Tuesday, July 12, 2011

விடுதலை செய்திகள் 12/07/2011

தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரும்!

தமிழ்நாட்டில் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடரும்!

கிரீமிலேயரை நீக்கும் பிரச்சினை இங்கு எழவில்லைபிற்படுத்தப்பட்டோர் நல ஆணைய அறிக்கை ஏற்கப்பட்டதுதமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு சென்னை, ஜூலை 12- தமிழ்நாட்டில் நடைமுறையில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற ஆணைப் படி பிற்படுத்தப்பட்டோரிலிருந்து வள மான பிரிவினரை (கிரீமிலேயரை) நீக்குவது தொடர்பாக நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின்...

பட்ஜெட்டுக்கு முன்பாகவே ரூ.4200 கோடி வரி அதிகரிப்பு தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சென்னை, ஜூலை 12-ஆண்டுக்கு ரூ. 4200 கோடி கூடுதல் வரு மானம் கிடைக்கும் வகையில் தமிழக அரசு வரிகளை உயர்த்தி யுள்ளது.

நேற்று இரவு பிறப் பிக்கப்பட்ட வரி மற்றும் கட்டண உயர்வு உத்தரவுகள் நள்ளிர விலேயே அமலுக்கு வந்தன.

சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது

ஜெயேந்திரர், விஜயேந்திரர் 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு


புதுச்சேரி, ஜூலை 12- சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது. வழக்கில் குற்றம் சாட் டப்பட்ட ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் வருகிற 18ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

விடைத்தாள்

தமிழ்நாட்டில் +2 தேர்வில் மதிப்பெண்கள் மறுகூட்டலுக்கு விண் ணப்பித்தவர்கள் 80 ஆயிரம் பேர்கள். இதில் 1500 மாணவர்களுக்குக் கூடுதல் மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஒரு மாணவிக்கு இயற்பியல் பாடத்தில் 59 மதிப் பெண்கள் கூடுதலாகக் கிடைத்துள்ளதாம், எப்படி இருக்கிறது?

ஈழம் மலர்ந்தே தீரும்...! சேலத்தில் பரபரப்பூட்டிய வழக்காடு மன்றம்

ஈழத்தில் மிகப் பெரிய இழப்பு, அதுவே முடிவல்ல-ஈழம் மலர்ந்தே தீரும்...!
சேலத்தில் பரபரப்பூட்டிய வழக்காடு மன்றம்

சேலம், ஜூலை 12-சேலம் மய்யப் பகுதி யான, சின்னக் கடைவீதி, பட்டைக்கோயில் அருகில் 9.7.2011 சனிக் கிழமை சர்வதேச போர்க் குற்றவாளி ராஜபக் சேவுக்கு துணை நிற் போர் குற்றவாளிகளே என்ற தலைப்பில் வழக் காடு மன்றம் நடை பெற்றது.

சமச்சீர் கல்வியைத் தடைப்படுத்தும் நிபுணர் குழுவின் அறிக்கை எரிப்புப் போராட்டம்! கழகத் தோழர்கள் பிணையில் விடுதலை

சென்னை, ஜூலை 12- தி.மு.க. ஆட்சியில் அறி முகப்படுத்தப்பட்டு, செயல் முறைக்கு வரவி ருந்த சமச்சீர் கல்வியை இவ்வாண்டே செயல் படுத்துவதற்குத் தடை விதிக்கும் - அதிமுக அரசால் நியமிக்கப் பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையை திராவிடர் மாணவரணி தோழர்கள்

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சவால்!

தி.மு.க.வினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்போம்!

கோவை, ஜூலை 12-திமுகவினர் மீது போடப் படும் பொய் வழக்கு களை சட்டரீதியாக சந்திப்போம் என்று திமுக பொருளாளர் மு. க.ஸ்டாலின் கூறினார்.

ஊடகத்துறையின் சார்பில் பாதல் சர்க்கார் ஆவணப் படம் திரையிடப்பட்டது

பெரியார் சுயமரியாதை ஊடகத்துறையின் சார்பில் முற்போக்கு சிந்தனை கொண்ட பாதல் சர்க்கார் ஆவணப் படம் திரையிடப்பட்டது

சென்னை, ஜூலை 12- வீதி நாடகத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாதல் சர்க்கார் அவர் களைப் பற்றிய மூன் றாம் அரங்கு என்னும் ஆவணப்படம் பெரி யார் திடலில் உள்ள அன்னை மணியம்மை யார் அரங்கில் 8.7.2011 அன்று திரையிடப்பட் டது.

திராவிடர் இலக்கியத்தின்... இலக்கணமே விடுதலை!

திராவிட இனப்பகைவர்களிட மிருந்து திராவிடர்களைப் பாது காக்கும் கேடயமாகவும், தமிழர் உரிமைக்குப் போராடும் மறவர் களுக்கு, கை வாளாகவும், வஞ்சகர்களுக்கு சிங்கத்தின் வாயாகவும், தமிழினத்தின் எதிர்கால வளர்ச்சிக் குத் தாயாகவும் இருக்கின்ற காரணத் தினாலே தான்... தந்தை பெரியாரின் அடிச்சுவட்டில் அணு பிறழாது நடக்கும் அய்யா ஆசிரியர் அவர்கள் விடுதலை ஏட்டை வளர்க்க பெரு முயற்சி எடுத்து வருகிறார்கள்!..

நீதிக்கட்சி இயக்கத்தின் 1917ஆம் ஆண்டு செயல்பாடுகள் - தொடர் கட்டுரை

தென்னிந்திய நல உரிமைச் சங்கம்

தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தின் கீழ்க்கண்ட உரையை ராவ் பகதூர் பி.தியாகராய செட்டியார் படித்தார்:

போர் முடிவடைந்த பிறகு சில அரசியல் சீர்திருத்தங்களை நடை முறைப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கை கொண்ட பேரரசரின் சட்ட மன்றத்தின் அலுவலர்



No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...