Sunday, September 18, 2011

சென்னை பெரியார் திடலில் அய்யா சிலை மற்றும் நினைவிடத்தில் கழக குடும்பத்தினர் பல்வேறு அமைப்பினர் மரியாதை


சென்னை, செப்.17- அறிவுலக ஆசான் தலைவர்-தந்தை பெரியார் அவர் களின் 133ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கும், நினை விடத்திலும் மாலை மலர்வளையம்வைத்து மரி யாதை செலுத்தப்பட்டது.
இன்று (செப்.17) தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் ஆகும். சென்னை பெரியார் திடல் கழகக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்டி ருந்தது. தந்தை பெரியார் உரை, பெரியார், தமிழர் தலைவர் மற்றும் இயக்கப் பாடல்கள் காலை 8 மணி முதல் ஒலிபரப்பப்பட்டன.
அய்யா பிறந்தநாளையொட்டி சென்னை பெரியார் திடலுக்கு கழகக் தோழர்கள் தோழியர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர்.
பெரியார் மருத்துவமனை மருத்துவ முகாம்
காலை 8மணி முதலே சென்னை பெரியார், மணியம்மை மருத்துவமனையில் கண், பல் மற்றும் நீரிழிவுகளுக்கான மருத்துவ பரிசோதனை மிகச் சிறந்த நிபுணர்களால் நடத்தப்பட்டு வருகிறது. ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.
சென்னை பெரியார் திடலில் இருந்து தோழர்கள், தோழியர்கள் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் அணிவகுத்து புறப்பட்டனர். பெரியார் திடலில் இருந்து ஊர் வலமாக புறப்பட்டு அன்னை மணியம்மையார் சிலைக்கு மாலை அணிவித்தனர். அப்பொழுது அன்னை மணியம்மைர் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க என்ற ஒலி முழக்கங்களை பா.தென்னரசு, கோ.வீர.ராகவன் ஆகியோர் முழங்கினர். அதைத் தோழர்கள் பின்பற்றி முழங்கினர்.
அய்யாசிலைக்கு மாலை
பின்னர் அங்கிருந்து வந்து சென்னை பெரியார் திடலில் உள்ள அய்யா சிலைக்கும் மாலை அணி விக்கப்பட்டது. அடுத்து தோழர்கள் தோழியர்கள் அய்யா நினைவிடத்திற்கு வந்தனர். அங்கு கழகத்தின் சார்பிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் சார்பிலும் அய்யா நினைவிடத்தில் மலர் வளையம்வைத்துமரியாதை செலுத்தினர். பெரியார்
நினைவிடத்தில் மரியாதை
கழகத்தின் சார்பில் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக மகளிரணி சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பின் க.பார்வதி, கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, கழக மகளிர் பாசறை டெய்சி மணியம்மை, ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம், க.திருமகள், கு.தங்கமணி, பரமேஸ்வரி, சுயமரியாதை திருமணம் நிலையம் சார்பில் பசும்பொன், து.மீனாட்சி, தோழியர்கள் மலர் வளையம் வைத்தனர்.
திராவிடன் நலநிதி சார்பில் டி.கே.நடராஜன், அதன் நிருவாகி, டி.அருள்செல்வன், வெங்கடேசன், அன்புச்செல்வன், முருகன் ஆகியோர் விப்ஜியார் நிறுவனத்தின் சார்பில் பி.சீத்தாராமன், பெரியார் ஆங்கில பயிலக இயக்குநர் மு.நீ.சிவராசன், அசோக் லோண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பெ.செல்வராஜ் உமா, பெரியார் மணியம்மை மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மீனாம்பாள், குசலகுமாரி, எஸ்.ஜி.சுப்பிரமணியம்,  பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன், அவரது வாழ்விணையர் பரமேஸ்வரி, பொதுச்செயலாளர் சத்திய நாராயணன், மனோ கரன், த.சுப்பிரமணியம், கழக வழக்குரைஞர் அணி சார்பில் தலைவர் மதுரைகி.மகேந்திரன், பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தென்றல், உயர்நீதிமன்ற பிரபல வழக்குரைஞர் த.வீரசேகரன் மற்றும் பலர் பல்வேறு நிறுவனத்தினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
அடுத்து அன்னை மணியம்மையார் நினை விடத்திலும், சுயமரியாதைச் சுடரொளிகள் நினை விடத்திலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏராளமான தோழர்கள் தோழி யர்கள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியினைத் தெரிவித்துக்கொண்டனர்.
பெரியார் திடல் அய்.ஓ.பி.
சென்னை பெரியார் திடலில் இயங்கும் வேப்பேரி கிளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் அதன் மேலாளர் என்.சாமுவேல், எட்வின், எம்.சாலமன் எட்வின், எம்.சாலமன் வசந்தகுமார், ஜே.சுரேஷ், பாபுஜி, என்.சத்தியநாராயணன் ஆகியோர் பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
ஈரோடு மாவட்ட செயலாளர் நற்குணன், செய்யாறு வேல் சோமசுந்தரம், வடமணப்பாக்கம் வெங்கட்ராமன், அவரது வாழ்விணையர் பேராசி ரியர் மு.தமிழ்மொழி, மறைமலை இலக்குவனார் மற்றும் அவரது துணைவியார், தமிழச்சி தங்க. பாண்டியன், தி.மு.க. எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன், கழக கலைத்துரை அமைப்பாளர் மு.அ. கிரிதரன், கவிஞானி மறைமலையான், மு.தருமராசன், சுகுமார், க.சரவணன், டாக்டர் சுமதி சுரேந்திரன், குரோம்பேட்டை அருணாச்சலம், வழக்குரைஞர் ஜெ.துரைசாமி
வடசென்னை மாவட்ட தோழர்கள்
வடசென்னை மாவட்டத்தின் பகுதிகள் அனைத்திலும் தந்தை பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா மிகச்சிறப்பான அளவில் நடை பெற்றது.
செம்பியம்
காலை 7.15 மணியளவில் செம்பியம் பேப்பர் மில் சாலையில் 273 சார்பிலும், பாவேந்தர் பகுத்தறிவு பாசறை சார்பிலும் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தி.க. செயலாளர் கி.இராமலிங்கம், அமைப்ளர் பா.கோபால கிருஷ்ணன், ஓவியர் கிருபா, ஏ.கருணாநிதி, பூபாலன், நாதன், உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
9.30 மணியளவில் வியாசர்பாடி திராவிடர் கழகத்தின் சார்பில் அய்யா மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் ஏ.தணிகாசலம் தலைமையில் நடைபெற்றது. ஜி.இராமலிங்கம் கழகக்கொடியேற்றி வைத்தார். பொதுமக்களுக்கு இனிப்பு, கேசரி, தேநீர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் து.தியாகராசன், க.நெடுஞ்செழியன், த.அமுதவள்ளி, த.மரகதமணி, பா.மணியம்மை, சித்ரா, பார்த்திபன், உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். பட்டாசுகள் வெடிக்கப்பட்டு அய்யா விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
அடுத்து காலை 8மணியளவில் கொடுங்கை யூரில் அமைந்த அய்யா அவர்களது சிலைக்கு கி.இராமலிங்கம், கோ.தங்கமணி, தே.சே. கோபால், தனலட்சுமி தங்கமணி, கொடுங்கை இராசு ஆகியோர் மாலை அணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் 1ஆவது வட்ட தி.மு.க. செயலாளர் ஆர்.துரைசாமி, சி.வாசு, வி.பிர பாகரன், கு.வீரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண் டனர். அய்யா பற்றிய பாடல்களும், பேச்சுகளும் ஒலிபரப்பப்பட்டன. இனிப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அடுத்து கோ.தங்கமணி, தனலட்சுமி இல்லத் தில் கழகத் கொடியேற்று விழாநடைபெற்றது. கி.இராமலிங்கம் கழகக் கொடியேற்றி வைத்தார். அனைவருக்கும் கேக் இனிப்பு வழங்கப்பட்டது.
முத்தமிழ் நகர் கடைத்தெருவில் வி.பிர பாகரன், தலைமையில் கழகக் கொடியேற்றி வைக்கப்பட்டது. அனைத்து கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். அய்யா படம், பொன் மொழிகள், பொதித்த கட்அவுட்கள் வைக்கப் பட்டன.
எண்ணூர் எண்ணூர் பகுதியில் காலை 8மணியளவில் மாவட்ட திக.. துணை செயலாளர் வெ.மு. மோகன் தலைமையில் கழகக் கொடிகள் ஏற்றப்பட்டன. கழகத் தோழர்களும், ஏராள மாகக் குழுமி அய்யா படத்திற்கு மாலை அளித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பித்தனர்.
திருவொற்றியூர் அய்யா சிலைக்கு, காலை 8.30 மணியளவில் மாவட்ட கழக தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன், திருவெற்றியூர் பெ.செல்வராசு, ந.இராசேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.
துரை.இராவணன், மு.மணிகாளியப்பன், ஒளிவண்ணன், மனோகரன், உள்ளிட்ட கழகத் தோழர்களும், பொதுமக்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அய்யா  கட்அவுட்களும், பேனர்களும் சிறப்பான அளவில் வைக்கப்பட்டி ருந்தன.
புதுவண்ணை கழகக் கட்டடம், பெரியார் மாளிகையில் உள்ள அய்யா சிலைக்கு காலை 9.30 மணிக்கு மாவட்ட தி.க. தலைவர் தி.வே.சு. திருவள்ளுவன் மாலையணிவித்தார். மாவட்ட தி.க. துணைச் செயலாளர் வெ.மு.மோகன், திருவொற்றி யூர் பெ.செல்வராசு, இராயபுரம் நாகேந்திரன் முன்னிலை வகித்தனர்.
புதுவண்ணை செல்வன், அ.அம்பேத்கர், ஆர்.செல்வம் மற்றும் கழகத் தோழர்கள் இனிப்பு வழங்கி அய்யா விழாவை சிறப்பாகக் கொண் டாடினர். காலை 10 மணியளவில் சிம்சன் எதிரில் அமைந்த அய்யா சிலைக்கு  வடசென்னை மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக தலைவர் தி.வே.சு.திருவள்ளுவன், முன்னாள் செயலாளர் பெ.செல்வராசு ஆகியோர் அணிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தி.க. செயலாளர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் பி.கோபால கிருட்டிணன், கொடுங்கையூர் கோ.தங்கமணி, தனலட்சுமி தங்கமணி, வழக்குரைஞர் ஜெ.துரை சாமி, ஏ.தணிகாசலம், துரை.இராவணன், இராய புரம் ராஜேந்திரன், மு.மணி, காளியப்பன், ஆண்டிப்பாளைய்ம த.செயக்குமார், வட சென்னை மாவட்ட கழக மாணவரணி அமைப் பாளர் மணியம்மை, த.மரகமணி, சித்ரா, பெரம்பூர் தியாகராசன், நா.பார்த்திபன், புது வண்ணை ஆர்.செல்வம் மற்றும் ஏராளமான தோழர்கள் வந்திருநதனர். வழக்குரைஞர் ஜெ.துரைசாமி அவர்களது ஏற்பாட்டில் வேனில் வந்த தோழர் களும், இரு சக்கரவாகனங்கள், கார் முதலானவற்றில் கழகக் கொடிகள் கட்டப்பட்டு, அய்யா படந்தாங்கி தோழர்கள் மாவட்டம் முழுவதும் வலம் வந்தது எழுச்சி மிக்கதாக அமைந்தது.
தென்சென்னை
தென்சென்னை மாவட்ட தி.க. தலைவர் இரா.வில்வநாதன், மாவட்ட தி.க. செயலாளர் செ.ரா.பார்த்தசாரதி தலைமையில் தென்சென்னை தோழர்கள்
ஆவடி -வேப்பம்பட்டில் அய்யா சிலைக்கு மாலை
ஆவடி மற்றும் வேப்பம்பட்டில் செப்.17 அன்று தோழர்கள் அய்யா சிலைக்கு மாலை அணிவித்தனர். மா.ஆ.கந்தசாமி தலைமையில் மாவட்ட செயலாளர் பா.தென்னரசு, சீ.தே.கீதா, கா.வனிதா, ப.சோபனா, உ.மோகனபிரியா, மு.செல்வி, மணிமேகலை, காரல்மாக்ஸ், தொண்டறம், முகப்பேர் செல்வி, பாலமுருகன், உ.கார்த்திக், ரவிச்சந்திரன், பிரேம்குர், ரகுபதி, அன்பு அறிவுமணி, அன்புமணி, பெரியார் மாணாக்கன், துரை.முத்துகிருட்டிணன், அ.அருண், இல.குப்புராசு, பாலமுரளி, ஜெயகுருநாதன், பா.மு.நிர்மலா, பா.மு.அபினாசுருதி, பா.மு.கோபன் சித்தார்த்தன், பா.யாழினி, ஏழுமலை, அம்பத்தூர், தமிழ்மணி, தமிழரசன், பெரியா நாகராசு, ர.பிரேம்குமார், இரணியன்.
வேப்பம்பட்டு
காலை 8.30 மணி அளவில் சிவ.இரவிச்சந்திரன் தலைமையில், ப.க. செயலாளர் பா.ரா.இராமதுரை முன்னிலையில் மாவட்ட அமைப்பாளர் அ.அருண், மாலை அணிவித்தனர்.
பெரியார், அண்ணா, காமராசர், அம்பேத்கர், திருவள்ளுவர், பாரதியார் ஆக 6 சிலைகளை வைத்த ஊராட்சிமன்ற தலைவர் ஜெயபாலன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தவர் நாத்திகன் பாலு, இனிப்பு வழங்கியவர்.வேப்பம்பட்டு செயலாளர் பட்டாளம் பன்னீர்.
இவ்விழாவில் திருநின்றவூர் கழக தலைவர் இல.குப்புராசு, ஊராட்சிமன்ற துணைத் தலைவர், பச்சையப்பன், தா.குமார், கு.சங்கரி, மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் மோகனப்பிரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அண்ணா மேம்பாலம்
அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தோர்: தியாகராச நகர்-இரா.வில்வநாதன், செ.ரா.பார்த்தசாரதி, செ.தமிழ்சாக்ரடீஸ், எம்.பி.பாலு, செல்வநே;திரன், மு.ந.மதியழகன், கோ.வி.ராகவன், ச.தாஸ், இரா.பிரபாகரன், ராஜா, பிரவீன், க.விஜயராஜா, மு.சண்முகப்பிரியன், சத்தியமூர்த்தி, முகிலன், தங்க.ரமேஷ்.
சர்பிட்டி தியாகராயர் பேரவை பாண்டியன், பெரியார் மருத்துவமனை மேலாளர் ஜி.குண சேகரன், இ.தயாளன், மற்றும் திரளானோர்  கலந்து கொண்டனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...