Monday, August 22, 2011

துரிதப்படுத்துமா தமிழ்நாடு அரசு?

ஆகஸ்டு - 22 இந்த நாளில் 2006ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச் சகர் உரிமை வலி யுறுத்தும் சட்டம் மீண் டும் கொண்டு வரப் பட்டது.

69 சதவிகித அடிப் படையில் தேர்வு செய்யப்பட்டு, அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப் பட்டு, அவர்களுக்குக் கோவில்களில் பணிய மர்த்தம் செய்யப்படும் கால கட்டத்தில், பார்ப் பனர்கள் வழக்கம்போல உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுத்து இடைக் காலத் தடையை வாங்கி யுள்ளனர்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் (2001-2006) அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர் வாய்ப்பு அளிக்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்களால் உறுதி கூறப்பட்டது. திருச் சியை அடுத்த கம்பரசம் பேட்டையில் அர்ச்கசர் பயிற்சிப் பள்ளி தொடங் கப்படும்; இடம் எல்லாம் பார்த்தாகி விட்டது என் றெல்லாம் கூறப்பட்டது.

இப்பொழுது அதே எண்ணத்தில் அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இது வரை இதுபற்றி எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கப்படா விட்டாலும், இந்து சமய அற நிலையத்துறை மான் யக் கோரிக்கை விவாதத் தின்மீது சட்டமன்றத்தின் இந்தத் தொடரிலேயே அறி விக்கலாமே!

இதற்கிடையே நகரியி லிருந்து ஒரு தகவல் ஏடுகளில் இடம் பெற்றுள் ளது. கிராமப்புறங்களில் எஸ்.சி.எஸ்.டி., வகுப்பினர் வாழும் பகுதிகளில் உள்ள கோவில்களில் அர்ச்ச கராகப் பணிபுரிய விரும் பும் பக்தர்களுக்கு தேவஸ் தான நிருவாகம் அர்ச்சகர் பணி வாய்ப்பு அளிக்கும் என திருப்பதி தேவஸ் தான நிருவாக அதிகாரி தெரிவித்தார்.

அர்ச்சகராகப் பணி புரிவதற்கும் இந்துமத தர்ம சாஸ்திர நெறிமுறை களின்படி, தர்ம பிரசார பரிஷத் திட்டத்தை விரி வாக்கம் செய்வதற்கும் தேவஸ்தானம் பயிற்சி அளிக்கும். இவர்கள் பஜனைக் கச்சேரி செய்யத் தேவையான உபகரணங் களும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்குப் பயிற்சி அளிக்க பிரபல சங்கீத வித்வான் கிருஷ் ணமூர்த்தி மேற்பார்வை யில் திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது என்று செய்தி வருகிறது.

தாழ்த்தப்பட்டோர் வாழும் பகுதிகளில் பெரும் பாலும் அவர்களே பூசாரி களாக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் களுக்கு அர்ச்சகர் பயிற்சி என்பது எந்த அடிப்படை யில் என்று தெரியவில்லை.

கேரளாவில் அர்ச்ச கர் சட்டம் செயல்பாட் டில்தான் இருக்கிறது. உச்சநீதிமன்றமே சாதக மான தீர்ப்பு வழங்கியும் உள்ளது.

தமிழ்நாட்டைச் சுற்றிலும் சாதகமான சூழல் நிலவும் போது, தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் போது மான கவனம் செலுத்தி உச்சநீதிமன்றத்தில் நிலு வையில் உள்ள வழக் கைத் துரிதப்படுத்துமா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...