Friday, January 28, 2011

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே...


அன்பார்ந்த விடுதலை வாசகர்களே...

வணக்கம்.

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடாகவும்,  இணையத்தில் வெளிவந்த முதல் தமிழ் நாளேடாகவும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் போர்வாளாகவும் திகழும்  விடுதலை இணைய தளம் தற்பொழுது பல மாற்றங்களுடன் புதுப்பொலிவுடன் வெளிவருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தரும் ஆதரவின் மூலமாக அறிகிறோம்.

விரைவில், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள், விடுதலை இணைய வாசகர்களுக்காக மட்டுமே தொடர் கட்டுரை எழுத இருக்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்வு அடைகிறோம்.

அதேபோல, விடுதலை நாளேட்டில் வரும் செய்திகள் தவிர்த்து, உடனுக்குடன் செய்திகளை நாம் வழங்கி வருகின்றோம்.

மேலும் பல தகவல்களுடன், புதிய கட்டுரை, படைப்புகளுடன் விடுதலை இணைய தளம் வெளிவருவதற்கு உங்களுடைய பங்களிப்பும் தேவை.
இணைய பதிப்பில் உங்களுடைய கவிதை, கட்டுரை,  பகுத்தறிவு தகவல்கள் வெளிவருவதற்கு  ஏதுவாக தங்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.
புதிய செய்திகளையும் உடனுக்குடன் newseditor@viduthalai.in என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

மேலும் விடுதலை கருவிப்பட்டை வழங்கியிருந்தோம். இப்போது 2011 பெரியார் நாள்காட்டியை உங்கள்து கணினியின் Desktop-இல் Wall Paper-ஆக பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம்.

பதிவு செய்த பயனாளர்களுக்கு மட்டும் கீழ்க்காணுமாறு ’பதிவிறக்குக’ என்னும் பொத்தானின் கீழ் பதிவுப்பட்டை, நாள்காட்டி ஆகியவற்றுக்கான இணைப்பு இருக்கும். அதைச் சொடுக்குவதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


இவ்வாறு தொடர்ந்து புதுமைகளைப் புகுத்துவதற்கு ஏதுவாக, உங்களுக்கென்று விடுதலை இணையத்தில் தனிக் கணக்கினை தொடங்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகின்றோம்.

இனிவரும் நாள்களில், விடுதலை இணையத்தில் பதிவு செய்துள்ளவர்கள் மட்டுமே விடுதலை மின்னிதழை (இ-பேப்பர்) படிக்கக் கூடிய வகையில் மாற்றம் செய்யவிருக்கின்றோம். அனைவரும் விடுதலையை படிக்கலாம் என்றாலும், பதிவு செய்தவர்களே அதிகம் பயன்பெற வாய்ப்புகள் உண்டு.

ஆகவே, தாங்கள் உடனடியாக பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். பதிவு செய்வதற்கோ, படிப்பதற்கோ எவ்விதக் கட்டணமுமின்றி எப்பொழுதும்போல் தொடர்ந்து விடுதலை இணையம் செயல்படும்.

பதிவு செய்ய வ்விணைப்பைச் சொடுக்கவும்.

நன்றி!
விடுதலை இணையக் குழுவினர்

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...