Thursday, August 1, 2019

அய்அய்டி படிப்பை பாதியில் விட்ட 2,461 மாணவர்களில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்கள் 1,171 பேர்

மத்திய அரசு தகவல்
புதுடில்லி, ஆக.1 கடந்த 2 ஆண்டுகளில் அய்அய்டி கல்வி நிறுவனங் களிலிருந்து 2461 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தி யுள்ளனர் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள் ளது.
தொழில்நுட்ப கல்விக்கு நாட்டிலேயே முன்னோடி கல்வி நிறுவனமாக இருந்து வருவது அய்அய்டி நிறுவ னங்களாகும். இந்தக் கல்வி நிறுவனங்களில் எப்படியா வது பயில வேண்டும் என பல மாணவர்கள் தங்களின் பள்ளி பருவம் முதல் தீவிர முயற்சியில் ஈடுபடுகின்றனர். எனினும் இந்தக் கல்வி நிறுவனங்களிலிருந்து அதிக மாணவர்கள் தங்களின் படிப்பை பாதியில் விடுவது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலங்களவையில் ஆந்திர மாநில நாடாளுமன்ற உறுப்பினரான விஜயசாய் ரெட்டி அய்அய்டியில் மாண வர்கள் இடைநிற்றல் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பதிலளித்திருந்தது. அதில் அய்அய்டியிலிருந்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தற் போது வரை 2,461 மாண வர்கள் தங்களின் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 57% மாணவர்கள் அய்அய்டி-டில்லி மற்றும் அய்அய்டி-கராக்பூர் ஆகிய நிறுவனங்களிலிருந்து பாதி யில் படிப்பை நிறுத்தியுள் ளனர்.
அய்அய்டி       இடைநிற்றல் மாணவர்கள்
டில்லி               782
கராக்பூர்           622
கான்பூர்            190
சென்னை       128
பாட்னா            92
அய்தராபாத்     85
ரூர்கி     57
இந்தோர்       50
புவனேஸ்வர்       39
கடந்த இரண்டு ஆண்டு களில் அய்அய்டி டில்லியி லிருந்து 782 பேரும், அய்அய்டி கராக்பூரிலிருந்து 622 பேரும் படிப்பை பாதியில் விட்டுள்ளனர். அதேபோல அய்அய்டி மெட்ராஸ் (சென்னை) கல்வி நிறுவனத் தில் 128 பேர் பட்டபடிப்பை முடிக்காமல் வெளியேறியுள் ளனர். மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் அய்அய்டி நிறுவனங்களிலிருந்து இடை நிற்றல் செய்த மாணவர்களில் 47.5% பேர் பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்தப் பிரிவை சேர்ந்த 1,171 மாணவர்கள் அய்அய்டி நிறுவனங்களிலி ருந்து படிப்பை முடிக்காமல் வெளியேறியுள்ளனர்.
அய்அய்டி நிறுவனங்களி லிருந்து அதிகளவில் மாண வர்கள் வெளியேறுவதற்கு மருத்துவ காரணங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழ கத்தில் வாய்ப்புகள், தவறான படிப்பை தேர்ந்தெடுத்தல் போன்றவற்றை காரணமாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள் ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...