Monday, August 22, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் விவகாரம்: கோவில் தங்கத்தைத் திருடிய மன்னரின் வாரிசு!


குற்றம்சாட்டுகிறார் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன்
உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்துக!
வெளிநாடுகளில் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக கோயில் தங்கத்தை அரசே எடுத்துக் கொள்ளலாமே! 
தமிழர் தலைவர்  அறிக்கை

பத்மநாபசாமி கோயிலில் உள்ள தங்கத்தை மன்னர் குடும்பத்தின் வாரிசுதாரரான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா திருடியுள்ள தாக கேரள மாநில முன்னாள் முதல் அமைச்சரும், இந்நாள் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் குற்றம்சாற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டி, மன்னர் குடும்பத்தவர்மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள அரிய பொற்குவியல் சொத்துகளை அரச குடும்பத்தினர் யாருக்கும் தெரியாமல் எடுத்துச் (திருடிச்) செல்வதாக மிகப் பெரியதொரு திடுக்கிடும் குற்றச்சாட்டினைக் கூறியுள்ளவர் சாதாரண பேர் வழியல்லர்!
கேரளத்தின் முன்னாள் முதல் அமைச்சர் வி.எஸ். அச்சதானந்தன் அவர்கள்.

அதுவும் இந்த பத்மநாபசாமியின் சக்தியை பக்தர்கள் இதன்மூலம் தெரிந்து கொள்ளலாமே!

நாளும் எப்படி கொள்ளை போகிறது தெரி யுமா? முன்னாள் முதல்வர், இன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சொல்லுகிறார், படியுங்கள்!

பாயசம் அல்ல - தங்கம்!


1. கோயிலில் அனைத்து நாள்களும் மன்னர் உத்திராடம் திருநாள் மார்தாண்டவர்மா தரிசனம் செய்து வருகிறார். ஒரு நாள் அவ்வாறு தரிசனம் முடிந்து வெளியே திரும்பி வரும்போது அவரது கையில் இருந்த பாத்திரத்தில் கோயில் பிரசாத மான பாயசம் இருக்கவில்லை.

மாறாக, பாதுகாப்பு அறைகளிலிருந்து எடுக் கப்பட்ட தங்கம் இருந்ததை பூசாரி கண்டுபிடித்து விட்டார். இதைத் தொடர்ந்து தன்மீது சூடான கொதிக்கும் தண்ணீரை ஊற்றிக் கொல்லுவதற்கு மார்த்தாண்டவர்மா முயற்சி செய்வதாக பூசாரி புகார் கூறினார். இதற்கு அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டாமா?

2. கோயிலில் பாதாள அறைகளில் உள்ள பொக்கிஷம் பற்றிய உச்சநீதிமன்றத்தின் கணக் கெடுப்பைத் தடுப்பதற்காகத்தான் மார்த்தாண்ட வர்மா தேவபிரசன்னம் நடத்தினார்! கோயிலில் ரகசிய அறையில் இருக்கும் பொக்கிஷத்தை தொடுப்பவர்களின் குடும்பத்தை அது பாதிக்கும் என்றும், மரணம்கூட ஏற்படலாம் எனவும் தேவ பிரசனத்தில் தெரிந்ததாகக் கூறப்படுகிறது. மற்ற எவரும் சொத்தைத் தொடாமல் தடுப்பதற்கான முயற்சிதான் இது!

சர்ப்பதோஷம் ஏற்பட்டதா மன்னருக்கு?

பாம்பின் படம் பதித்து வைக்கப்பட்டுள்ள ரகசிய அறையை மார்த்தாண்டவர்மா ஏற்கெனவே திறந்திருந்தார். மார்த்தாண்டவர்மா ரகசிய அறையத் திறந்ததால் அவருக்கு சர்ப்பதோஷம் ஏற்படவில்லை. ஆனால் அந்த அறையைத் திறந்து உள்ளே உள்ள பொருள்களின் மதிப்பை கணக்கிட உச்சநீதிமன்றத்திற்கு  உரிமை இல்லை என்று அவர் கூறுவது ஏன் என்று வி.எஸ். அச்சுதானந் தன் கேட்டிருக்கிறார்.

இதற்கு உடனடியாக மறுப்புரை கூற மன்னர் வர்மா மறுத்து மழுப்பி விட்டார்!

கோயில்கள் தோற்றுவிக்கப்பட்டது - ஏன்?

கோயில்களை விபச்சார விடுதிகள் என்றார் தேசபிதா அண்ணல் காந்தியடிகள்.

அதோடு கோயில்கள் கொள்ளைக் கூடாரங் கள் என்பது நீண்ட காலமாக சுயமரியாதை இயக்கம் கூறிவரும் கருத்தாகும்.

இது எவ்வளவுப் பெரிய உண்மை என்பது இப்போது விளங்குகிறதல்லவா?

சாணக்கியர் என்ற கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் (கோயில்கள் தோன்றியது - ஏன் என்று நான் எழுதி பல பதிப்புகள் வெளி வந்துள்ள நூலில்) மன்னர்களின் அரசாங்கக் கஜானாவை நிரப்பிட, இப்படி ஒரு வருவாய்க் கான வழிதேட கோயில்களைக் கட்டி, சிலை களைக் கொணர்ந்து வைத்து, பக்தி வியா பாரத்தை அரசர்கள் துவக்கிட வேண்டும்  என்ற யோசனை கூறப்பட்டு, அதன் பிறகே கோயில் என்ற அமைப்புகள்  - கட்டுமானங்கள் ஏற்பட்டன என்பது வரலாறு.

வேதங்களில் கோயில்கள் இல்லையே! கேரளத்தில் இந்த ஒரு கோயிலில் மட்டும் உள்ள தங்கம், நகைகள் (5 அறைகளில் கணக்கிடப் பட்டவைகள் மட்டுமே) இந்திய அரசின் கல்வி பட்ஜெட் ஒதுக்கீட்டுத் தொகையை தாண்டு கிறதே!

பண வீக்கத்தைத் தடுக்க..

தங்கத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குப் பதிலாக, இதுபோன்ற கோயில் தங்கத்தை இந்திய அரசு எடுத்துக் கொண்டு, அதற்குப் பதிலாக தங்கக் கடன் பத்திரம்கூட கொடுத்து விடலாமே  (Gold Bonds) தங்கம் விலை உயர்வுதானே, மற்ற பொருள் விலைவாசி உயர்வுக்கு மூல காரணமாகிறது. எனவே அதனைக் குறைக்க, நிலைப்படுத்த, (Stabilise price and contain inflation) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இப்படி செய்ய ஒரு தனிச் சட்டம் கொண்டு வரலாமே!

நியாயப்படி அரசே எடுத்துக் கொள்ள உரிமை உண்டு. என்றாலும், துணிவு அந்த அளவுக்கு இந்திய அரசுக்கு வராவிட்டாலும் இந்தக் குறைந்தபட்ச நடவடிக்கையிலாவது ஈடுபட்டு, பொருளாதார, நிதிப் பற்றாக்குறையை நிவர்த்திக் கலாமே!

தேவை விசாரணை!

தோழர் அச்சுதானந்தன் அவர்கள் கூறிய குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல; எனவே உடனடியாக இதுபற்றி ஒரு முக்கிய தனிப்பிரிவை இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அல்லது பதவியில் உள்ள உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆய்வுக் குழுவை நியமித்து, இந்தப் பகற்கொள்ளை களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாமா? இது ஊழல் புராணத்தில் வராதா? எனவே உடனடியான நடவடிக்கை தேவை! தேவை!!
கி. வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்


.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...