தமிழக அஞ்சல் துறை தலைவர் சம்பத்
அஞ்சலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகம் முழுவதும் 89 அஞ்சல்
உதவியாளர் 65 அஞ்சல்காரர் 77 பன்முக அஞ்சல் ஊழியர் என 231 பணியிடங்கள்
விளையாட்டு பிரிவின் கீழ் நிரப்பப்பட உள்ளன.
தடகளம் பேட்மின்டன் கால்பந்து கோ - கோ
வாலிபால் டென்னிஸ் கோல்ப் நீச்சல் என 42 வகையான விளையாட்டு பிரிவுகளில்
சாதித்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா சார்பில் பன்னாட்டு அளவிலான
போட்டிகளில் பங்கேற்ற வர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.அடுத்து
தேசியளவில் பதக்கம் வென்றவர்கள் தேசியளவில் பல்கலை மற்றும் பள்ளிகளுக்கு
இடையே பரிசு பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தபால் உதவியாளர் தபால்காரர் பணிக்கு 18 -
27 வயது வரையிலும் பன்முக அஞ்சல் ஊழியருக்கு 25 வயது வரையிலும் வரம்பு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் உதவியாளருக்கு குறைந்தபட்சம் பத்தாம்
வகுப்பு கல்வித் தகுதி அவசியம். தபால்காரருக்கு பிளஸ் 2 மற்றும் பன்முக
ஊழியருக்கு பத்தாம் வகுப்பு போதுமானது. விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில்
விண்ணப்பங் களை நேரடியாக பதிவிறக்கம் செய்து வரும் 31க்குள் பூர்த்தி
செய்து அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களை இணைய தளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment