Monday, April 11, 2011


நான் யார் தெரியுமா? மானமிகு சுயமரியாதைக்காரன்!
சென்னை, பிப்.25- மானமிகு சுயமரியாதைக்காரன் என்று தன்னைப்பற்றி ஒரு வரியில் பதில் கூறியுள்ளார் முதல் அமைச்சர் கலைஞர்.

குமுதம் வார இதழுக்கு (2.3.2011) அளித்த பேட்டியில் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அளித்துள்ள பேட்டி வருமாறு: குமுதம்:   வரப்போகும் தேர்தலில் தி.மு.க.வின் வியூகம் எப்படி இருக்கப் போகிறது?

கலைஞர்:   வியூகம் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே சொல்வது வியூக மாக இருக்காதே!

குமுதம்:   அய்ந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய் அரிசி, வீடு வழங்கும் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,108 ஆம்புலன்ஸ் சேவை போன்ற பல மக்கள்நலத் திட்டங்கள் செயல்படுத் தப்பட்டன. இந்த நலத் திட்டங்களில் தாங்கள் மிகப் பெரிய சாதனையாகக் கருதுவது எது?

கலைஞர்:    உணவு, உடை, உறையுள் என்ற மூன்று வாழ்வாதாரங்களும் மக்களுக்கு நிறைவு செய்யப்படுவதையே பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

குமுதம்:   தாங்கள் பல பொதுத் தேர்தல்களைச் சந்தித்தவர். அப்போதைய தேர்தல்களுக்கும், இப்போதைய தேர்தல் களுக்கும் என்ன வித்தியாசத்தைக் காண்கிறீர்கள்?

கலைஞர்:   அப்போதெல்லாம் ஒரு கட்சி மெல்ல மெல்ல வளர்ந்து ஆட்சிக்கு வரவேண்டுமென்ற விருப்பத்துடன் தேர்தல்களைச் சந்திக்கும். ஆனால், இப்போது எடுத்த எடுப்பில் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்ற தணியாத தாகத்துடன் தேர்தல்களைச் சந்திப் பதைக் காண முடிகிறது.

குமுதம்:   எத்தனை எதிர்ப்புகள், சிக்கல்கள் இருந்தாலும் தேர்தல்களை உற்சாகமாகவே சந்திக்கிறீர்கள். அதற் கான பலம் எங்கிருந்து கிடைக்கிறது?

கலைஞர்:  மகாபாரத அர்ச்சுனனின் பலம் வில் பவரில் இருந்ததாகச் சொல் லப்படுகிறது! இந்த மகா சாதாரணமான வனின் பலமும் வில் பவரில்  தான் இருக்கிறது.

குமுதம்: தி.மு.க. தொண்டர்களை எப்படி எப்போதும் உற்சாகமாய் வைத் திருக்கிறீர்கள்? அவர்களை நினைக்கும் போது உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்கள் என்ன?

கலைஞர்:   என்னைப் போல் ஒருவர் தான் தி.மு. கழகத் தொண்டர் ஆவார். நான் உற்சாகமாக இருக்கும்போது அவரும், அவர் உற்சாகமாக இருக்கும் போது நானும் மாறி மாறி உற்சாகம் பெறுவோம்.

குமுதம்:   இப்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்குமா?

கலைஞர்:   பரபரப்பாக பேசப்பட்டு - இப்போது அந்தப் பிரச்சினை பம்பரம் சுற்றி அடங்குவதைப் போல் ஆகி விட்டது!

குமுதம்:   மத்தியில் ஆள்வது காங் கிரஸ் - தி.மு.க. கூட்டணி என்றாலும், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா இந்தப் பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட்டிருக்கிறார். இதனால் கூட்டணிக்குள் பிரச்சினை ஏற்பட்டதா? கைது செய்யப்படுவதற்கு முன் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் செய்தார்கள் என்றும் செய்திகள் உலவுகின்றன. அவை உண்மையா?

கலைஞர்:   இந்தப் பிரச்சினையில் தொடக்கம் முதல் ஆளும் காங்கிரசும் - அதனுடன் தோழமை கொண்ட தி.மு. கழகமும் நீதி வெல்லும் - நிச்சயம் வென்றிட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருவதால் - இடையிடையே உலவுகின்ற செய்திகளைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

குமுதம்:   வரப்போகும் தேர்தலில் எந்தப் பிரச்சினை மய்யமாக இருக்கும் என்று கருதுகிறீர்கள்? உங்கள் பிரச்சாரம் எதை முன்னிறுத்தி இருக்கும்?

கலைஞர்:  எங்கள் ஆட்சிக் காலத்தில் தொடங்கியுள்ள திட்டங்கள் - தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட பணிகள் இவற்றை முன்னிறுத்தி ஏழையெளியோர் வாழ்வில் என்றென்றும் ஒளிவீசிடும் உதயக் கதிராக இருப்போம் என்பதுதான் எமது உறுதி மிக்க பிரச்சாரமாக இருக்கும்.

குமுதம்:   உங்கள் குடும்பத்தினர் திரைப்படத் துறையில் இறங்கியிருப் பதையும் எதிர்க்கட்சிகள் ஒரு குற்றச் சாற்றாகக் கருதுகின்றனவே?

கலைஞர்:   கூண்டோடு குடும்பம் குடும்பமாக திரைப் படத்துறையில் கணவன் - மனைவி, அப்பா - பிள்ளை, மாமன் - மச்சான் என்று எத்தனை பேர் இப்போது ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் - விவேகமும் பிறக்கும்.

குமுதம்:   இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் உங்களுக்கு எதிரான கருத்துகளை சில தமிழர் அமைப்புகள் சொல்லி வருகின்றன. அவற்றுக்கு உங்கள் பதில் என்ன?

கலைஞர்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ஈழத் தந்தை செல்வா அவர் களின் காலத்திலிருந்து என் உணர்வு என்ன என்பதையும் - அதற்காக நான் ஆட்சியை இழந்த நிகழ்வையும் வரலாறு சொல்லும்.

குமுதம்:   துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பயணித்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல் படுத்தி வருகிறார். அவருடைய அயராத உழைப்பு தமிழக மக்களால் வரவேற்கப்பட் டிருக்கிறது. அந்த உழைப்புக்குத் தேர்தலில் நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

கலைஞர்: உங்கள் கேள்வியிலேயே விளக்கமான பதிலும் அடங்கியிருக் கிறது. விதைத்தவன் - வியர்வையை நீராகப் பாய்ச்சியவன் - அறுவடையின் போது அமோகமான பலனைக் காண் பான் என்பது உழைப்புக்கு இந்த உலகு தரும் உற்சாகப் பரிசுதானே!

குமுதம்:  தென்மாவட்டங்களில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கட்சிப் பணி தி.மு.க.வுக்கு நல்ல பலத்தைத் தந்திருப்பதாகப்  பொது மக்களே கூறுகிறார்கள். அவருக்குத் தி.மு.க.வில் மேலும் முக்கிய பொறுப்புகள் தரப்படுமா?

கலைஞர்: தென் மாவட்டங்களில் கழகத்தின் வைரத்தூணாக இருந்து என் இனிய உடன்பிறப்பு தென்னரசு ஆற்றிய பணிகளைத் தான் தம்பி அழகிரிக்கு இப்போது கழகம் தந்துள்ளது. மேலும், முக்கியப் பொறுப்புகளுக்கு அவர் முன்னேறுவார் என்பது என் கணிப்பு.

குமுதம்:   உங்கள் புதல்வர்கள் மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் உங் களைப் போலவே சளைக்காத உழைப் பாளிகளாய் இருக்கிறார்கள். அவர்களுக் குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?

கலைஞர்: ராமன் - லெட்சுமண னைப் போல் இருங்கள் என்று சொல்ல மாட்டேன்; ராவணன் - கும்பகர்ணனைப் போல வாழுங்கள் என்று சொல்வதுதான் என் அறிவுரையாகும்.

குமுதம்:  கனிமொழியும் இப்போது அரசியலில் இருக்கிறார். உங்களுக்கு அவரது அரசியல் பணி பிடித்திருக்கிறதா - கவிதைப் பணி பிடித்திருக்கிறதா?

கலைஞர்:  இரண்டு பணிகளின் துணையோடு அவர் ஆற்றும் சமூக நலப் பணி மிகவும் பிடித்திருக்கிறது.

குமுதம்:  ஆட்சிப் பணி, கட்சிப் பணி, எழுத்துப் பணி என ஓய்வில்லா வாழ்க் கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். மனதையும் உடலையும் சோர்வடையாமல் வைத்துக் கொள்ள தாங்கள் கடைப் பிடிக்கும் பழக்கங்கள் என்ன?

கலைஞர்:   அதிகாலையில் அய்ந்து மணிக்கெல்லாம் உறக்கம் கலைந்து உதயசூரியனைக் காணுகிறேன் - என் சோர்வு போக்க அது ஒன்று போதாதா?

குமுதம்:    எழுபத்தைந்துக்கு மேற் பட்ட திரைப் படங்களில் பணியாற்றியிருக் கிறீர்கள். அப்போதைக்கும் இப்போதைக் கும் திரைப்படத் துறையில் நீங்கள் காணும் வித்தியாசங்கள் என்ன?

கலைஞர்:   பொன்னர்-சங்கர் என்ற கொங்குச் சீமை வீரர்களின் கதை விரைவில் திரைப்படமாக வருகிறது; அதைக் காணுங்கள் - வித்தியாசம் புரியும்.

குமுதம்:  ஆறாவது முறையாக முதல் வரானால் தமிழக மக்களுக்குச் செய்ய வேண்டும் என்று சிறப்புத் திட்டங்கள் ஏதேனும் சிந்தித்து வைத்திருக் கிறீர்களா?

கலைஞர்:   எந்தத் திட்டமானாலும் அது ஏழையெளியோர் வாழ்வதற்கும் வளம் பெறுவதற்கும் பயன்படும் திட்ட மாகவே இருக்கும்.

குமுதம்:    இந்த ஆட்சியில் செய்ய நினைத்து - செய்ய இயலாமல் போன காரியங்கள் உண்டா?

கலைஞர்:  மத்தியில் தமிழும் ஆட்சி மொழி - சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி - மாநில சுயாட்சி - இவை தான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.

குமுதம்:    கலைஞர் - சிறுகுறிப்பு வரைக என்று உங்களிடமே கேட்டால், நீங்கள் என்ன எழுதுவீர்கள்?

கலைஞர்:    மானமிகு சுயமரியாதைக்காரன் என்று ஏற்கெனவே பதில் அளித்திருக்கிறேனே!

குமுதம்:    உங்கள் மேல் சோவுக்கு என்ன கோபம்? கடுமையான தாக்கு தல்களைத் தொடுக்கிறாரே? அ.தி.மு.க., - விஜயகாந்த் கூட்டணி வேண்டும் என்று குரல் கொடுக்கிறாரே?

கலைஞர்:    சோ மட்டுமல்ல - யார் என்மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்தாலும் - அவர்கள் ஏற்கெனவே என்னைப் பற்றி புகழ்ந்து எழுதியவை களையும், கூறியவைகளையும் நினைத்துக் கொண்டு புதிய தாக்குதல்களைப் புறந்தள்ளிவிடுகிறேன்.

குமுதம்:    பழைய தலைமைச் செய லகத்துக்கும், புதிய தலைமைச் செயல கத்துக்கும் என்ன வேறுபாடு காண் கிறீர்கள்?

கலைஞர்:    இதுவரையில் பழைய தலைமைச் செயலகத்தில் அமர்ந்து 5 முறை முதலமைச்சர் பணியாற்றியிருக் கிறேன். என் வாழ்க்கைச் சரித்திரத்தில் பழைய தலைமைச் செயலகம் 50 ஆண்டுகளை ஆக்கிரமித்துக் கொண்ட செயலகமாகும். புதிய தலைமைச் செயலகம் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அல்லாமல் நாமே அடித்தளம் வைத்து, நாமே கட்டி முடித்து பூரிப்போடு அமர்ந்திருப்பதை எண்ணும்போது பெருமிதமாக இருக்கிறது.

குமுதம்:    இந்த கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்?

கலைஞர்:   இந்தியாவுக்கு வாய்ப்பு இருக்கிறது.

குமுதம்:    பா.ம.க.வைத் தொடர்ந்து வேறு கட்சிகள் தி.மு.க. கூட்டணியில் சேர வாய்ப்பு இருக்கிறதா?

கலைஞர்:   வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.

குமுதம்:    வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிடுவீர்கள்?

கலைஞர்:  234 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் (முகத்தில் புன்னகை).

குமுதம்:   தேர்தலில் வெற்றி வாய்ப்பு உங்கள் கூட்டணிக்கு எப்படி இருக் கிறது?

கலைஞர்:  வெற்றி வாய்ப்பு அமோக மாக இருக்கிறது! (சொல்லும்போதே, கலைஞரின் முகத்தில் அபரிமிதமான மகிழ்ச்சி).
ன்றி: குமுதம் 2-3-2011

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...