இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக்கான
நிர்பயா நிதியத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தொகையில், 50 சதவிகிதத்தைக் கூட
மாநிலங்கள் செலவழிப்பதில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, பாஜக கடந்த வாரம் வரை ஆட்சியிலிருந்த மகாராட்டிரா, தற்போது
ஆட்சியிலிருக்கும் மணிப்பூர், திரிபுரா மற்றும் மேகாலயா, சிக்கிம், டையூ
டாமன் உள்ளிட்ட 6 மாநிலங்கள் நிர்பயா நிதியில் இருந்து ஒரு பைசாவைக் கூட
பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
நிர்பயா நிதியிலிருந்து டில்லிக்கு
ஒதுக்கப்பட்ட 390 கோடியே 90 லட்சம் ரூபாயில், வெறும் 19 கோடியே 41 லட்சத்தை
மட்டுமே அந்த அரசு செலவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் 119 கோடி ரூபாயில்
வெறும் 3 கோடியே 93 லட்சத்தை மட்டும் செலவிட் டுள்ளது. இதேபோல கருநாடகம்
191 கோடியே 72 லட்சத்தில், 13 கோடியே 62 லட்சம் ரூபாயையும், தெலங்கானா
மாநிலம் 103 கோடி ரூபாயில் 4 கோடியே 19 லட்சம் ரூபாயையும் மட்டுமே
செலவழித்துள்ளன. தமிழ்நாடு அரசும் இதில் 190 கோடி ரூபாயில் வெறும் 6 கோடி
ரூபாயை மட்டுமே செலவிட்டுள்ளது.
No comments:
Post a Comment