Tuesday, March 4, 2008

சென்னையில் ஏசு! மூடப் பிரச்சாரம் பிசுபிசுத்தது!

சென்னையையடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள சூசையப்பர் ஆலயத்தின் மணிக்கூண்டு கோபுரத்தில் இயேசுவின் முகம் தெரிவதாக ஞாயிற்றுக் கிழமை வதந்தி பரவியது. செய்தித்தாள்களும் படத்துடன் வெளியிட்டு விளம் பரம் செய்தவுடன் மக்கள் குவியத் தொடங்கிவிட்டனர். கடந்த ஞாயிறன்று (02.03.08) அக்கோயிலில் பூசைக்கு வந்த பக்தர்களில் யாரோ ஒருவர் முதலில் பார்த்ததாகவும், னர் பார்த்த அனைவரும் இயேசுவின் முகம் தெரிவதாகக் கூறியவுடன் வதந்தீ பரவத் தொடங்கியிருக்கிறது. இது பற்றி அப்பகுதியில் வசிக்கும் திராவிடர் கழக இளைஞரணி தோழர் பிரபாகரன் தெரிவித்த தகவலையடுத்து திங்கள் கிழமை இரவு இதுகுறித்து நேரில் ஆய்வு செய்ய றனர் இளைஞணியினர்.
மணிக்கூண்டில் இருந்து வழிந்த மழைநீரால் பாசி உருவாகியிருக்கிறது. அதில் மங்கலாகத் தெரியும் உருவத்தை, தங்களுக்கேற்றாற்போல் உருவகம் செய்துகொண்டு இயேசு தெரிவதாகப் புரளி கிளப்பி விட்டிருக்கிறார்கள். இதைப் பார்த்துக் கொண்டு இருந்த கூட்டத்தில் திடீரென ஒருவர் பக்கத்து தூணில் மேரி மாதா கையில் குழந்தையோடு தெரிவதாகச் சொல்ல அதையும் பார்த்து பரவசமடையத் தொடங்கிவிட்டார்கள். மேரி மாதாவின் கையில் குழந்தை, பின்னால் ஒளிவட்டம், அவர் அணிந்திருக்கும் கவுன், தலையில் மூடியிருக்கும் முக்காடு எல்லாம் தெரிவதாகக் கூறி இங்கே நடக்கிறார் என்றால் அங்கே பறக்கிறார் என்று வதந்தீ பரவும் என்பதைப் போல பரவத் தொடங்கி விட்டது.

இப்படி அடுத்தடுத்து வரும் செய்திகள் பற்றி அக்கோயிலின் இளம் பாதிரியார் சவரி முத்துவிடம் கேட்டபோது, கடவுள் பல வடிவங்களில் தன்னுடைய இருப்பை நிரூபிப்பதாகவும், அவ்வப்போது இவ்வாறு மக்களுக்கு காட்சி தருவதாகவும் கூறினார். நேற்று வெறும் இயேசுவின் உருவம் மட்டும் தெரிந்த நிலையில் இன்று மாதாவின் உருவமும் உருவாகியிருப்பதாகவும் சிலுவைத் தெரிவதாகவும் பார்த்து மக்கள் நம்புகிறார்கள். நாளை இந்த உருவம் இன்னும் தெளி வாகத் தெரியக்கூடும். எனவே இன்னும் கூர்ந்து பார்த்தால் உருவாகியிருக்கும் மற்ற உருவங்களையும் பார்க்கலாம் என்றார் அவர்.

இதுதான் சமயமென்று தூணில் தெரியும் உருவத்தைப் புகைப்படம் எடுத்து, அதை இயேசு உருவத்துடன் ஒப்பிட்டுப் புகைப்பட வியாபாரம் ஜரூராக நடந்துவருகிறது.வினா எழுப்பிய கழகத் தோழர்கள்கூட்டத்தில் சிலரிடம் கேட்டபோது எனக்கு எம்.ஜி.ஆர் உருவம்போல் தெரிகிறது என்றார் சந்துரு என்ற எம்.ஜி.ஆர். பற்றாளர். இன்னொருவர் பக்கத்தில் இருந்த இன்னொரு தூணில் மான் உருவம் தெரிவதாகக் காட்ட பின்னர் மான் காட்சி யளிக்கத் தொடங்கிவிட்டது.

* கோயிலுக்குள் காட்சி தராமல் இப்படி தூணின் அடியில் பாசியில் தெரிவது ஏன்?

* இயேசு, மாதா என்று தொடர்ந்து உருவங்கள் உருவாகி வருகிறது என்றால், முதலில் மாதா உருவம் வந்து பின்னர்தானே மகன் இயேசு வின் வடிவம் வந்திருக்க வேண்டும்.?

* மழைநீரால் உருவாகி யிருக்கும் பாசி தானே அப்படித் தெரிகிறது. முழுதும் பாசியை சுரண்டிவிட்டு, அந்த இடத்தில் சுண்ணாம்பு அடித் தால் அவ்விடத்தில் மீண்டும் இவ்வுருவங்கள் தெரியுமா?

* சுரண்டப்பட்ட பாசி யைப் பரிசோதித்தால், அது இன்று நேற்று உருவானதா, அல்லது மழைநீர் வழிந்து உருவாகி நீண்ட நாட் களாகிவிட்டதா என்று தெரி யுமே? அதற்குத் தயாரா?

என்பது போன்ற அறிவார்ந்த கேள்வியை எழுப்பினார்கள் திராவிடர் கழக இளைஞரணி தோழர்கள்.ஆனால் இக்கேள்விகளுக்கு நம்பிக்கை என்று பதில் கூறித் தப்பித்தார்கள் பக்தர்கள். அங்கு குடியிருந்த இளைஞர் களோ, ஆம், அதுதான் சரி. அப்படி சுண்ணாம்பு அடித்த பின்னும் இயேசு உருவம் உருவானால் அப்போது நாங்கள் நம்புகிறோம் என்று உரக்கக் குரலெழுப்பட் தொடங்கிவிட்டனர்.

மாதா உருவத்தை தான் கண்டு பிடித்ததாக தன்னை அறிமுகம் செய்துகொண்ட சீனிவாசன் என்ற கணினிப் யாளரை, செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட ஆட்டோ நர்கள் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்டுட் திணறடித்தனர்.

உடுமலை, வை.கலையரசன், கருணாகரன், ரவிக்குமார், ராஜசேகர், ச.பிரின்சு என்னாரெசு பெரியார் உள்ளிட்ட ஏராளமான இளைஞரணித் தோழர்கள் நேரடியாக அவ்விடத்திற்கு சென்று கேள்விகளை எழுப்பினர்.

நன்றி: விடுதலை (04.03.2008)

2 comments:

Unknown said...

அய்யா பெரியார் அவர்கள் இந்து மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளையும் அதை உருவாக்கிய பார்பனர்களையும் எதிர்த்து போராடினார். இன்றோ இந்து மதத்தை விட நூறு மடங்கு அதிக மூட நம்பிக்கைகளை பரப்பும் மதமாக கிறிஸ்துவ மதம் மாறியுள்ளது. பல ஏழை அப்பாவி மக்களை ஆசை காட்டி ஏமாற்றி மதம் மாற்றி காசு சம்பாதிக்கும் பாதரியார்கள், போதகர்கள் இப்போது தமிழகத்தில் அதிகம் உருவாகியுள்ளனர். இதை தடுத்தே ஆகவேண்டும். இல்லை என்றால் தமிழர்களை முட்டாள்களாக்கி விடுவார்கள்.

ஜோ/Joe said...

பெரியாரும் பெரியாரியக்கமும் இந்து மதத்தை மட்டும் தான் சாடுவார்கள் ,மற்ற மதங்களை சாட தைரியம் உண்டா என்று வெத்துக் கேள்விகள் கேட்கும் பலரை இங்கே காணவில்லையே.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...