Saturday, June 18, 2011

கடவுள் ஆபாசம்



ஆனந்த விகடன் என்ற ஒரு வார ஏட்டில் கடந்த 27.8.1978ஆம் தேதிய ஏட்டில் 76ஆம் பக்கத்தில் கேரள விஜயம் என்ற தலைப்பில் அந்த கட்டுரையின் ஆசிரியர் பரணீதரன் என்பவர் பக்தியை பரப்பும் மார்க்கமே முழுக்க முழுக்க ஆபாசமும் அருவறுப்பும் நிறைந்துள்ளது. அதில் ஒரு பகுதியை கீழே விளக்குகிறேன்.

27.8.1978ஆம் தேதிய அந்த ஏட்டில் 76ஆம் பக்கத்தில் செங்கன்னூர் பகவதியைப் பற்றி கட்டுரைகளை படித்து விட்டு நிறைய வாசகர்கள் கடிதங்களை எழுதி வருகிறார்கள் என்று குறிப்பிட்டு அடுத்த பாராவில் நான்கு அய்ந்துபேர் அஸ்ஸாமில் கவுகாத்திக்கருகில் உள்ள நீலாசல் மலைப்பகுதியில் உள்ள காமாக்யா கோயிலைப் பற்றிக் குறிப்பிட்டிருந் தார்களாம். அதாவது மகாவிஷ்ணுவால் வெட்டுண்ட தேவியின் யோனிப்பாகம் - அப்பகுதியில்தான் விழுந்ததாக புராணம் கூறுகிறது என்றும், அக்கோயிலின் மூல சந்நிதியில் நீர் கசிவதாகவும், மாதம் மூன்று நாட்கள் மட்டும் செந்நீராக இருப்ப தாகவும், அம்மூன்று நாட்கள் மட்டும் தரிசனம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள் என்றும் அங்கு சென்று மேலும் விவரங்கள் எழுதும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

புராணத்தில் கூறுவதாக எழுதிய வாசகர்கள் மகா விஷ்ணுவால் வெட்டுண்ட தேவியின் யோனிப்பாகம் (பெண் பிறப்புறுப்பு) மட்டும் தானா கவுகாத்தியில் உள்ள மலைப்பகுதியில் உள்ள காமாக்யா கோயிலில் விழுந்தது? அவர்கள் கூற்றுப்படியே விஷ்ணுவால் வெட்டுண்ட தேவியின் மற்ற பாகங் கள் தலை, உடல் பாகம் எங்கு விழுந் தது? அந்ததேவியின் யோனிப் பாகம் (பெண் பிறப்புறுப்பு) மட்டும் தானா புராணம் எழுதியவர் களுக்குத் தெரிந்தது? என்னே புரட்டு? கடவுளச்சியான தேவியின் யோனிப்பாகத் தில் மாதம் மூன்று நாட்கள் மட்டும் செந்நீராக கசிவதாக எழுதியிருப்பது அக்காலப் புராணம் எத்தகைய காட்டுமிராண்டித்தனம்? எவ்வளவு ஆபாசம் நிறைந்தது? இந்த ஆபாசக் காமக்கலையை கடவுளின் பெயரால் இந்த நாகரிக விஞ்ஞான உலகிலும் பத்திரிகைகளில் பரப்புவது இந்த நாட்டில் இதுபோன்ற காமக்கலைகளை எழுதி விளம்பரம் செய்வது, வருங்கால இளைய தலைமுறையினரான படித்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், பகுத்தறிவு உள்ளவர் களாகவும் எப்படி எதிர்பார்க்கமுடியும்?

எனவே, ஆபாசக் காட்சிகளை சினிமா திரைப்படங் களில் வெட்டித் தள்ளும் தணிக்கையாளர்கள் இதுபோன்ற கடவுளின் பெயரால் ஆபாசக் கலையைப் பரப்பும் பத்திரிகைகளின் பெயரிலும் தணிக்கையின் கத்தரிக்கோல் சென்று வெட்டித்தள்ள வேண்டும்; அகற்ற வேண்டும் என்பதுதான் என் தாழ்மையான வேண்டுகோள்.

நன்றியுடன் இங்ஙனம்

தங்கள் உண்மையுள்ள
ச.ராமசாமி
3, வ.உ.சி. தெரு, சென்னை -18.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...