Thursday, January 27, 2011

பொன்மொழிகள் - விடுதலை


1: மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக்காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை. (விடுதலை, 10.10.1973)

2: பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மை யினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.(விடுதலை, 30.12.1972)

3: தொழிலாளர்களுக்குச் சிறிது கூலி உயர்வு கொடுப்பதைவிட அவர்களுடைய பிள்ளை குட்டிகளுக்குக் கல்வி, சம்பளம் இல்லாமல் படிக்க வசதி வேண்டும்; சோறு போடவேண்டும்; மற்ற வசதிகள் எல்லாம் செய்துதரவேண்டும்._ (விடுதலை, 23.2.1960)

1: பார்ப்பானைத் தவிர்த்த மற்ற மக்கள் எல்லாம் திராவிடர்கள்தான். பார்ப்பனர்கள் என்பவர்கள் ஆரியர்கள்தான். இதை அவர்கள் பின்பற்றுகிற கலாச்சாரப்படிக் கூறுகிறோம். (விடுதலை, 24.2.1954)

2: கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில்லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடியாதவனுக்குத் தலைவிதி._(86 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் விடுதலை மலர்)

3: தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும்.(விடுதலை, 20.3.1950)

1: சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது.(விடுதலை,5.4.1961)

2: பார்ப்பான் என்கின்ற பெரிய மரத்திற்கு வேர் கடவுளும், மதமுமேயாகும். இந்த வேரை அழித்தால் மரம் தானாகவே வீழ்ந்துவிடும்.(விடுதலை,20.9.1964)

3: நம் நாட்டினருக்கு என்ன கலை, என்ன குறிக்கோள், என்ன நாகரிகம் என்று கேட்டால் அதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் ஒன்றைத்தான் எடுத்துக்காட்ட முடியும்.(விடுதலை,3.10.1958)

1: ஆரியப் பண்டிகைகளின் அடிப்படைக் காரணமெல்லாம் திராவிடர்களை ஆரியர்கள் அடக்கினது; கொன்றது; இழிவுபடுத்தியதுதான். அதுவும் சாதாரண மக்களைக் கடவுள் அவதாரம் என அழைத்து நமது அரசர்களை அசுரர்_சூத்திரர் என்று இழிவுபடுத்தி ஏற்படுத்தப்பட்ட பண்டிகைகள்.(விடுதலை,18.1.1951)

2: நமக்குக் கேடும், இழிவும் ஏற்பட்டதான போராட்டத்தில் வரும் உற்சவம், பண்டிகைகள் ஆகியவற்றை நாம் திராவிடர்கள், அதாவது சூத்திரர்கள் என இழித்துக் கூறப்படுபவர்களாகிய நாம் கொண்டாடலாமா?(விடுதலை,17.10.1965)

3: மனிதன் என்பதற்கே பொருள், விசயங்களை ஆராய்ந்து பார்த்து, நன்மை - தீமை என்பதை உணர்ந்து, சகல துறைகளிலும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிற தன்மை உடையவன் என்பதேயாகும்.(விடுதலை,26.3.1951)

1: பக்தி என்பதற்கு முட்டாள்தனம், பேராசை, தன்னலம் என்பதைத் தவிர வேறு சொற்கள் தமிழில் இல்லவே-யில்லை. இந்த மூன்று குணமும் மனிதனுக்குக் கூடாது என்றுதான் சொல்லவேண்டும்.(விடுதலை,17.11.1958)

2: நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்கள் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால், நமது நாட்டில் மதமும், மூட நம்பிக்கையும் ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதியாயிருக்கிறது.(குடிஅரசு,13.4.1930)

3: கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை; அறிவில் லாதவனுக்கு ஆண்டவன் செயல்; தவறை உணர முடி யாதவனுக்குத் தலைவிதி.(86 ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாள் மலர்)

1: தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக்கொண்டு கரையேற நினைப்பதுபோல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளி களும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களையும் பெரிதாக்குகிறார்கள்.(விடுதலை, 12.7.1972)

2: மக்களை முட்டாள்களாக்கப் பசனை செய்யுமாறு பிரச்சாரம் செய்வதை விட்டு, மக்களை அறிவுள்ள மக்களாக்க அறிவுப் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும்.(விடுதலை, 5.1.1972)

3: ஆங்கிலத்தில் நாணயத்துடன், நேர்மையுடன் நடந்துகொள்வதே சிறந்த கொள்கை என்ற பழமொழி உண்டு. அதாவது நாணயம் என்ற சொல் யோக்கியதையினால் வளர்ச்சி-யடையும் ஒரு திட்டத்தைக் குறிப்பதாகும்.(விடுதலை, 23.10.1964)

1: பிறவியில் மனிதன் அயோக்கியனல் லன்; அறிவற்றவனல்லன்; ஒழுக்கக் கேடான-வனல்லன்; சூழ்நிலை, சுற்றுச்சார்பு, பழக்கவழக்கங்களால் தான் மனிதன் அயோக்கியனாகவும், மடையனா-கவும் ஆகின்றான்.(விடுதலை, 
11.11.1968)

2: நாம் பார்ப்பானைப் பிராமணன் என்று சொன்னால் நாம் நம்மைச் சூத்திரன் என்று ஒப்புக்கொள்கிறோம் என்பதுதான் பொருள். இனி நமது மக்கள் பார்ப்பானைப் பார்ப்பான் என்றே அழைக்கவேண்டும்.(குடிஅரசு, 2.2.1971)

3: ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ?(விடுதலை, 21.3.1954)

1:சமஸ்கிருதத்தினால் தமிழர்களும், தமிழ்நாடும் இன்று என்ன நிலைமைக்குத் 
தாழ்ந்து தொல்லையும், மடமையும், இழிவும் அனுபவிக்கிறோம் என்பதைச் சிந்திக்கவேண்டும்.- (விடுதலை, 5.8.1963)

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...