Wednesday, December 29, 2010

பக்தியிலும் பாரபட்சமாம்!


சபரிமலையில் தமிழக பக்தர்களிடம் காட்டும் அலட்சியம்

சபரிமலை ஜன.11 சபரிமலையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள கேரள காவல்துறையினர் தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக தமிழக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

சபரிமலையில் அய்யப்பன் சிலையை பார்ப்பதற்காக பக்தர்கள் வருகிறார்கள். சில தினங்களில் பக்தர்கள் சுமார் 13 மணி நேரம் காத்திருந்து சிலையைப் பார்த்துச் செல்லும் நிலையுள்ளது.

இதில் பம்பையில் இருந்து வரும்போது பக்தர்களை தடுத்து நிறுத்தி குழுக்கள், குழுக்களாக அனுப்புகின்றனர். அய்யப்பன் கோயிலுக்கு வருகை தருவதில் சுமார் 60 சதவிகிதம் பேர் தமிழர்கள். பம்பையில் இருந்து வரும்போது மரக்கூட்டம் பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்துகின்றனர். கேரள பக்தர்கள் என்றால் அவர்களிடம் கனிவாகப் பேசுகிறார்கள். தமிழகப் பக்தர்களை பிடித்து கீழே தள்ளிவிடுகின்றனர்.

அதேபோல சரங்குத்தி பகுதியில் தண்ணீர் குடிக்க வரிசையை விட்டு வெளியே வந்தால் லத்தியால் அடிப்பது போன்ற செயல்களில் கேரள காவல்துறையினர் ஈடுபடுவதாக தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். பூசாரியாகப் போகலாமோ!

அறிவியலில் புதுமை சிந்தனை வேண்டும். ஒரு விஷயத்தை அறிவியல் உணர்வோடு சேர்த்து ஆன்மிக உணர்வோடும் அணுக வேண்டும் என்று சொல்லியிருப்பவர் மாங்காடு மாரியம்மன் கோயில் பூசாரியல்ல - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனருமல்ல. சொல்லியி ருப்பவர் சென்னை அய்.அய்.டி., இயக்குநரான திருவாளர் ஆனந்த் அய்யர். அய்யர் அல்லவா - ஆன்மிகத்தை விட்டுக் கொடுத்துவிட முடியுமா? அங்குதானே அவாளின் உயிரே வாழ்ந்து கொண் டிருக்கிறது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...