Thursday, July 28, 2011

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பன்னாட்டு மாநாட்டில் கார்பன் சமநிலை பற்றிய ஆவணம் வெளியீடு

வல்லம், ஜூலை 27- தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் வளரும் பசுமைத்தொழில் நுட்ப பன்னாட்டு மாநாடு-2011 மற்றும் கருத்துக்காட்சி-2011 என்ற தலைப்பில் நான்கு நாள் (ஜூலை 27 முதல் 30 வரை) நடைபெறும் மாநாட்டினை இன்று (27.7.2011) மேதகு இந்திய குடியரசு மேனாள் தலைவர் டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இம்மாநாட்டில் புதுடில்லி பாதுகாப்பு அமைச்சகத்தின் மேதகு விஞ்ஞானி டாக்டர் ஆ.சிவதாணுபிள்ளை அவர்கள் வெளியிட்ட கார்பன் சமநிலை பற்றிய பல்கலைக் கழக ஆவணத்திலிருந்து......
அறிமுகம்
சிறிதளவும் கரிமக் காற்று இல்லாமல் சுற்றுச் சூழலை ஆரோக்கியம் நிறைந்ததாக வைத்திருப்ப தற்கான வழி முறைகளைக் கண்டறிய பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளை விவரிக்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டவை இந்த சிறு வெளியீடு. கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், அவர்களைச் சமூக நலப் பணிகளிலும் கூட உயர்த்தவும் முடியும் என்று இப் பல்கலைக் கழகம் உறுதியாக நம்புகிறது. நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து வசதிகளும் கிராமப் புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படவேண்டும் என்று கடந்த 20 ஆம் நூற்றாண்டின் 40 ஆம் ஆண்டுகளிலேயே தனது பேரறிவுடன் கூடிய ஆலோசனையை தந்தை பெரியார் அவர்கள் தெரிவித்ததற்கு இணங்க, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமூகங்களிடையே உள்ள இடைவெளியை நீக்குவது என்பதே ஒரு மாபெரும் பணியாகும். நாம் வாழும் இந்த பூமியை ஆரோக்கியம் நிறைந்ததாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் ஆக்குவது மட்டுமன்றி, பூமி நாளுக்கு நாள் வெப்பமயமாகிக் கொண்டு வருவதைக் குறைப்பதும் நமது இலக்காகும்.
மத்திய-மாநில அரசுகள், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைகள், புதிய மற்றும் மறுசுழற்சி முறையில் மின்னாற்றல் தயாரிப்பது, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மனித வள மேம்பாட்டுத் துறை, பல்கலைக் கழக மானியக் குழு மற்றும் இதர சட்டப்படி அதிகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கக்கூடிய ஒரு நட்புடன் கூடிய ஒரு தூய்மையான சுற்றுச் சூழலை உருவாக்கும், மலைமீது ஏறுவது போன்ற, மிகக் கடினமான இப்பணியை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
இயற்கையினாலும், மனித செயல்பாடுகளாலும் ஏற்பட இருக்கும் பேரழிவுகளைத் தடுத்து நிறுத்துவது, அவற்றின் பாதிப்புகளைக் குறைப்பது என்ற எங்களது பெருமைக்குரிய இலக்கான கரிமக் காற்று இல்லாத ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குவதை இன்னும் இருபது ஆண்டு காலத்திற்குள் எட்ட முடியும் என்று நாங்கள் நிச்சயமாக நம்புகிறோம். மாசற்ற சுற்றுச் சூழலை உருவாக்குவதற்காக பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் 65 கிராமங்களைத் தத்து எடுத்துக் கொண்டுள்ளதும், தூய்மையான தஞ்சை நகரை உருவாக்குவது என்ற திட்டத்தையும், அதற்காக மரங்கள் நடுவது மற்றும் அது போன்ற தொடர்புள்ள இதர ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்வதும் கரிமக் காற்று சிறிதும் இல்லாத ஆரோக்கியமான சுற்றுச் சூழலை உருவாக்குவ தற்கான வழிமுறைகளாகும்.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் நுழைவாயில்
உலகிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட பெண்களுக்கான பொறியியல் கல்லூரியாக இருந்தது என்ற பெருமையைப் பெற்றுள்ளது பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம். இப்பல்கலைக் கழகம் இன்று கட்டடக் கலை, கல்வி, கலை, நிருவாகம், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் என்ற பல்வேறு துறைகளைக் கொண்ட தாக விளங்குகிறது.
இந்த நுழைவாயில் வளைவின் சிறப்பு என்னவென்றால், ஆசியாவிலேயே உள்ள மிகப் பெரிய (40 மீட்டர் நீளம் கொண்ட) ஒரே வளைவைக்கொண்ட வளைவு இதுதான் என்பதாகும்.
வெறும் முட்புதர்கள் நிறைந்த கட்டாந்தரையாக இருந்த பல்கலைக்கழக வளாகம் இன்று பசுமை நிறைந்த சோலையாக விளங்குகிறது. இயற்கை யினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும் அளவிலும், பல்வேறுபட்ட உயிர்களும், தாவரங்களும் செழித்து வளரும் இடமாக இன்று விளங் குகிறது.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் அமைந்துள்ள நிலப்பரப்பு இயற்கையான ஒளியும், காற்றோட்ட வசதியும் நிறைந்ததாக விளங்குகிறது.
முன்பு சூரிய வெப்பத்தினால் வெப்பம் நிறைந்து காணப்பட்ட பல்கலைக் கழக வளாகத்தில் இன்று ஓங்கி வளர்ந்த மரங்கள் வரிசையாக நீண்டு பாதையெங்கும் நிழல் தரும் வகையில் விளங்குவ துடன், வாகனங்களை வசதியாக நிறுத்துவதற்கு ஏற்ற இடமாகவும், மற்ற செயல்பாடுகளுக்கு ஏற்ற திறந்த வெளியாகவும் விளங்குகிறது.
நீர் பயன்பாட்டில் சிக்கனம் கடைப்பிடிக்கப் படுவதன் மூலம் திறமையான நீர் மேலாண்மையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
நீர் சேமிப்பு (Water Conservation)
1.மழைநீர் சேகரிப்பு நீர்நிலை (Rainwater Harvesting well)
2.பயன்படுத்தப்பட்ட தண்ணீரைத் தேக்கி வைத்திருக்கும் குட்டை (Retention Pond)
3.பயன்படுத்தப்பட்ட தண்ணீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்துதல்.(Grey Water Recycle)





5.நுண்பாசன முறை (Micro-irrigation)
மழை நீர் சேகரித்தல் போன்ற மாற்று நீர் ஆதாரங்கள் மூலம் தண்ணீரைச் சேமிப்பதை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் வலியுறுத்துகிறது.
பல்கலைக் கழக நிலப் பரப்பில் பெய்யும் மழை நீரைச் சேகரிப்பதற்கு ஏற்ற வகையில் வடிகால்களும், குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் சராசரி பெய்யும் மழையின் மூலம் 41, 884 முதல் 92,300 கனமீட்டர் அளவு நீரைச் சேகரித்து சேமிக்க முடியும்.
பயன்படுத்தப்பட்ட பின் சேமித்து வைக்கப் பட்ட தண்ணீர், மறுசுழற்சி முறையில் பல்கலைக் கழகத்தின் விவசாயத் தேவைகளுக்காகப் பயன் படுத்தப்படுகிறது. திறமை நிறைந்த நுண்பாசன முறை மற்றும் மூடாக்கு தொழில்நுட்பம் ஆகியவை கடை பிடிக்கப் படுகின்றன.
திறமையான ஒற்றை லீவர் குழாய்கள், கழிவறை வெளியேற்றுத் தொட்டிகள், இரட்டைக் குழாய்கள் போன்ற சிறந்த பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன. கழிவுகளிலிருந்து செல்வத்தைப் பெறுவது என்ற இலக்கில் கவனம் செலுத்தி, திடக்கழிவுகள் சேரும் இடங்களிலேயே பிரிக்கப்பட்டு, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
சுற்றுச் சூழல் நட்புடன் கூடிய ஜெனரேட்டர்கள் மட்டுமே பல்கலைக் கழக வளாகம் முழுவதிலும் பயன்படுத்தப்படுகின்றன.
திறமையான, சிக்கனமாக மின்னாற்றல் பயன் பாட்டுக்காக தரம் வாய்ந்த தாமிர மின் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன.
பல்கலைக் கழக வளாகத்தின் வளர்ந்து வரும் மின் ஆற்றல் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் தனியான அதிக அழுத்தம் கொண்ட மின் நிலையம் வளாகத்தில் உள்ளது.
தொழில்நுட்பத்தில் அவ்வப்போது ஏற்படும் முன்னேற்றங்களை உடனுக்குடன் பயன்படுத்தும் பழக்கத்தைப் பல்கலைக் கழகம் பின்பற்றுகிறது. குழல் விளக்குகளுக்கு மாற்றாக சிஎஃப்எல் விளக்குகளும், அதன் பின் இப்போது எல்ஈடி விளக்குகளும் பயன்படுத்தப்படுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சேமிக்கப்படும் மின்னாற்றலின் அளவு 82 மெகாவாட் ஆகும்; இதன் மூலம் சேமிக்கப்படும் செலவினம் 1,37,808 ரூபாய்களாகும்.
மாற்று மற்றும் மறுசுழற்சி ஆற்றல் (Alternative and Renewable Energy)
மாற்று முறைகளாலும், மறு சுழற்சி மூலமும் மின்னாற்றல் தயாரிக்கப்படுதல் (Bio-mass Gasifier R&D unit)
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் இலக்கு 2025 ஆம் ஆண்டுக்குள் அதன் கட்டடங்கள் அனைத்தும் மின்னாற்றல் தேவையில் தன்னிறைவு பெற்றதாக விளங்க வேண்டும் என்பதுதான்.
மாற்று முறைகளில் பல்கலைக் கழக வளாகத்துக்குள் தயாரிக்கப்படும் மின்னாற்றல் வளாகத்தின் தேவையை நிறைவு செய்யப் போது மானதாக உள்ளது.
இயற்கை எரிவாயுவிலிருந்து மின்னாற்றல் தயாரிக்கும் எங்களது கருவி 2000 கிலோவாட் அளவுக்கு மின்னாற்றலைத் தயாரித்தளிக்கிறது.
பல்கலைக் கழக மாணவர் விடுதிகளில் சூரிய ஒளி மூலம் மின்னாற்றல் தயாரிக்கும் உலோகத் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மின்னாற்றல் செலவில் ரூ 67,000 ஆண்டுதோறும் சேமிக்கப் படுவதுடன், 10 டன் கரிமவாயு வெளியேற்றத்தையும் இது தடுக்கிறது.
வளாகத்தின் உள்ளே இருக்கும் நடை பாதைகளில் உள்ள மின்கம்ப விளக்குகள் சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்னாற்றலால் இயங்குபவை.
பல்கலைக் கழக மாணவர் விடுதிகளில் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்னாற்றல் நீரைச் சுட வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மின்னாற்றல் செலவு 1,65,000 ரூபாய் ஆண்டுதோறும் சேமிக்கப்படுவதுடன், 195 டன் கரிமக் காற்று வேளியேற்றத்தையும் இது தடுக்கிறது.
சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்னாற்றலைக் கொண்டு சமையல் செய்யும் வட்டமான குழிந்த பாத்திரத்தில் உணவு தயாரிக்கப்படுவதுடன், உயர்ந்த வெப்ப நிலையில் நீரைச் சூடாக்குகிறது.
மழைக் காலங்களில் மாணவர் விடுதிகளில் துவைக்கப்படும் துணிகளை உலர்த்தும் கருவிகளில் சூரிய ஒளியில் இருந்துதயாரிக்கப்படும் மின்னாற்றல் பயன் படுத்தப்படுகிறது.
பல்கலைக் கழக வளாகத்திற்குள் உள்ள வாகனங்களின் தேவைக்கான சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் (டிஸ்டில்ட் வாட்டர்) சூரிய ஒளியில் இருந்து தயாரிக்கப்படும் மின்னாற்றல் மூலம் தயாரிக்கப்படுகிறது. உயிரியல் எரிவாயு நிலையத்தில் தயாரிக்கப்படும் எரிபொருள் விடுதி சமையல் அறைகளில் பயன் படுத்தப்படுகிறது.
சாணத்திலிருந்து உயிரியல் எரிவாயு தயாரிக்கும் கருவி
தண்ணீரை மேலேற்றுவதற்கு காற்றாலை பம்புகள் பயன் நிறைந்த வகையில் பயன்படுத்தப் படுகின்றன. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு ரூ 48,000 செலவினம் சேமிக்கப்படுவதுடன், 0.1 டன் கரிம வாயு வெளியேற்றம் தடுக்கப்படுகிறது.
புதியதாக உருவாக்கப்படும் உயிரியல் எரிவாயு நிலையம் 60 கி.வாட் மின்னாற்றலைத் தயாரிக்கும். இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ 5,40,000 சேமிக்கப் படுவதுடன், 113.40 டன் கரிமவாயு வெளியேற்றமும் தடுக்கப்படுகிறது.
மாணவர்களால் உருவாக்கப்பட்ட மறுசுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகள்
சூரிய ஒளி மின்னாற்றல் உதவியுடன் பல்கலைக் கழக வளாகத்துக்குள் பயணம் செய்வதற்கான வாகனம். இது பூமியின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும் கரிமக் காற்றை வெளியிடும் இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றது. இதன் பாட்டரியை மின்னாற்றலில் இருந்தும், சூரிய ஒளிக் கருவியில் இருந்தும் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மாற்றுத் திறனாளி களுக்கான வாகனம்
இது மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தக் கூடிய சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்படும் மின்னாற்றலால் இயங்கக் கூடிய வாகன மாகும். 120 கிலோ எடை வரை சுமக்க இயன்ற இது, மணிக்கு 25 கி.மீ. வரை வேகமாக செல்லும். ஒரு முறை இதன் பாட்டரி சார்ஜ் செய்யப்பட்டால், 45 கி.மீ. வரை பயணிக்கலாம்.
மறுசுழற்சியும் மறுபயன்பாடும் (Recycling and Reuse)
=மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரித்தல் (Paper Recycling Unit)
=மறுசுழற்சி முறையில் காகிதம் தயாரிக்கும் பெரியார் பிரிவு ஒன்று பெரியார் தொழில்நுட்ப வணிகக் காப்பகத்தில் உள்ளது.
=மறுசுழற்சி முறையில் காதிதம் தயாரிப்பதற்குத் தேவையான கச்சாப்பொருள் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கிடைக்கும் பழைய காகிதமாகும். காகிதத்தின் தரத்தை மேம்படுத்த பருத்தித் துணிக் கழிவுகளும் அத்துடன் சேர்க்கப்படுகின்றன.
=இந்த மறுசுழற்சி முறையில் ஆண்டு தோறும் 2 டன் காகிதம் தயாரிக்கப்படுகிறது. இதன் விளைவாக 300 கனஅடி மரக்கூழ் சேமிக்கப்படுகிறது.
=மறுசுழற்சி முறையில் தயாரித்துப் பயன்படுத்துதல்
=நமது கட்டுமானப் பணிகளுக்குத் தேவைப்படும் ஹாலோ செங்கற்கள், இன்டர்லாக்கிங் செங்கற்கள், பேவர் செங்கற்கள் போன்ற மாற்றுக் கட்டுமானப் பொருள்கள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப் படுகின்றன.
=இந்தத் தொழில் நுட்பம் மூலம் காடு அழிக்கப் படுவதும், மண் அரிப்பும் தவிர்க்கப்படுகிறது. இதன் மூலம் 36,337 டன் மரமும், 7,46,980 கன அடி வளம் வாய்ந்த நில மேல் மண்ணும் பாதுகாக்கப்படுகின்றன.
=சிமெண்ட் அற்ற சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கற்களும், வழக்கமாகத் தயாரிக்கப்படும் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் செங்கற்களைப் போன்று அதே அளவுக்கு கட்டுமானத்திற்கு தரம் சேர்ப்பவையாகும். அதே நேரத்தில் 7.2 டன் கரிமக் காற்று வெளிப்படுவதை இது தடுக்கவும் செய்கிறது. இதனால் சுற்றுச் சூழல் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை.
பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள இயற்கைத் தாவரங்கள் (Natural Vegetation in PMU)
=அழிந்து வரும் தாவர இனங்கள் மற்றும் மூலிகைத் தாவரங்கள் டிஷ்யூ கல்சர் தொழில் நுட்ப முறையின் உதவியால் உருவாக்கப்பட இயலும். அத்துடன் தரமான விதைகள் டி.சி. பிளான்ட் மய்யத்தில் தயாரிக்கப் படுகின்றன.
=பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் 4500 வகையான தாவர இனங்களும், 26,000 மரங்களும், அழிந்து வரும் சில மரவகைகளும் உள்ளன. இத்தகைய அடர்ந்து பரவியுள்ள தாவரங்கள், நாள் ஒன்றுக்கு, 1.6 டன் கரிமக் காற்றை நாள்தோறும் எடுத்துக் கொண்டு, 8.4 டன் உயிர்க் காற்றை வெளிவிடுகின்றன. =தூய்மை மேம்பாட்டுச் செயல்திட்டம் மற்றும் கரிமக் காற்றை முற்றிலும் ஒழிக்கும் செயல் திட்டம் ஆகியவற்றை நோக்கி நாங்கள் நடைபோடுகிறோம் என்பதை இது மெய்ப்பிக்கிறது.
கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் பெரியார் செயல்திட்டத்தின் இதயம் (Heart of periyar PURA)
=கிராமப்புறங்களுக்கும் நகர்ப்புற வசதிகளை அளிக்கும் பெரியார் செயல்திட்டத்தின் மய்ய நரம்பு மண்டலம் போன்ற பகுதி அச்சம்பட்டி கிராமமாகும். எங்கள் பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப வல்லுநர்கள் மற்றும் அக்கிராம விவசாயிகளினால்,அங்கிருந்த 100 ஏக்கர் தரிசு நிலம் மாற்றப்பட்டு இன்று வளம் கொழிக்கும் விளை நிலமாக விளங்குகிறது.
=தேக்கு, கருங்காலி, ரோஸ், வேங்கை போன்ற மரங்களும், தென்னை, மா, பலா, சப்போட்டா போன்ற ஆயிரக்கணக்கான மரங்களும், அமிலா மற்றும் ஆலிவோரா போன்ற மூலிகைச் செடிகளும் அடர்ந்த தாவரங்களைத் தன்னைச் சுற்றி கொண்டிருக்கும் கிராமம் அச்சம்பட்டி.
=இந்த விவசாயப் பண்ணையைப் பாதுகாப்பதற்காக, சூடான் முட்புதர் கொண்ட அருமையான இயற்கை வேலி ஒன்றும் போடப்பட்டுள்ளது.
=இப்பண்ணையில் அளவுக்கு அதிகமான தேங்காய்கள் காய்க்கின்றன. இவற்றை நமது மாணவர் விடுதிகளில் பயன்படுத்திக் கொள்ளப்படுவதுடன், வெளியில் விற்பனையும் செய்யப்படுகிறது. பொதுவாக தென்னந் தோப்பிற்கு நிறைய தண்ணீர் தேவைப்படும். ஆனால் சொட்டு நீர்ப் பாசனம் போன்ற முறைகளைக் கையாண்டு குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தியே இந்த தென்னந்தோப்பைப் பராமரித்து வருகிறோம்.
=விவசாயிகள், தோட்டக்காரர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டு உருவாக்கியது பெரியார் உயிரியல் பண்ணையாகும். அதன் சுற்றுப் புறத்தில் வாழும் எண்ணற்ற மக்களுக்கு இப்பண்ணை வேலை வாய்ப்பை அளித்துள்ளது.
=இந்தநிலத்தின் மதிப்பும், இதன் சுற்றுப் புறத்தில் உள்ள சமூக பொருளாதார மதிப்பீடுகளும் ஏக்கர் ஒன்று ரூ 12,500 என்பதில் இருந்து, இந்தப் பதினைந்து ஆண்டு காலத்தில் ஏக்கர் ஒன்று 10 லட்ச ரூபாய் என்ற அளவிற்கு இன்று உயர்ந்துள்ளது.
=அச்சம்பட்டியைச் சுற்றியுள்ள பண்ணைகளின் மேம்பாட்டுக்காக எமது தொழில் நுட்ப அறிவு அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
நுண்ணுயிர் உரத் தயாரிப்பு (Organic Culture)
இயற்கை உரங்களைக் கொண்டே இந்தப் பண்ணையில் உள்ள அனைத்து தாவரங்களும் வளர்க்கப் பட்டன. மண்புழு உரம் போன்ற இயற்கை மற்றும் உயிரியல் உரங்கள் இப் பண்ணையில் பயன்படுத்தப்பட்டன.
கரிமக் காற்று வெளியேற்றம் குறைக்கப்பட்டது
(சுநனரஉவடி டிக நுஅளைளடி) வரி கரிமக் காற்று வெளியேற்றம் குறைக்கப்பட்ட குறைக்கப்பட்ட வழி முறை கரிமக் காற்றின் அளவு டன் (ஆண்டுக்கு) 1 மறுசுழற்சி மின்னாற்றல் 219.76 2
மாற்று மின்னாற்றல் 332.14 3 மாற்று கட்டுமானப் பொருள்கள் 21,802.78 4 காடுகள் அழிப்பு 482.90 5 எல்.ஈ.டி./ சி.எப்.எல். விளக்குகள் 86.39

மொத்தம் 22,923.96

2025 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிய எங்களது உடனடி செயல்திட்டம்
=மின்னாற்றல் சேமிப்பு கட்டுமான விதிகளின் முக்கிய இலக்கின்படி, மிகக் குறைந்த அளவில் மின்னாற்றல் தேவைப்படும் முறையில் மட்டுமே எங்களது எதிர்காலக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் மிகுந்த திறமையுடன் மேற்கொள்ளப்படும்.
=மின்னாற்றல் சேமிப்பு கட்டுமான விதிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள யு காரணி மற்றும் ஆர் காரணிகளால் பாதுகாக்கப்பட்ட கூரைகளைக் கொண்டே எங்களது எதிர்காலக் கட்டுமானங்கள் அனைத்தும் அமையும்.
=மற்ற விளக்குகளைப் போல் அல்லாமல் எல்.ஈ.டி. விளக்குகள் குறைந்த மின்னாற்றலை மட்டுமே பயன்படுத்திக் கொள்வதுடன், குறைந்த அளவு வெப்பத்தையே வெளிவிடுகிறது. அவற்றில் நச்சுப் பொருளான பாதரசம் இருப்பதில்லை.
=எரிப்பதன் மூலம் பிளாஸ்டிக் பொருள்களை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தப்படுவது பல்கலைக் கழக வளாகத்திற்குள் மட்டுமே மேற்கொள்ளப்படும்.
=நோய் தடுப்பாற்றல் கொண்டவை என்று சோதனை மூலம் ஆராய்ந்த பிறகு மூங்கில், கரும்பு மற்றும் வாழை போன்ற கன்றுகளை டிஷ்யூ கல்சர் மூலம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று நிறுவப்படும்.
=கடற்பாசி பூசப்பட்ட கட்டடங்கள் கரிமக் காற்றை கிரகித்துக் கொள்கின்றன.
=வயல்களில் எஞ்சி நிற்கும் நெற்கதிர்களின் அடிப்பாகம் நுண்ணுயிர்களால் அழிக்கப்படுவதற்கு அனுமதித்தல், அவை எரிக்கப்படுவதால் வெளிப்படுத்தப் படும் இயற்கை எரிவாயுவைக் குறைக்கும்.
2025 ஆம் ஆண்டில் எட்டப்பட வேண்டும் என்ற இலக்கை நோக்கிய எங்களது உடனடி செயல்திட்டம்
=பூச்சிக் கொல்லிகளுக்கு மாற்றாக உயிர்பூச்சிக் கொள்ளிகளை மேம்படுத்துவது
=பல்கலைக் கழக வளாகத்துக்கள் தேனீ வளர்த்தல் கரிமக் காற்று வெளிப்படுவதைக் குறைக்கும்
=வழக்கமான டீசல், பெட்ரோலுக்கு மாற்றாக வாகனங்களுக்கு இயற்கை எரிவாயுவும், தாவர டீசலையும் பயன்படுத்துதல்.
=மின்னாற்றலை சேமிக்கும், கரிமக் காற்று போன்ற கழிவுகளைக் குறைவாக வெளியேற்றும், காற்றாலை, சூரிய ஒளி மின்னாற்றல் தயாரிப்பு, எரிபொருள் செல், ஆற்றலை சேமிக்கும் காடு வளர்க்கும் திட்டம் போன்ற திட்டங்களை ஆதரிப்பது.
=சூடாக்குவது, குளிர வைப்பது, விளக்கெரிப்பது போன்றவைகளுக்குத் தங்களுக்குத் தேவையான மின்னாற்றலைத் தாங்களே தயாரித்துக் கொள்ள இயன்ற வகையில் சூரிய ஒளி மூலம் மற்றும் மாற்று முறையில் மின்னாற்றலைப் பரவலாகத் தயாரித்துப் பயன்படுத்தல்.
=கரிமக் காற்று வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியில் நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
=கூடுமானவரை நடந்து செல்வதையோ, சைக்கிளில் செல்வதையோ வழக்கமாகக் கொள்ளுதல். தவிர்க்க இயலாதபோது பொது போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்தல்.
=மறுமதிப்பீடு செய்தல், குறைத்தல், மறுபடியும் பயன்படுத்தல், புதுப்பித்தல், மறுசுழற்சி ஆகிய 5 கொள்கைளைக் கடைப்பிடித்தல்.
முடிவுரை
ஒத்த கருத்துடைய அமைப்புகள், கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் தங்களது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, அவர்களின் தொழில் திறமைகளை எங்களுக்கு அளித்து உதவி, ஆரோக்கியமான, தூய்மை நிறைந்த சுற்றுச்சூழலை மேம்படுத்திப் பாதுகாக்க முன்வரவேண்டும் என பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உண்மையாக விரும்புகிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...