Saturday, February 29, 2020

என்ஆர்சி நடைமுறைக்கு வந்தால் அய்தராபாத்தில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றப்படலாம்: அதிர்ச்சி தகவல்



தேசிய குடியுரிமை பதிவேடு நடை முறைப் படுத்தப்பட்டால், அய்தராபாத்தில் 10 லட்சம் மக்கள்  வெளியேற்றப்பட லாம் என்று  தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10.5 லட்சம் பேர் தங்கள் தேசிய குடியுரிமையை   நிரூபிக்க முடியாமல் போகலாம். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப் படையாக கொண்டால் அய்தராபாத் மொத்த மக் கள் தொகையில் 39.4 லட்சம் பேரில் 27 சதவீதம் பேர் கல்வியறிவு அற்றவர்கள்.

எனவே,  என்ஆர்.சி.க் கான ஆவணங்கள் அவர் களிடம் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் என்பது குறைவே. இந்த அனு மானத் தின் அடிப்படையில் 20.46 லட்சம் பேரில் 5.05 லட்சம் மக்கள் இந்துக்கள் ஆவர்.

17.13 லட்சத்தில் 5.02 பேர் இஸ்லாமியர்கள் ஆவர். அவர்கள் அனை வரும் என்ஆர்சி பட்டியலில் இருந்து விடுவிக்கப்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப நிபுணரும், ஆராய்ச்சியாள ருமான காலித் சைபுல்லா கணித்துள்ளார்.

தெலங்கானாவில் 1.26 கோடி இந்துக்களும், 14.91 லட்சம் இஸ்லாமியர்களும் என்ஆர்சி பட்டியலில் தங் களது பெயர்களை சேர்க்க முடியாமல் போகலாம். ஆந் திராவில் 1.79 கோடி இந்துக் கள், 14.05  லட்சம் இஸ்லா மியர்கள் பட்டியலில் இருந்து விலக்கப்படலாம் எனறும் அவர் கணித்துள் ளார்.

கல்வியறிவு இல்லாதவர் கள் தங்கள் பிறந்த தேதியை நினைவில் வைத்துக் கொள் ளாதபோது, ​​பெற்றோரின் பிறந்த தேதியை அவர்கள் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் என்றும்  அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...