Saturday, December 7, 2019

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட இளம்பெண் டில்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் பட்ட வழக்கில் நீதிமன்றத்துக்குச் செல்லும் வழியில் பெண் தீவைத்து எரிக்கப்பட்ட அவலம் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. பலத்த தீக்காயமடைந்த அப்பெண்  சிகிச்சைக்காக டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந் தார்.
இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில்  கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். பெண்ணைக்கடத்தி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற இருவர்மீது கடந்த மார்ச் மாதத்திலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை, ரேபரேலி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பங்கேற்பதற்காக, இளம்பெண் தனது வீட்டில் இருந்து நீதிமன்றத் துக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்தனர். அப் பெண்ணை கடுமையாக தாக்கினர். பின்னர், அவர் மீது எளிதில் தீப்பற்றக் கூடிய திரவத்தை ஊற்றி தீவைத்தனர். இளம்பெண் மீது தீப்பற்றி எரிந்தது. அவர் அதே கோலத்தில் சிறிது தூரம் ஓடினார். உடனே சிலர் இதை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் அப் பெண்ணை மீட்டு, சுகாதார மய் யத்துக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மாவட்ட மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். பிறகு, லக்னோவில் உள்ள சியாம பிரசாத் முகர்ஜி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
அங்கு அந்த இளம்பெண், கோட் டாட்சியர் தயாசங்கர் பதக்கிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், தான் நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் 5 பேர் தன்னை வழிமறித்து தாக்கி தீவைத்து எரித்ததாக அவர் கூறினார். எரிக்கப்பட்டதை நேரில் பார்த்த ஒருவர் எமர்ஜென்சி எண்ணான 112 என்ற எண்ணுக்கு போன் செய்து ஸ்பீக்கரில் பாதிக்கப்பட்ட பெண் தன் வாயால் நடந்ததை விவரிக்கச் செய்தார்.
இளம்பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும், அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாக மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர்அசுதோஷ் துபே கூறினார். தீவைத்து எரித்த 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை அந்த பெண், மேல்சிகிச்சைக்காக டில்லி கொண்டு செல்லப்பட்டார். அவர் தாமதமின்றி, லக்னோ விமான நிலையத்தை அடைவதற்காக, அவர் சென்ற பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் பட்டது.
லக்னோவில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் அவர் டில்லி கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள சப்தர்ஜங் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் மருத்துவர்கள் குழுவும் சென்றது.
இந்நிலையில் நேற்று இரவு  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து உ.பி.யில் சட்டம் ஒழுங்கு முன்னேறி யுள்ளது என்று பாஜக கூறிய கருத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...