Saturday, August 13, 2011

விடுதலை செய்திகள் 13-08-2011

நாகை - திராவிடர் மாணவர் கழக இன எழுச்சி மாநில மாநாட்டுத் தீர்மானங்கள்!
ஈழத் தமிழர்ப் பிரச்சினை: இலங்கை அரசுக்கு துணைபோகும்

சீனா, ருசியாவிடம் இடதுசாரிகள் தூதுபோக முன்வருக!
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்க!
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீட்டுக்குத் தனிச் சட்டம் கொண்டு வருக!


கருணை காட்டுக! மறுபரிசீலனை அவசியம்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சின்னசாந்தன், பேரறிவாளன், ஆகியோருக்குக் கருணை காட்ட வேண்டும், தூக்குத் தண்டனையை மாற்றிட வேண்டும் என்ற கருணை மனு குடியரசு தலைவருக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே அளிக்கப்பட்டது.

மூன்று முக்கிய பிரச்சினைகள்

தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்றைய விடுதலை அறிக்கையில் மூன்று முக்கியப் பிரச்சினைகள் குறித்து முத்திரை பதிக்கும் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

1) தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஈழத் தமிழர் குறித்த முக்கிய தீர்மானம் அய்.நா.வின் நிபுணர் குழு அளித்த அறிக்கையின்படி ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஒன்று. இந்திய அரசு, பொருளாதாரத் தடை செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கோத்தபயவுக்கு பதிலில் என்னை இழுப்பது ஏன்? ஜெயலலிதாவுக்கு கலைஞர் கண்டனம்
சென்னை, ஆக. 13: தி.மு.க. தலைவர் கலைஞர் நேற்று வெளியிட்ட அறிக் கையில் கூறியிருப்பதாவது:

அனைத்துக் கட்சி கூட்டம், சட்ட மன்ற கட்சி தலைவர்கள் கூட்டம், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் தீர்மானம், மனித சங்கிலி போராட்டம், பிரதமருக்கு தந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு என்று இவைகள் எல்லாம் கருணாநிதியின் கண்துடைப்பு நாடகங்கள் என்று சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார்.

சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் அரசால் நீக்கப்படும் பகுதிகள் எவை? கலைஞர் அறிக்கை

சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் விலை விவரம் தமிழ்நாட்டு பாடநூல் கழகம் அறிவிப்பு

சமச்சீர் கல்வி தீர்ப்பு - அ.தி.மு.க. அரசின் நிலை பற்றி ஒரு சொற்பொழிவும் பெரியாரின் கலை - இலக்கியம் பற்றி மேலும் 3 சொற்பொழிவுகள்
தமிழர் தலைவர் உரையாற்ற இருப்பதாக அறிவித்தார்


கொல்கத்தா, ஆக. 13- சமச்சீர் கல்வி தீர்ப்பும் - அ.தி.மு.க. அரசின் நிலை பற்றியும் பெரியாரின் கலை -இலக்கியம் பற்றியும் தாம் உரையாற்ற இருப்பதாக தமிழர் தலைவர் அறிவித்தார்.
தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந் தனைகள் என்ற தலைப்பில் மூன்றாவது தொடர் சொற்பொழிவினை 12.8.2011 அன்று இரவு 7 மணிக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீர மணி நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வீரமர்த்தினி தென்றல் வரவேற்றுப் பேசினார்.
முஸ்லீமும், பிராமணரும் ஒன்றா?
வீரசிங்கம்பேட்டைக் கலவர வழக்கை விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதற்காக ஸ்பெஷல் மாஜிஸ்ட்டிரேட்டும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். ஒருவாரமாக விசாரணையும் நடந்து வருகிறது.

இவ்வழக்கு நடந்து வருகையில் அப்பிரதேச நிலையைச் சரிப்படுத்தத் தண்டப் போலீசாரைச் சர்க்கார் நியமித்திருக்கிறார்கள். இத்தண்டப் போலீசின் செலவினத்தை இக்கிராமவாசிகளே ஒப்புக்கொள்ள வேண்டுமென்று சர்க்கார் அறிக்கை கூறுகிறது. இதைப்பற்றி நாமேதும் கூற விரும்பவில்லை. ஆனால் இத்தண்டப் போலீசுக்கு ஆகும் செலவினம் இருக்கிறதே அதைப் பற்றி விபரம் கூறும்போது மேற்படி கிராமவாசிகள் கொடுக்க வேண்டுமென்று சொல்லிவிட்டு மேற்படி கிராமத்திலுள்ள பிராமணர்கள் முஸ்லீம்கள் இவர்கள் நீங்கலாக என்று கூறியிருப்பதுதான் நமக்குப் பெரும் சந்தேகத்தை உண்டாக்குகிறது.










No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...