தனியார் அமைப்பு ஒன் றின் நிகழ்ச்சியில்
பங்கேற்ற, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்ததாஸ், இது குறித்து மேலும்
தெரிவித்து உள்ள தாவது:
அரசும், ரிசர்வ் வங்கியும் சரியான
நேரத்தில் செயல் பட்டுள்ளன. நாங்கள் சற்று முன்பாகவே செயல்பட்டு, வட்டி
விகிதங்களை குறைப் பதில் ஈடுபட்டோம்.நாட் டின் வளர்ச்சியில் மந்தநிலை
இருப்பதை, இந்த ஆண்டின் பிப்ரவரி மாதமே ரிசர்வ் வங்கி கண்டுகொண்டது.
மந்தநிலைக்கான சூழல் ஏற்பட்டு வருவதை முன்பே கண்டு, தொடர்ந்து வட்டி
விகிதங்களை குறைப்பதில் ஈடுபட்டோம்.
நாங்கள், பிப்ரவரி மாதத் தில் நடைபெற்ற
நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், வட்டி விகித குறைப்பு அறிவிப்பை
வெளியிட்டோம். இந்த வட்டி குறைப்பு குறித்து, சந்தைகள் ஆச்சரியம் அடைந் தன.
இதேபோல், தற்போது டிசம்பர் மாத கூட்டத்தில், வட்டி விகிதத்தை குறைக்கா
மல், அதே நிலை தொடரும் என அறிவித்தபோதும், சந்தை ஆச்சரியமும் அதிர்ச்சியும்
அடைந்தது. வட்டியை குறைத்த போதும், குறைக்காத போதும், சந்தை பங்கேற்பா
ளர்கள் ஆச்சரியமும் அதிர்ச் சியும் அடைந்தனர்.
தொடர்ந்து, நாங்கள் வட்டியை குறைத்து
அறிவித்த முடிவு சரியானது என்று அனைவரும் பின்னர் ஏற்றுக்கொண்டதற்காக நான்
மகிழ்ச்சி அடைந்தேன்; அதற்காக நன்றியை தெரிவித் துக் கொள்கிறேன்.மாநிலங்
கள் இந்த முறையும் நிதிக் கொள்கை குழு, வட்டியை குறைக்காமல் இருந்த முடிவு
சரியானது தான் என்பதை ஏற்றுக்கொள்வர். அதை நிரூ பிக்கும் வகையில்
நிகழ்வுகள் வெளிப்படும் என நான் நம்பு கிறேன்.
No comments:
Post a Comment