Friday, February 14, 2020

ஓராண்டாகிறது புல்வாமா தாக்குதல் பிரதமர் மோடியின் அக்கறை?

ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த ராணுவ அணிவகுப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தி இன் றோடு ஓராண்டு முடிந்துவிட் டது. ஆனால், இந்தப் பிரச்சி னையில் பிரதமர் மோடி எப்படி நடந்துகொண்டார்?
புல்வாமா தாக்குதல் பிற் பகல் 3.15 மணிக்கு ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் நடக்கிறது. அதில் 40 வீரர்கள் மரணமடைந்தனர். இந்த தாக்குதல் செய்தி மாலை 4.10 மணிக்கு எல்லாம் உலக ஊடகங்களில் முக்கிய செய்தியாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது,
ஆனால் அப்போது மோடி என்ன செய்துகொண்டு இருந் தார்?
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபூரில் ஒரு பொதுக்கூட்டத் தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆனால், மழை காரணமாக அவர் காணொலி மூலம் பேசிவிட்டு அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜிம்கார் பெட் தேசிய பூங்காவிற்கு செல்கிறார். அங்கு புலிகள் சரணாலயத்தில் படகு சவாரி செய்கிறார். டிஸ்கவரி சேன லின் மேன் வர்சஸ் வயில்ட் என்ற நிகழ்ச்சியில் நடிக்கிறார். பிறகு சரியாக இரவு 8 மணிக்கு உத்தரப்பிரதேசம் பரேலி சென்று அங்கிருந்து டில்லி செல்கிறார்.
நாட்டின் பாதுகாப்புப் படைவீரர்கள் அணிவகுப்பு மீதான தாக்குதல் நடந்துள்ளது, அது நடந்து 3 மணி நேரம் வரை தனது நிகழ்ச்சியை ரத்து செய்யவில்லை. சூட்டிங் நடத் துகிறார், படகு சவாரி செய்கி றார்.
மறுநாள் டில்லி மற்றும் ராஞ்சியில் நடந்த அய்ந்து நிகழ்வுகளிலும் வெவ்வேறு ஆடைகளை அணிந்து கலந்து கொள்கிறார். புல்வாமா வீரர் களின் உடல் டில்லிக்கு வந்த பிறகு மோடியின் வருகைக்காக உடல்கள் டில்லி விமான நிலையத்தில் காத்திருக்கின் றன. விமான நிலையத்தில் இருந்து பிரதமர் இல்லத்திற்குச் சென்றுவிட்டு உடல்களுக்கு இறுதி மரியாதை செய்ய வரும் போது வேறு ஆடை அணிந்து வருகிறார்.
மோடியின் இந்த நட வடிக்கை பெரும் விவாதத் தைக் கிளப்பியது. ஆனால் மோடி தாக்குதல் நடந்த பிறகு உத்தரகாண்ட் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் என்று பாஜக விளக்கம் கொடுத்தது. ஆனால், ஓராண்டு முடிந்து கூட இதுதொடர்பாக மோடி ‘‘அன்று நான் என்ன செய்தேன்'' என்று இன்றுவரை விளக்கம் கொடுக்கவே இல்லை.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...