Sunday, December 8, 2019

2018ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-ஆவது இடம்


ஜெர்மனியின் பான் நகரை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற, அரசு சாரா அமைப்பு ஜெர்மன் வாட்ச் சுற்றுச் சூழல் சிந்தனைக் அமைப்பாகும் . காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (சி.சி.பி.அய்) என்பது ஜெர் மன் வாட்ச், நியூகிளைமேட் நிறு வனம் மற்றும் காலநிலை நடவடிக்கை நெட்வொர்க் இன்டர்நேஷனல் ஆகி யவற்றின் வருடாந்திர பட்டியலாகும்.
181 நாடுகளை மதிப்பிட்ட சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன் வாட்ச் வெளியிட்டுள்ள குளோபல் க்ளைமேட் ரிஸ்க் இன் டெக்ஸ் 2020, பொருளாதார இழப் புகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி யில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும்  இறப்புகள் ஆகியவற்றின் மூலம் கால நிலை மாற்றத்தினால் அளவிடப் பட்ட தாக்கங்களை மதிப்பிடுகிறது.
தீவிர வானிலை நிகழ்வுகளிலிருந்து யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? 1999 முதல் 2018 வரையிலான வானிலை தொடர்பான இழப்பு  விவரங்கள் அதில் பட்டியலிடபட்டு உள்ளன.
அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- ஜப்பான், பிலிப் பைன்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை 2018 ஆம் ஆண்டில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருந்தன, அதனைத் தொடர்ந்து மடகாஸ்கர், இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை உள்ளன.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...