ஆயிரக்கணக்கான கல்வியாளர்கள் கண்டனம்
குடியுரிமை திருத்த மசோதாவை திரும் பப்
பெற வலியுறுத்தி ஆயிரம் அறிஞர்கள் மனு அளித்துள் ளனர். அந்த மனுவில் இந்
தியா இனவாத நாடாக மாறி விடும் என எச்சரித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த மசோதாவை திரும்பப்பெற
வேண்டும் என வலியுறுத்தி ஆயிரம் விஞ்ஞானிகள், அறி ஞர்கள் கையெழுத்திட்டு
மத் திய அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர். இந்தியா இனவாத நாடாக மாறிவிடும்
என்றும் எச்சரிக்கை விடுத்து உள்ள னர்.
குடியுரிமை திருத்த மசோதா மக்களவையில்
நேற்று முன்தினம் இரவு 7 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நிறைவேறியது. இந்த
மசோதாவுக்கு எதிர்க்கட்சி கள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில்
ஆயி ரம் விஞ்ஞானிகள், அறிஞர் கள், கல்வியாளர்கள் குடி யுரிமை திருத்த
மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று கூறி மத்திய அரசுக்கு மனு
அனுப்பியுள்ளனர்.
விஞ்ஞானிகள், அறிஞர்கள்...
இதில் ஹார்வர்டு பல் கலைக்கழகம், மாசேசூ
செட்ஸ் பல்கலைக்கழகம், அய்.அய்.டி., இந்திய அறிவியல் கல்வி மற்றும்
ஆராய்ச்சி நிலையம், டில்லி பல்கலைக்கழகம், சென்னை கணிதவியல் கல்வி
நிலையம், சர்வதேச அறிவியல் பாட மையம், ஹீப்ரு பல்கலைக் கழகம் உள்ளிட்ட
பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை சேர்ந்த விஞ்ஞானிகள்,
அறிஞர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப் பதாவது:
இந்தியா சுதந்திர போராட்டத்தில் இருந்து
வெளிப்பட்டது முதல் அரசி யல் சாசனத்தை பேணி பாது காத்து வருகிறது.
அனைத்து மதங்களிலும் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் அனை வரும் சமமாக
மதிக்கப்படும் நாடாக இருந்து வருகிறது. இந்த மசோதாவில் கூறப்
பட்டுள்ளதுபோல மதத்தை குடியுரிமைக்கான ஒரு அளவு கோலாக எடுத்துக்கொண் டால்
இந்த வரலாற்றில் ஒரு தீவிர இடைவெளி ஏற்பட்டு விடும்.
மேலும் அரசியல் சாசனத் தின் அடிப்படை
கட்டமைப் புக்கே முரண்பாடானதாக ஆகிவிடும். குறிப்பாக மசோ தாவின் நோக்கமான
முஸ்லிம்களை நீக்குவது நாட்டின் பன்முகத்தன்மை என்ற நூலிழைக்கு பெரும்
சேதத்தை ஏற்படுத்திவிடும் என நாங்கள் அஞ்சுகிறோம். எனவே இந்த குடியுரிமை
திருத்த மசோதாவை திரும் பப் பெறவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மக்கள் உரிமைகள் ஆர் வலரான ஹர்ஷ்
மாண்டெர் கூறும்போது, இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் நான் ஒத்துழையாமை
இயக் கம் நடத்துவேன். நான் ஒரு முஸ்லிம் என்று பதிவு செய் தால், நான்
எனது ஆவணங் களை தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பதிவு செய்ய மறுத்தால்,
ஆவணங்கள் இல் லாத முஸ்லிம் என்ற அடிப் படையில் எனக்கும் அதே தண்டனை
விதிக்கப்படும். மசோதாவை திரும்பப்பெற வேண்டும். ஒத்துழையாமை இயக்கத்தில்
சேருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கல்வியாளர் பிரதாப் பானு மேத்தா
பிரபல கல்வியாளர் பிர தாப் பானு மேத்தா கூறும் போது,
கடந்த காலத்தை நாம் எப்போதும் விவாதிக்க
முடி யும். ஆனால் இந்த மசோதா இந்தியாவின் அரசியல்சாசன ஜனநாயகத்தை அரசியல்
சாசனத்துக்கு விரோதமான இனவாத நாடாக அதிகாரப் பூர்வமாக மாற்றுவதற்கு
எடுக்கப்படும் மிகப்பெரிய நடவடிக்கை என்றார்.
No comments:
Post a Comment