Tuesday, July 26, 2011

பத்திரிகா தர்மம்

கடந்த 29 ஆம் தேதியன்று புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஒரு சில பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந் துரையாடினார். சென்னையைச் சேர்ந்த பத் திரிகை ஆசிரியர்கள் எவரும் இக்கலந்துரை யாடலுக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியத் தலைமைத் தணிக்கை அலு வலர், கணக்குத் தணிக்கை அறிக்கை பற்றி பத்திரிகையாளர் கூட்டம் நடத்தியதை பிரதமர் மன்மோகன் சிங் கண்டித்திருந்ததைப் பற்றி 1-7-2011 நாளிட்ட இந்து ஆங்கில நாளி தழின் முதல் பக்கத்தில் பி. முரளிதர் ரெட்டி யின் செய்திக்கட்டுரை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. பத்திரிகையாளர் கூட்டம் நடத் துவதற்கு தலைமைத் தணிக்கை அலுவல ருக்கு உள்ள உரிமையை சென்னை உயர்நீதி மன்றம் 2004 ஆம் நடைபெற்ற W.P.23408 வழக்கில் உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ள தாக தெரிவித்துள்ளார். எனவே, தலைமைத் தணிக்கை அலுவலர் பத்திரிகையாளர் கூட் டம் நடத்தியதை பிரதமர் கண்டித்தது சரியல்ல என்று கட்டுரையாசிரியர் கருதுகிறார். தணிக்கை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் முன்னர் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளக்கும் கசிந்தது எப்படி என்பது பற்றி எவரும் கவலைப்படவில்லை. அதற்கு யார் பொறுப்பு? நாடாளுமன்றம் இந்த விவகா ரத்தை எடுத்துக் கொள்ளும் முன்னதாகவே ஊடகங்கள் அது பற்றி தங்கள் மனம் போன போக்கில் செய்திகளை வெளியிடத் தொடங்கி விட்டன. தலைமைத் தணிக்கை அலுவலர் அரசின் கொள்கை முடிவுகளைப் பற்றி கேள்வி கேட்க முடியாது என்று பிரதமர் கூறியதைப் பற்றி கட்டுரையாளர் கருத்து எதுவும் தெரிவிக் காமல் மவுனம் சாதிக்கிறார். 2ஜி பற்றிய தணிக்கை அறிக்கை தணிக்கை அலுவ லரின் அதிகார வரம்பைத் தாண்டியது அல்ல என்று தலைமைத் தணிக்கை அதிகாரி முன் னர் கூறியதை மட்டுமே நினைவுபடுத்துவ துடன் நிறுத்திக் கொள்கிறார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...