பா.ஜ.க அரசைக் கண்டித்து லோக்பால் உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய நீதிபதி!
லோக்பால் அமைப்பு
உருவாக்கப்பட்டு ஓராண்டு முடிந்தும் லோக் பால் சட்டப்படி மத்திய அரசு
விதிமுறைகளை வகுக்கவில்லை என்று புகார் தெரிவித்து பதவி விலகியுள் ளார்
ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி திலீப் போஸ்லே. இதனால் புகார் கள்
மீது விசாரணை நடத்த முடியாத நிலையில் லோக்பால் உள்ளது.
லோக்பால் சட்டம் 2014ஆம் ஆண்டு செயல்
பாட்டுக்கு வந்தாலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் தலைவராக உச்சநீதி மன்ற
ஓய்வு பெற்ற நீதிபதி பினாக்கி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார். ஓய்வு பெற்ற
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நான்கு பேர் உள்பட எட்டு உறுப் பினர்கள்
பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அவர்களில், அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற திலீப் போஸ்லே தற்போது அவர் தனது பதவி
விலகலுக்கு முன்ன தாக மூன்று கடிதங்களை லோக்பால் தலைவருக்கு எழுதியுள்ளார்.
அதில், லோக்பால் சட் டம் பிரிவு 59 இ-ன்
படி உரிய விதிமுறைகளை வகுக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். லோக்பால்
வெளிப்படைத் தன்மையு டன் செயல்பட குழு அமைக்க வேண்டும். அவை எதுவும்
நடைபெறாததால் பதவி விலகுவதாகக் குறிப் பிடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment