Friday, February 14, 2020

இந்தி மொழி தெரியாததால் என்னை இந்திய அணியிலிருந்து வெளியேற்ற முயன்றார்கள்

தங்கம் வென்ற வீரர் ரோஹித் மரடாப்பா அதிர்ச்சித் தகவல்
இந்தி மொழி தெரியாததால் இந்திய அணியில் இருந்து தம்மை வெளியேற்ற முயற்சி நடந் ததாக ஆசிய அளவிலான படகு தொடரில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரோஹித் மரடாப்பா தெரிவித்துள்ளார்.
காட்பாடியில் உள்ள தனியார் தொழில்நுட்ப பல் கலைக்கழகத்தில் 5 நாட்கள் நடைபெறும் பன்னாட்டு கலை மற்றும் கலாச்சார விழாவில் அர்ஜுனன் விருது வென்ற வீரர் கணே சன், இந்திய படகு போட்டி வீரர் ரோஹித் மரடாப்பா ஆகியோர் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டனர்.
இருவரும் விளையாட்டு போட்டிகளில் வென்ற வருக்கு பதக்கங்களையும் சான்றுகளையும் வழங்கி னர். அப்போது பேசிய ரோஹித் மரடாப்பா, இந்தி மொழி தெரியாததால் வட நாட்டு வீரர்களின் கேலி மற்றும் கிண்டல்களுக்கு ஆளானதாக தெரிவித்தார். இருப்பினும் இந்தியை ஆர்வமுடன் கற்றதுடன் ஆசிய அளவில் 2 முறை தங்கப்பதக்கம் வென்று சாதித்ததாகவும் ரோஹித் மரடாப்பா கூறியுள்ளார். மேலும் நாட்டிற்காக ஒற் றுமை உணர்வுடன் விளை யாடியதால் தங்கப்பதக் கத்தை வெல்ல முடிந்ததாக வும் அவர் கூறினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...