Friday, September 16, 2011

மீண்டும் மீண்டும் பெட்ரோல் விலை உயர்வா? தமிழர் தலைவர் கண்டனம்

மீண்டும் மீண்டும் பெட்ரோல் விலை உயர்வா? தமிழர் தலைவர் கண்டனம்

 

நேற்றிரவு (அதாவது 16.9.2011) முதல் பெட் ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.14   உயர்த்தப்பட்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள் ளது. இதன்படி சென்னை யில் ஒரு லிட்டர் ரூ.70க்கு (70.64) மேல் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது - மிகவும் வேதனைக்கும் கண்டனத் திற்கும் உரியதாகும். எரிவாயு விலை ஏற்றமும் குடும்பங்களுக்குப் பெருஞ்சுமையாகும்.

எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு - அதைச் சரி செய்யவே விலை உயர்வு என்று சமாதானம் சொல்லப்படுகிறது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2010-2011-ன் இரண்டாம் காலாண்டின் நிதி நிலை அறிக்கையில் 4 மாத லாபம் அரசுக்கு வரி செலுத்தியது போக ரூ.5294 கோடியாகும். ரிலையன்சின் லாபம் நான்கு மாதத்தில் 4923 கோடி ரூபாயாகும். மத்திய அரசு கூறும் சமாதானம்கூட உண்மைக்கு மாறாகவே இருக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் 15 சதவிகிதம் வரி விதிப்பு; இந்தியாவிலே 65 சதவிகிதமாகும். இது நியாயமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

மத்திய ஆட்சியில் உள்ள U.P.A. அய்க்கிய முற்போக்கு அரசுக்கு இதனால் ஏற்படும் அவப் பெயர் மிகவும் அதிகம்.

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றங்களுக்குத் தேர்தல் என்ற கால கட்டங்களில்கூட வாக்காளர் களின் உணர்வுகள் - எதிர்ப்புகள் வாக்குப் பெட்டிகளில் எப்படி பிரதிபலிக்கும் என்பதைப் பற்றிக்கூட கவலைப்படாது, மத்தியில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள் இப்படி ஒரு முயற்சியை - கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளும் முயற்சியை தயக்கமில்லாமல் செய்வது அரசியல் சாதுர்யமில்லாத மக்கள் விரோதச் செயல்!

புது வரிகளை கிரிக்கெட் மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் சலுகைகளை வெட்டுதல் மூலமும், கோயில்களில் உள்ள தங்கங்களை எடுத்துக் கொண்டு, தங்கப் பத்திரம் (Gold Bonds) கடன் பத்திரமாக கடவுளுக்கேதந்தும்கூட நிதி ஆதாரத்தைப் பெருக்க வழி காணலாமே!
- கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...