கடந்த 2004 மே 14 முதல் 2009 ஜூலை 24 வரை,
மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியி லும்,
பின்னர் அய்க்கிய முற்போக்குக் கூட் டணியின் இரண்டாவது ஆட்சிக் காலம்
தொடங்கியபோதும், மும்பை பங்குச் சந்தை யின் மதிப்பு 203 சதவிகிதம் அளவிற்கு
வளர்ச் சியில் இருந்துள்ளது.
ஆனால், 2014 மே 23 முதல் 2019 ஜூலை 23
வரை, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் ஆட்சி யில், இந்த வளர்ச்சி
வெறும் 54 சதவிகி தமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. தேசியப் பங்குச் சந்தையிலும்
இதே நிலையே இருந்துள்ளது.
அதுமட்டுமன்றி, மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த, கடந்த 60 நாட் களில் சென்செக்ஸ் 1800 புள்ளிகள் அளவிற்கு சரிந்துள்ளன.
எச்.டி.எப்.சி. வங்கி, இன்போசிஸ் நிறு
வனம், அய்.சி.அய்.சி.அய். வங்கி, ரிலையன்ஸ் நிறுவனம், இந்திய ஸ்டேட் வங்கி,
கோடாக் வங்கி, அதானி குழுமம் ஆகி யவை பொது வாகவே சந்தையில் ஆதிக்கம்
செலுத்தும் பெரு நிறுவனங்கள் ஆகும். இவற்றின் பங்கு மதிப்பு லாபகரமாகவே
இருந்து வருகிறது.
ஆனால், மகிந்திரா, டாடா மோட்டார், டாடா
ஸ்டீல், ஹீரோ மோட்டார், ரிலை யன்ஸ் கேபிடல், வோடோபோன் அய்டியா, மாருதி, சன்
டி.வி, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங் களின் பங்குகளின் மதிப்பு கடந்த
ஓராண்டில் கணிசமான அளவிற்கு வீழ்ச்சியைச் சந்தித்து உள்ளன.
அதாவது, பெரிய நிறுவனங்களின் பங்கு களைப்
பொறுத்தவரை, சந்தையில் மதிப்பு கூடியிருந்தாலும், சிறிய நிறுவனங்களின்
பங்கு மதிப்பு வீழ்ச்சி முதலீட்டாளர்களை கடும் இழப்புக்கு
உள்ளாக்கியிருக்கிறது. அதிக லாபத்தைக் கருத்தில் கொள்பவர்கள், சிறிய
நிறுவனங்களிலேயே அதிகம் முதலீடு செய் கின்றனர் என்பதால், சிறிய
நிறுவனங்களின் வர்த்தகத்தில் ஏற்படும் பாதிப்பு, அதன் சந்தை மதிப்பிலும்
தற்போது இழப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மேலும், நட்டமடையும் நிறுவனங்களில்,
அரசும் தனது முதலீடுகளை குறைத்துக் கொண்டு வருவதால், பங்குச் சந்தையில்
அந்த நிறுவனங்களின் மதிப்பு மேலும் குறைந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அடிப்படையில், மோடியின் இரண் டாவது
அரசு அமைந்த 60 நாட்களில் மட்டும் சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு மேலும்
குறைந்து வருவதால், இந்த இழப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் பங்குச்
சந்தை வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment