Thursday, September 6, 2007

பாரீசிலும் பகுத்தறிவுக் கொள்கை

பார்ப்பனர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், எந்த ஊருக்குச் சென்றாலும், எங்கு குடியிருப்புகளைப் புதிதாக அமைத்தாலும் அவர்கள் செய்கின்ற முதல் வேலை -முக்கியக் கடமையாக நினைக்கின்ற வேலை ஒரு கோயிலை எழுப்புவதுதான்.

நியூயார்க் சென்றாலும் ஒரு பிள்ளையார் கோயிலைக் கட்டி, தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பனப் புரோகிதர்களைத் தருவித்து, மகாகும்பாபிஷேகம் செய்துவிடுவார்கள்.

பக்தியைப் பரப்புதல் என்பது அவர்களின் கலாச்சாரத்தை நிலை நிறுத்துவது என்பதை உறுதியாக மனதில் வைத்து அவர்கள் செயல்படுகிறார்கள்.
இன்னொரு பக்கத்தில் பாரதி சங்கம் என்று வைத்து சன்னமாக தங்களின் சமஸ்கிருத மனப்பான்மை வேலையைச் செய்து வருவார்கள்.

தமிழர்களில் மெத்த படித்தவர்களாக இருந்தாலும், கை நிறைய சம்பாதித்தாலும் பார்ப்பனர்களின் இந்த அணுகுமுறையில் உள்ள சூட்சமத்தை உணர்ந்து கொள்ளாமல் அவர்கள் விரித்த வலையில் விழுந்து விடுவார்கள்.

'பாரீசில் விநாயகன் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறார் கள். பார்ப்பனீயத்தைப் பரப்ப அவர்கள் முதலில் கையில் எடுத்துக் கொள்வது இந்த விநாயகனைத்தான். மகாராட்டிராவில் பாலகங் காதர திலகரும் இதனைத்தான் செய்தார். ஆர்.எஸ்.எஸ்., தோன்று வதற்குத் தோன்றாத் துணையாக இருந்தது திலகரின் இந்த முன்னோட்டமான நடவடிக்கைதான்!

பாரீசில் பிள்ளையார் விழா கொண்டாடுவதைக் கண்டித்தும், ஆபாச விநாயகனின் பிறப்பைக் குறித்தும் பாரீசில் உள்ள பகுத் தறிவாளர்கள் துண்டு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். தோழர்கள் தமிழச்சி, மாசிலா ஆகியோர் மேற்கொண்டுள்ள பணிக்காக உலகம் முழுவதும் உள்ள பகுத்தறிவாளர்களால் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆவார்கள்.

அவர்கள் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் காணப்படும் கருத்துகள் சிந்தனைக்கு விருந்தானவை; விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியவையாகும்.
"பிறந்து வாழ்ந்த நாட்டில் தான் சுயமரியாதை இழந்து மானங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தோம். வந்த இடத்திலும் 'சனியனை இழுத்துக் கொண்டு வர வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள். நம் அறியாமையையும், பக்தியின் பெயரால் நடக்கும் கொள்ளைகளையும் ஒரு சில வஞ்சகர்கள் அனுபவிக்கவிடலாமா? உதாரணமாக இலங்கையிலிருந்து 1971-இல் பாரீசுக்கு இடம் பெயர்ந்த ஒரு நபர் 1985-இல் மாணிக்க விநாயகன் ஆலயம் என்ற பெயரில் ஒரு கோயிலை நிர்மாணித்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய அவருடைய வசதி வாய்ப்பின் நிலை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கொண்டு போய்க் கொட்டிய தெல்லாம் கடவுளுக்கா போய்ச் சேருகிறது? தமிழா! கொஞ்சம் சிந்தித்துப் பார்!.. ஒழுக்கம், நாணயம் குறையவும் பலாத்கார உணர்ச்சியும், கெடுதல் புத்தியும் வளர்வதற்கும் யார் காரணமாகி றோம்? பக்தி என்னும் நம் அறியாமையால், மதம் ஜாதி திணிக்கப்பட்டு சிந்திக்கும் திறனையும், விழிப்புணர்வையும் சீரழிப்பதற்கு இவை இரண்டும்தான் காரணம்" என்று அந்தத் துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் அவர்கள் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்குச் சென்றபோதுகூட இதே கருத்தைத்தான் அங்குள்ள தமிழர்களுக்கு எடுத்துக் கூறினார்கள்.

பிறந்த நாட்டில் வறுமை கொத்தித் தின்ற நிலையில், வெளி நாட்டுக்குப் பிழைக்கப்போன இடத்தில்கூட, முட்டாள்தனத்தையும், பிற்போக்குத் தனத்தையும் தங்களோடு மூட்டை கட்டிக்கொண்டு போகும் தமிழர்களை நினைத்தால் வேதனையும், வெட்கமும் தான் நம்மைத் தொலைத்து எடுக்கிறது.

என்ன செய்வது! தலைமுறை தலைமுறையாகப் பார்ப்பனீயம் நம் மக்களின் மண்டைக்குள் திணித்த மூடத்தன கசுமாலங்களை அவ்வளவு எளிதாகத் தூக்கி எறிந்திட முடியுமா?தப்பித் தவறி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடையே பகுத்தறிவுச் சிந்தனை உள்ளவர்களாகிய தமிழச்சி, மாசிலாவைப்போல் செயல்பட்டால் அது மனிதகுலத்துக்கே செய்யப்பட்ட மாபெரும் அறிவுத் தொண்டாகும். தனி இணை யத்தையே உண்டாக்கிச் செயல்படுகின்றனர் பாரீசில். "பெரியார் விழிப்புணர்வு இயக்கம் என்று பொருத்தமான பெயரையும் கொடுத்துள்ளனர்.

தந்தை பெரியார் மறைந்தாலும், அவர்கள் உருவாக்கிய கொள்கை உலகம் முழுவதும் பரவிக்கொண்டு இருக்கிறது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

பெரியார் பன்னாட்டு மையம் உலகின் பல நாடுகளிலும் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டுள்ளது. டில்லியிலும் விரைவில் பெரியார் மையம் செயல்பட உள்ளது. இந்தியாவின் நான்கு திசைகளிலும் இத்த கைய மையங்களைத் தொடங்கும் திட்டமும் கழகத்திடம் உள்ளது. தந்தை பெரியாரை உலக மயமாக்கவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது. வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

'விடுதலை' தலையங்கம்
(செப்டம்பர்-6, 2007)

2 comments:

kiddy ppl said...

நன்றி தோழர்!

Thamizhan said...

கிரேக்கத்திற்குப் பிறகு அறிவுலகின் சிகரமாகத் திகழும் பாரிசில் பிள்ளையார் ஆர்ப்பாட்டம்.
தமிழர்களுக்கு வாழ்வளிக்கும் பிரான்சுக்குத் தமிழர்களின் அன்பளிப்பு அழுக்குருண்டை.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே சிந்திக்க வேண்டியது.இந்த பிள்ளையார்,விழாவைத் தூண்டி விடுவது யார்?பயன் பெறுவது யார்.
மனிதனை மனிதன் சமமாக நடத்த்ப் போராடிய பிரான்சிலே இந்துக் கோவில்களின் நிலைப்பாடு என்ன?

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்ற பிரெஞ்சு ஆதிக்கப் புதுச்சேரி புரட்சிக் கவிஞனின் வரிகள் இன்று பிரான்சுக்கு மட்டு மல்ல,உலகெங்கும் தேவையாக உள்ளது.உலகப் பெரியார்
உணர்வாளர்களே உழைத்து தமிழர்களின் எதிர்காலச் சந்ததியையாவது மான்மும் அறிவும் உள்ளவர்களாக்குவோம்.

periyar.org.in
periyarinternational@yahoo.com

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...