Tuesday, January 4, 2011

பிரபல பல் மருத்துவர் ஜே.ஜி. கண்ணப்பன்


(தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் பிரபல பல் மருத்துவர் ஜே.ஜி. கண்ணப்பன் 30.12.2010 அன்று மறைவுற்றார் அவர் நினைவாக இக்கட்டுரை.)

பேராசிரியர் ஜே.ஜி. கண்ணப்பன் அவர்கள் 1934 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி பிறந்தார்.

பள்ளிப்படிப்பை கிராமியச் சூழலில் பயின்ற இவர் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பை மும்பை பல்கலைக் கழகத்தில் 1965 ஆம் ஆண்டு முடித்தார்.  1958ஆம் ஆண்டு இவர் ஆசிரியப் பணியை மேற்கொண்டார்.  பி.டி.எஸ்., எம்.டி.எஸ்., எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்ஸி., (பல்மருத்துவத் தடய இயல்) போன்ற பட்டப் படிப்பு மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணி-யாற்றினார்.  சென்னை பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில். பயிலும் மாணவர்களுக்கும் வழி-காட்டியாகத் திகழ்ந்தார்.  1948ஆம் ஆண்டு முதல் என்.சி.சி. இள-நிலைப் பிரிவு, என்.சி.சி. முதுநிலைப் பிரிவு, துப்பாக்கிப் பயிற்சி, விமானப் பயிற்சி பெற்றார்.  அதில் கேப்டனாக ஆக மருத்துவ மாணவர்களுக்குப் பயிற்சி அறித்துள்ளார்.

நம் இந்தியத் திருநாட்டுக்குத் தொண்டு செய்வதே இவரது வாழ்வின் இலட்சியம்.

பண்டித ஜவஹர்லால் நேருவின் அய்ந்-தாண்டுத் திட்டத்தின் பயனால் அரசு உதவி-யுடன் இவர் தனது இளங்கலைப் பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பு மற்றும் பல் மருத்துவம் சார்ந்த வெளிநாட்டு மேற்படிப்பு ஆகியவற்றைப் படித்து முடித்தார்.  இதற்காக இவர் நேருவின் அய்ந்தாண்டுத் திட்டத்தை நன்றி-யுடன் நினைவு கூர்கிறார்.  இவர் உலகம் முழுவதும் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பல்வேறு நாடுகளில் பல் மருத்துவம் பற்றி உரையாற்றி நம் இந்தியத் திருநாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சிறந்த சமூக சேவகராக விளங்கிவரும் இவர் நம் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், பிறவிக் குறைபாடு உடைய நோயாளிகளுக்கும் தமது மருத்துவ சேவையின் மூலம் இன்றளவும் தொண்டாற்றியவர்.

1958ஆம் ஆண்டில் நமது இந்திய குடியரசுத் துணைத் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் சர். இராதாகிருஷ்ணன் அவர்களுக்கு, செக்கோஸ்லேவேக்கிய பிரதமரால் அளிக்கப்-பட்ட அரசு நடமாடும் பல்மருத்துவ ஊர்தியின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் குக்-கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள ஏழை எளிய மக்களுக்கு மருத்துவப்பணி ஆற்றியுள்-ளார்.  இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியைப் பின்னர் இவர் தமிழ்நாடு அரசுக்கே அன்பளிப்-பாக அளித்துவிட்டார்.

இவர், அடித்தட்டு மக்களிடம் காணப்பட்ட தொழுநோய் பற்றியும், வாய்ப்புற்று நோய் பற்றியும் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்-கொண்டு, அம்மக்களுக்குச் சிகிச்சையும் அளித்-தவர். பல்மருத்துவத் தடவியல் பற்றியும் பிளவு-பட்ட அண்ணங்களைச் சீர்படுத்துதல் பற்றியு-மான இவரது ஆராய்ச்சி குறிப்பிடத்தக்கது மட்டுமின்றி பாராட்டுக்கும் உரியது.

இவரது படிப்புக்கு, இந்திய அரசு செய்த உதவியை மனதிற்கொண்டு பிற்காலத்தில் இளையதலைமுறையினருக்கு மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குப் பண உதவியும், விருதுகளும் வழங்கும் வண்ணம் பல சமூக அமைப்புகளை உருவாக்கியுள்ளார்.  இதன் மூலம் நம் இந்தியத் திருநாட்டில் விஞ்-ஞான வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்.

இலட்சக்கணக்கான மக்கள் படித்துப் பயன்பெறும் வகையில் இவர் பல்வேறு முன்-னாடி ஆங்கில, தமிழ் இதழ்களில் பல விஞ்-ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

மருத்துவத் துறையில் நம் நாட்டின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக இவரது மருத்துவ ஆராய்ச்சி நூல்கள் உலகின் பல்வேறு நூலகங்களில் பாதுகாக்கப்பட்டு பயன்படுத்தப்-பட்டு வருகின்றன.

இவர் ஆற்றிய பணிகள் - பெற்ற விருதுகள்:

முதல்வர் (ஓய்வு), தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை.

முன்னாள் தலைவர், தமிழ்நாடு பல் மருத்துவக் குழு

முன்னாள் நிருவாகக்குழு உறுப்பினர், இந்தியப் பல் மருத்துவக் குழு.

முன்னாள் தலைவர், இந்தியப் பல் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு.

உறுப்பினர், உலக மருத்துவ விஞ்ஞானக் குழு.

உறுப்பினர், பியர்ஃபவுச்சார்ட் அகாடமி

உறுப்பினர், (ஹானரிகாசா) இந்தியப் பல் சீரமைப்பியல் குழு மேலும் இவர் 
பெற்ற பல்வேறு விருதுகள்.

டாக்டர் பி.சி. ராய் தேசிய விருது, 1982.

ஹரி ஓம் ஆஷ்ரம் அலெம்பிக் ஆராய்ச்சி விருது, 1992 (இந்திய மருத்துவக் 
குழுவின் மூலமாக)

பேராசிரியர் எச்.டி.குப்தா விருது, லக்னோ - 1989.

சிறந்த விஞ்ஞானிக்கான விருது - லயன்ஸ் கிளப் -1990.

வி.ஜி.பி. சந்தானம் அம்மாள் இலக்கிய விருது - 1990.

சென்னை பல்லவா ரோட்டரி கிளப் சார்பில் கவுரவ விருது 1993 -94.

தமிழ்நாடு அரசின் விஞ்ஞானத் தொழில்நுட்ப கவுன்சில் அளித்த தமிழ்நாடு 
விஞ்ஞானிகளுக் கான விருது - 1994-95

பெரியார் விருது - 1998.

சேவாரத்னா நூற்றாண்டு விருது_-1998.

ISDR  விருது - 2003.

சென்னை பாட்னா ரோட்டரி கிளப் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது - 2004.

குறள்நெறி மருத்துவர் விருது - 2005 மாணவர் மற்றும் 75ஆம் ஆண்டு 
விழாவில்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...