Saturday, August 24, 2019

கலைகள் மீது தாக்குதலா?



நீதிபதி சந்திரசூட் கவலை!

சுதந்திரம் என்பது ஒரு நாட்டாலோ, மக்கள் கூட்டத்தாலோ அல்லது கலையாலோ நசுக்கப் படும்போது ஆபத்து நிகழ்கிறது. மாறுபட்டு பேசும், சிந்திக்கும், உண்ணும், உடை உடுத்தும் மற்றும் நம்பும் மக்களுக்கு எதிராக நஞ்சை உமிழும் ஒரு களமாக சுதந்திரம் இன்றைய நிலையில் மாறியுள்ளது.

பண்டிட் குயின், மி நாதுராம் கோட்சே போல்டாய், பத்மாவதி மற்றும் போபிஷ்யோதர் பூட் ஆகிய படங்கள் அரசுகளால் தடை செய்யப் படுகின்றன. அப்படங்களில் மறைந்திருக்கும் உண்மைகள் அரசியல்வாதிகளை தொந்தரவு செய்கின்றன அல்லது அவர்களுக்கு அச்சமூட்டு கின்றன.

தற்போதைய வழக்கத்தில் இருக்கும் நடப்பு களை, கலை என்பது கேள்விக்குள்ளாக்குகிறது. கலையின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்பது சுதந்திரத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களின் குரலாய் பல நேரங்களில் கலைகள் வெளிப்படுகின்றன.

எனவே, கலை என்பது வளப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும். பலநேரங்களில் கலை என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாய் ஒலிப்பதில்லை. அவர்களின் உண்மையான வாழ்க்கை அதில் புறக்கணிக்கப்படுகிறது. இதற்கு காரணம், கலைத்துறையை ஆதிக்கவாதிகள் ஆக்கிரமித்துள்ளதே என்று பேசியுள்ளார் நீதிபதி சந்திரசூட்.

பொதுவாக பாசிஸ்டுகள் தங்களுக்கு எதிரானவர்களின் கலை, பண்பாட்டுத் தளங்களில் கைவரிசை காட்டுவார்கள். குறிப்பாக பார்ப்பன இந்து மதத்தின் கடந்த கால வரலாற்றைக் கண் ணியமாக பார்ப்பவர்கள் அல்லது அறிந்தவர்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் புத்தர் மற்றும் சமணப் பள்ளிகளை எல்லாம் எப்படி அழித்தார் கள் என்பது விளங்காமற் போகாது.

கடந்த காலத்திற்கு கூடப் போக வேண்டாம்; நிகழும் காலத்தில் என்ன நடக்கிறது, பாபர் மசூதியை இடித்தவர்கள் யார்? கலையின் அம்சமான தாஜ்மகால் மீது கண் வைக்கிறார்களே எதன் அடிப்படையில்?

1998 டிசம்பர் 2இல் மும்பை நகரிலும், டிசம்பர் 3இல் டில்லியிலும் தீபா மேத்தாவின் 'ஃபயர்' திரைப்படத்திற்கு எதிராக சிவசேனாவினர் சங்பரி வார்கள் பெரும் கலவரத்தில் ஈடுபடவில்லையா? 1998 ஏப்ரல் 26 அன்று, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரான குலாம் அலியின் மும்பையில் நடந்த விருந்து நிகழ்ச்சி அரங்கத் திற்குள் திடீரென்று புகுந்து சிவசேனா அடித்து நொறுக்கவில்லையா?

1996 மே திங்களில் மும்பையில் இர்ஃபான் உசேனின் ஓவிய அரங்கைத் தீயிட்டுக் கொளுத் தியது சங்பரிவார்தானே!

இதுபோல் எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.

நீதிபதி சந்திர சூட் மிகவும் சரியாகவே சங்பரிவார்க் கும்பலை மனதில் வைத்துக் கொண்டே இப்படியொரு குற்றப் பத்திரிகையைப் படித்துள்ளார்.

ஓய்வு பெற்ற நீதிபதிகள் இந்தக் காலகட்டத்தில் வெளியே வந்து சுற்றிலும் நிகழும் கலைகள் அழிக்கும் பாசிச சக்திகளை மக்களுக்கு அடை யாளப்படுத்துவது சரியானதே. நீதிபதி சந்திர சூட் அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக!


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...