Saturday, July 23, 2011

கைது செய்! கைது செய்!! காமாந்தகாரன் நித்யானந்தாவைக் கைது செய்!! தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜூலை 23- காமலீலை கொடூரன் நித்யானந்தா சாமியாரை உடனே கைது செய்து சிறையில் தள்ள வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக தலைமை கழக பொறுப்பாளர்கள் வலியுறுத்தினர்.

கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு பெண்களை கெடுத்து வரும் காமக் கொடூரன் பாலியல் குற்றவாளி, நவநாகரீக காலத்தின் மோசடிப் பேர்வழி நித்யானந்தா சாமியாரை மீண்டும் கைது செய்து சிறையில் தள்ள வேண்டுமென்று வலியுறுத்தி திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி சார்பில் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.

விண்ணதிர ஒலி முழக்கங்கள்


சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று எழுச்சியுடன் நடைபெற்றது.

இவ்வார்பாட்டத்திற்கு திராவிடர் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி தலைமை வகித்தார்.

மண்டல இளைஞரணி செயலாளர் வை. கலை யரசன்,தென் சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் கு. செல்வேந்திரன், தாம்பரம் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் க. பரந்தாமன், கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர் ரெ. ரமேசு, ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர் வே. கார்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர்கள் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்களை விண்ணதிர முழங்கினர்.

ஆபாசம், ஆபாசம் சாமியார்களின் ஆபாசம்! காமலீலை ஆபாசம், ஆசிரமம் என்று சொல்லி அய்யய்யோ ஆபாசம், யோகப் பயிற்சி என்று சொல்லி செய்கிறான் செய்கிறான் விபச்சாரம் செய்கிறான் கைது செய் கைது செய் காவிகளை கைது செய், ஜாமீனில் வெளியே வந்து சாட்சிகளைக் கலைக்கிறான் மிரட்டுகிறான் மிரட்டுகிறான் ரத்து செய், ரத்து செய் ஜாமீனை ரத்து செய் என்ற ஒலி முழக்கங்களை விண்ணதிர முழங்கினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி தலைமை வகித்துப் பேசினார்.

திராவிடர் கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், மகளிர் பாசறை தலைவர் டெய்சி மணியம்மை, திராவிடர் கழக பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை ஆகியோர் ஆர்ப் பாட்டத்தினை விளக்கி உரையாற்றினர்.

இறுதியாக சென்னை மண்டல செயலாளர் வெ. ஞானசேகரன் நன்றி கூறினார்.

கழக தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ், பெரியார் நூலக வாசகர் வட்ட தலை வர் மயிலை நா. கிருஷ்ணன், கழக கலைத்துறை அமைப்பாளர் மு.அ. கிரிதரன் ஆகிய முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

கலி. பூங்குன்றன்

கழக பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் தமது உரையில் குறிப்பிட்டதாவது: இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத்தின் சார்பில் நித்யானந்தா சாமியாரை கைது செய்யக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அவருடைய முகமூடியைக் கிழிக்க வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நோக்கமாகும்.

தான் ஒரு கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொண்டு பக்தியைப் பயன்படுத்தி மூடநம்பிக்கை களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வருகின்றவர் நித்யானந்தா சாமியார். சாமியார்களில் இவர் ஒரு ரகம். பீர் சாமியார் இருக்கிறார்; பீடி சாமியார் இருக்கிறார்; எச்சில் சாமியார் இருக்கிறார்.இப்படி எத்தனையோ வகையான அருவருக்கத் தக்க சாமியார்கள் இருக்கிறார்கள்.

பாலியல் வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் நித்யானந்தா. 18 மாதங்களுக்கு முன்னாள் இவரது லீலைகளை தொலைக் காட்சி யில் காட்டிய பொழுது உலகம் முழுவதும் தொலைக் காட்சியில் அந்தக் காட்சிகளைப் பார்த்த மக்கள் காரித் துப்பினார்கள். அதன் பிறகு நித்யானந்தா சாமியார் வட மாநிலங்களில் ஓடி ஒளிந்தார்.

அவர் மீது வழக்கு - குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு வந்து ஊடகங்களை மிரட்டுகிறார்.

நித்யானந்தாவின் பாலியல் லீலை வீடியோ உண்மையானது என்று கருநாடக காவல் துறையினர் தெளிவாகவே சொல்லியிருக்கின்றனர். அந்த வீடியோ காட்சி பொய்யானது என்று திசை திருப்புகிறார் நித்யானந்தா.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு தியானம் என்ற பெயரால் பக்தர்களை அழைத்து பறக்க வைப்பதாகக் கூறினார். கடைசியில் எம்பி, எம்பி குதித்த பக்தர்களின் கைகால் எலும்பு முறிந்ததுதான் மிச்சம்.

நித்யானந்தாவை மக்கள் அடையாளம் கண்டு கொண்டனர். ஜாமீனில் வந்தவர் திடீரென பேட்டி கொடுக்கிறார். அது மட்டுமல்ல. ஆசிரமத்திற்கு வரும் பெண் பக்தைகளிடம் அவர் ஒரு வித்தியாச மான உலகில் எங்கும் காணமுடியாத ஒரு அக்ரிமென்ட்டைப் போடுகிறார். அதில் உள்ள முக்கிய செய்தி. நான் உங்களுடன் உடல் உறவு கொள்வேன். அது உங் களை மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் வழி என்று அக்ரிமென்ட் போடுகிறார். பக்தி என்ற பெயரில் பெண்களை பலிகடா ஆக்குகிறார். இது போன்ற எல்லா காவி சாமியார் களையும் சிறையில் அடைக்க வேண்டும். தமிழகத்தில் பெண் ஒருவர் முதல் அமைச்சராக இருக்கிறார். இது போன்ற காமலீலை சாமியார்களை இங்கு அனுமதிக்கக்கூடாது. அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்ற வலியுறுத்தி பேசினார்.

டெய்சி மணியம்மை


கழக மகளிர் பாசறைத் தலைவர் டெய்சி மணியம்மை கூறியதாவது:

பிரம்மச்சரியம் என்ற பெயரில் ஆசிரமத்தில் காம லீலைகளை அரங் கேற்றி வருகிறார் ரஞ்சிதா புகழ் நித்யானந்தா.

நித்யானந்தாவின் காமலீலை களைக் கண்ட பக்தர்கள் காரி உமிழ்ந் தார்கள். நித்தியானந்தா படத்தை மிதித்தார்கள், எரித்தார்கள். மதத்தின் பெயரால் மன்மத லீலைகளை நடத்திவரும் நித்யானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்றார்.

கோ.சாமிதுரை

நிறைவாக திராவிடர் கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ.சாமி துரை தமது உரையில், சாமியார்கள் என்றாலே காமக் களியாட்டம் போடுகிறவர்கள்தான். அது பிரே மானந்தா சாமியாராக இருக்கட்டும், சாயிபாபாவாக இருக்கட்டும், நித் யானந்தாவாக இருக்கட்டும். இப்படி எந்த சாமியாராக இருந்தாலும் அவர்களை நம்பாதீர்கள். சாமியார் களை அரசு கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.

பங்கேற்றோர்

மாநில ப.க. செயலாளர் பிரின்ஸ், டி.கே.நடராசன் ஆகியோரும் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந் தோரும் பங்கு கொண்டனர். அதன் விவரம் வருமாறு;

கழக மகளிரணி: ஏ.பி.ஜே-மனோ ரஞ்சிதம், கு.தங்கமணி, வெற்றிச் செல்வி, பண்பொளி, இறைவி, மீனாட்சி, பசும்பொன், மு.செல்வி, புகழ், ராகவி, மணிமேகலை..

தாம்பரம் மாவட்டம்: ப.முத்தையன், ஆர்.டி.வீரபத்திரன், கோ.நாத்திகன், மு.ஆறுமுகம், பரந்தாமன், மா.இராசு, அரங்கசிவா, அரங்கநாதன், விஜய குமார், சுடர்ரொளி, இராபர்ட், சுகன்லி, நர்மதாதேவி, அம்பேத்கர், பிரதாப், கண்ணன், முத்து, கவுதமன், பரசுராமன், நாகலிங்கம், ரோசி, பெரியார் மாணாக்கன், பேராசிரியர் மு.நீ.சிவராசன்.

ஆவடி மாவட்டம்: ம.ஆ.கந்தசாமி, பா.தென்னரசு, ப.இரகுபதி, கா.வனிதா, உ.மோகனப்பிரியா, மு.செல்வி, இரா.அன்பு, உ.கார்த்திக், இரா.அருண், குப்புராசு, கீதா, இராமதுரை, மு.சங்கர், கு.இளமதி, கு.எழிலரசி, பெரியார் மாணாக்கன், சா.தேவி, மணிமேகலை, செல்வி, இரணியன், அனுசுயா, பாலமுருகன், பாக்கியம், அன்புமணி, மணிகண்டன், கா.காரல் மார்க்ஸ், செ.பெ.தொண்டறம், கொரட்டூர் பன்னீர்செல்வம், உடு மலை வடிவேல், வேலவன், வெ.கார் வேந்தன், பழ.முத்துகுமார்.

தென்சென்னை மாவட்டம்:
இரா.வில்வநாதன், கு.செல்வேந்திரன், மு.சண்முகப்பிரியன், தங்க.ரமேஷ் குமார், க.விஜயராஜா, இரா.பிரபா கரன், மந்தவெளி முகிலன், கனகா, சா.தேவி, மயிலை சேதுராமன், கோ.வீ. ராகவன், வி.வளர்மதி, பி.அஜந்தா, மு.திருமலை, சி.செங் குட்டுவன், குடந்தை நாதன்.

வட சென்னை: தி.வே.சு. திருவள்ளு வன், ராமலிங்கம், ஜோதி, மணி யம்மை, பிரபு, கோபாலகிருஷ்ணன், பாஸ்கர், பிரபாகர், வாசு.

கும்மிடிப்பூண்டி மாவட்டம்: ஆர்.இரமேசு, சக்கரவர்த்தி, கோ.வினோத் குமார், க.கார்த்திகேயன், க.அனந்த குமார், ஆனந்தராசு, தமிழ்பிரபு, பழனி.பன்னீர்செல்வம், பழனி.பாலு.

பொதுக்குழு உறுப்பினர் ராமேசு வரன் சிகாமணி, சத்யநாயராயணசிங், திருச்சி லால்குடி உலகநாதன், மு.சென்னியப்பன், தி.தொ.கழகம் நாகரத்தினம், கோ. வினோத்குமார் ப.க. செயலாளர், க. கார்த்திகேயன் ந.இ.அ. செயலாளர், க. ஆனந்தகுமார், பிரளயம்பாக்கம் ஆனந்தராஜ், ஆ. தமிழ்பிரபு, பழனி. பன்னீர்செல்வம், பழனி கோ. பாலு மற்றும் பலர் பங்கேற்றனர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...