Wednesday, December 29, 2010

அய்யப்பன் பேன் குத்தப் போனானா?


பாதுகாப்பு குறைபாடே விபத்துக்குக் காரணமாம்!

திருவனந்தபுரம், ஜன. 18- சபரிமலை பொன் னம்பல மேட்டில் மகர ஜோதியை காண  பக் தர்கள் குவிந்திருந்தனர். ஜோதி தரிசனம் முடிந்து திரும்பிய போது புல்லு மேடு பாதையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 106 பக்தர்கள் இறந்தனர். கடந்த 1999 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பம்பையில் ஏற் பட்ட நெரிசலில் சிக்கி 53 பேர் இறந்தனர்.

இது பற்றி விசாரிக்க நீதிபதி சந்திரசேகர மேனன் தலைமையில் அமைக் கப்பட்ட குழு புல்லு மேடு பகுதி மிகவும் ஆபத்தான என்று எச் சரிக்கை விடுத்திருந்தது.

சபரிமலை, பெருவழி பாதை, புல்லுமேட்டு பாதைகளில் போதிய வசதிகள் செய்ய வேண் டும், பாதுகாப்பு ஏற்பாடு கள் மேம்படுத்த வேண் டும், இவற்றை முழுமை யாக அமல்படுத்திய பின்பே பக்தர்களை இந்த வழியாக அனு மதிக்க வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தி இருந்தது.

தக்க நடவடிக்கைகள் இல்லை

ஆனால் அறிக்கை அளிக்கப்பட்டு ஆண்டு கள் பல ஓடிவிட்ட நிலையிலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கேரள அரசும், சபரி மலை தேவசம் போர்டும் இதற்கான எந்த ஏற் பாட்டையும் மேற் கொள்ளவில்லை. கடந்த 14 ஆம் தேதி இரவு புல்லுமேட்டில் ஏற் பட்ட நெரிசல் சாவுக்கும் பாதுகாப்பு குறைபாடே காரணம் என்று இப் போது தெரிய வந்துள் ளது.

ஆந்திரா, கருநாடகா பக்தர்கள் பலரும் இந்த கருத்தைத்தான் வெளி யிட்டனர். கேரள முதல மைச்சர் அச்சுதானந்தன் விபத்து பற்றி நீதிபதி தலைமையில் விசா ரணை நடக்கும் என்று அறிவித்துள்ளார்.

அதற்கு முன்பு கேரள குற்றப்பிரிவு காவல் துறையினர் தங்களின் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஏ.டி.ஜி.பி. சந்திர சேகரன், காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று முதற்கட்ட விசாரணையை தொடங் கினர்.

பக்தர்கள் இறந்து போன இடத்தில் தடயங்கள் சேகரிக்கும் பணியிலும் விசார ணைக் குழுவினர் ஈடு பட்டனர். பக்தர்களின் பொருள்கள், அக்கம் பக்கத்தாரின் கருத்து களையும் விசாரணைக் குழுவினர் கேட்டறிந்த னர்.

சபரிமலை விபத்தில் சிக்கி உயிர் இழந்த வர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 37 பக்தர்களின் உடல்களும் உறவினர் களிடம் ஒப்படைக்கப் பட்டுவிட்டன. இந்த விபத்தில் இறந்த 8 பேரின் உடல்கள் அடை யாளம் தெரியாமல் உள்ளது. 8 பேரின் உடல்களும் கோட்டயம் அரசு மருத்துவமனை யில் வைக்கப்பட்டுள் ளன.

காவல்துறையினர் இவர்களின் பெயர் விவ ரங்கள் மற்றும் முகவரி களை விசாரித்து வரு கின்றனராம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...