழர்கள் புடை சூழ இன்று காலை 10.45 மணிக்கு மாலை அணிவித்தார்.

இன்று (செப்.15) அண்ணா அவர்களது 103ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையின் கீழ் உள்ள அண்ணா படத்திற்கு இன்று காலை 10.45 மணிக்கு திராவிடர் கழக தோழர்கள், தோழியர்கள் புடைசூழ திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

விண்ணதிர ஒலி முழக்கம்

அப்பொழுது தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா வாழ்க! மக்களின் உள்ளம் கவர்ந்த அண்ணா வாழ்க! என்ற ஒலி முழக்கங்களை தோழர்கள் விண்ணதிர முழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், க. பார்வதி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், க. திருமகள், கு. தங்கமணி, வெற்றிச்செல்வி, இரா. வில்வநாதன், எம்.பி. பாலு கொடுங் கையூர் தங்கமணி, கி. இராமலிங்கம், தனலட்சுமி  கோ. அரங்கநாதன், ராயபுரம் நாகேந்திரன், து. மீனாட்சி, மணியம்மை பா. சிவக்குமார், வே. சிறீதர், செந்தில், பாரதிதாசன், சுரேசு, பிரபு, சங்கர் மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.

அண்ணா இருக்கும் இடம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா அவர்களது 103ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி அண்ணா சிலையின் கீழ் உள்ள அண்ணா படத்திற்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்  மாலை அணிவித்த பின் செய்தி யாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்பொழுது கூறியதாவது:

பெரியார் வழியே அண்ணா வழி


இன்று அறிஞர் அண்ணா அவர்களது 103ஆம் ஆண்டு பிறந்த நாளாகும். தந்தை பெரியார் அவர்களது கொள்கை வழி நின்று வெற்றி பல கண்டவர் அண்ணா. தாம் பெற்ற வெற்றியை தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கையாக்கியவர் அண்ணா.

பண்பாட்டுப் படை எடுப்பைத் தடுத்தவர்

அண்ணா அவர்கள் எந்த பண்பாட்டுப் படைஎடுப்பை முறியடிக்க வேண்டும் என்று சொன்னாரோ அந்த பண்பாட்டுப் படை எடுப்பை முறியடிப்பதுதான் நமது நோக்கம்.

தை முதல் நாளே தமிழர்களுக்குப் புத்தாண்டு! அதன்படி தை முதல் நாள் தான் தமிழர் களுக்குப் புத்தாண்டு என்பதை  நிச்சயம் வெற்றி பெறச் செய்வோம்! அண்ணா கொடியில் இல்லை;  கொள்கையில் இருக் கிறார். அதுதான் அண்ணா அவர்களுக்கு நாம் செலுத்துகின்ற மரியாதை. - இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி கூறினார்.

 

 

 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...