Monday, February 17, 2020

மத்திய அமைச்சருக்கு நீதிமன்றம் நேரில் விசாரணைக்கு வரும்படி அழைப்பாணை

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் தொடுத்த அவதூறு வழக்கில், மே 2ஆம் தேதி நேரில் வந்து ஆஜராகுமாறு திருவனந்தபுரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் மத்திய அமைச் சரும், தற்பேதைய மக்களவை காங்கிரஸ் உறுப்பினருமாகிய சசிதரூரின் மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தேகத்துக்குரிய முறையில் இறந்து போனார்.
எனவே, இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சசி தரூருக்கு எதிராக சர்ச்சைக்குரிய முறையில் கருத்து தெரிவித்தார். எனவே, இதனை எதிர்த்து ரவிசங்கர் பிரசாத்திற்கு எதிராக கடந்த 2018ஆம் ஆண்டு அவ தூறு வழக்குத் தொடுத்தார் சசிதரூர்.
மரணம் குறித்த விசாரணையின் இறுதி அறிக்கை, அது கொலையல்ல என்றே வந்துள்ளது என்பது சசிதரூர் தரப்பின் வாதம்.
எனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வரும் மே மாதம் 2ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டுமென அமைச்சருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...