Friday, December 6, 2019

உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தியைப் புகுத்துவதை உடனடியாகக் கைவிட வேண்டும்: பெருங்கவிக்கோ . வா.மு. சேதுராமன் கண்டனம்

இதுகுறித்து 5.12.2019 அன்று பன்னாட்டு தமிழுறவு மன்றம் - அனைத்துத் தமிழ்க் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் கூறியிருப்பதாவது:
நம் தாய்த் தமிழ் மொழி, தமிழ்ப் பண்பாடு. தமிழர் தொன்மை, நாகரிகத்தினை உலகரியச் செய்வதற்காகவே அறிஞர் அண்ணாவால் தொடங்கப்பெற்றுச் சிறப்பாக வளர்ச்சி பெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தியைப் புகுத்தி, தமிழர்களின் ஏழை எளிய தமிழ் மாணவர் களின் வளர்ச்சிக்காகவே இதனைச் செய்வதாகத் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்  பாண்டியராசன் கூறுவது உண்மையான தமிழ் வளர்ச்சி கருதுப வர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
இச்செயல் எந்த நோக்கத்திற்காக உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அண்ணாவால் தொடங்கப் பெற்றதோ அந்த அடிப்படையையே தகர்க்கும் செயலாகும். இது ஒரு கட்சி சார்ந்த பாதிப்பல்ல. ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் பாதிப்பை உரு வாக்குவதாகும். தமிழர் உணர்வுகளை மதியாத தாகும். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிப் பெற்ற இருமொழிக் கொள்கைக்கு வேட்டு வைக்கும் செயலை தமிழ்வளர்ச்சி துறை அமைச்சர் மேற் கொள்வது நன்றல்ல.
அமைச்சர் உலகத்தமிழ் மாநாடு நடத்துவோம் என்கிறார், அறிஞர் அண்ணா நடத்தியுள்ளார். கலைஞர் நடத்தியுள்ளார். நீங்களும் நடத்துங்கள். ஆனால் உலகமெல்லாம் உலகத்தமிழ் மாநாடு நடத்திவிட்டு, தமிழ்நாட்டில் தமிழ்ப் பிள்ளை களுக்குத் தமிழே தெரியாமல் போனால் பய னென்ன? நம் வருங்காலத் தலைமுறை நம் வாரிசுக் களைத் தமிழை மறக்கும் செயலில் ஈடுபடுத்துவது நன்றா? எனவே தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தடையாக உலகத்தமிழ் வளர்ச்சி நிறுவனத்தில் இந்தியைப் புகுத்துவதை நிறுத்திட வலியுறுத்து கிறோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...