கணக்கில் ரூ.15 லட்சம் போடப்படும் என்ற வதந்தியை நம்பி அஞ்சல் நிலையத்தில் குவிந்த மக்கள்
மோடி யின் பாஜக அளித்த உறுதிமொழியின்படி மக்களின் கணக்கில் ரூ.15 லட்சம்
தொகை வரவு செய்யப்பட்ட தாக பரவிய புரளியால் அதை நம்பி, கேரளாவில் பல்வேறு
பகுதிகளில் அஞ்சல் அலவலகத்தில் மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் உள்ள மூணாறு பகுதியில் அஞ்சல்
நிலையங்களில் சேமிப்பு கணக்கு தொடங்கினால் அவர்கள் கணக்கில் மத்திய அரசு
ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் என்று பரவிய வதந்தியை நம்பி மூணாறு அஞ்சல்
நிலையத்தில் பொதுமக்கள் குவியத் தொடங்கினார்கள்.
நேரம் செல்ல செல்ல ஆண்களும், பெண்களும்
திரண்டதால் அஞ்சல் ஊழியர்கள் திணறத் தொடங்கி னார்கள். ரூ.15 லட்சம்
கணக்கில் வைப்புச் செய்யப்படும் என்பது வதந்தி என்று அஞ்சல் ஊழியர்கள்
எடுத்துக் கூறினாலும் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. பல மணி நேரம்
காத்திருந்து சேமிப்பு கணக்கை தொடங்கிய பிறகே அவர்கள் அங்கிருந்து கலைந்து
சென்றனர்.
இதனால் அங்கு காலை முதல் பரபரப்பு
நிலவியது. இதுபற்றி அஞ்சல் ஊழியர் ஒருவர் கூறும்போது, ரூ.100 பணம் வைப்புச்
செய்து பொதுமக்கள் அஞ்சல் அலுவலகங் களில் கணக்கு தொடங்கினால் கியூஆர் கோடு
இடம் பெற்ற ஸ்மாட் கார்டு அவர்களுக்கு வழங்கப்படும்.
இதன் மூலம் ரூ.1 லட்சம் வரை தங்கள்
கணக்கில் பொதுமக்கள் வைப்புச் செய்து கொள்ளலாம். இதைதான் தவறுதலாக பொது
மக்கள் புரிந்துகொண்டு வதந்தியை நம்பி கணக்கு தொடங்கி உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment