திண்டுக்கல் அருகே காந்தி கிராமத்தில்
உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக தமிழ்த் துறை மற்றும் அனைத்திந்திய
ஆராய்ச்சிக் கழகம் சார்பில் 15-வது பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்கலை.
வெள்ளிவிழா அரங்கில் 2 நாட்கள் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தஞ்சாவூர்
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் பேசிய தாவது:
தமிழில் தரமான ஆய்வுகளை வெளிக்கொணர வேண்டும் என்பதற்காக பல் கலைக்கழக
மானியக் குழு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆய்வாளர்களுக்கு நிதி
உதவிகளை வழங்கி வருகிறது. நாட்டில் தமிழில்தான் அதிக ஆய்வுகள் நடக்கின்றன.
இந்தியாவில் 2017 - 20-18ஆ-ம் ஆண்டில்
29,775 பேர் முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பதிவு செய்துள்ளனர். இதில்
தமிழகத்தில் அதிகம் பேர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழில் வேர்ச்சொற்கள் அதிக மாக உள்ளன. இதனால் ஆழமான, தனித்துவம் மிக்க
மொழியாக திகழ்கிறது. தமிழ் இலக்கணம், இலக்கியம், பண்பாட்டுக் கூறுகளை இளை
ஞர்கள் கற்றுக்கொள்ள ஆர்வ முடன் முன்வர வேண்டும். தமிழ் அடையாளங்களை பின்
பற்றவில்லை என்றால் தமிழ் நாட்டிலேயே அகதிகளாக மாறி விடுவோம். இவ்வாறு அவர்
பேசினார்.
No comments:
Post a Comment