மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழுக்
கொள்ளளவான 120 அடியை எட்டுகிறது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்
பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாடு பகுதியிலும் பெய்த பலத்த
மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. அணைகளின் பாதுகாப்பு
கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. உபரிநீர் காரணமாக காவிரியில்
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகபட்ச மாக
நொடிக்கு 2.40 லட்சம் கன அடி வீதம் வந்தது. சனிக்கிழமை மாலை மேட்டூர்
அணையின் நீர்மட்டம் 117.29 அடியாக உயர்ந்தது. அணையின் முழுக் கொள்ளளவான
120 அடியை விரைவில் எட்டும் நிலை உருவாகி உள்ளது. இந் நிலையில், கடந்த இரு
தினங்களாக காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்தது.
இதனையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 10 ஆயிரம் கன
அடியாகச் சரிந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு
நொடிக்கு 10 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன
அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 89.21
டி.எம்.சி.யாக உள்ளது.
Sunday, August 25, 2019
Subscribe to:
Post Comments (Atom)
குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது
மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...
-
(கழக பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் 24.12.2011 அன்று வானொலியில் ஆற்றிய உரை) நான் எழுத்தாளன் அல்லன்; பேச்சாளன் அல்லன்; கருத்தாளன் என்று தந...
-
நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் ...
-
உலக அறிவை, உருப்படியான காரியத்துக்குப் பயன்படும் அறிவைத் தரக்கூடிய புத்தகங்களைச் சேகரிக்க வேண்டும். பழைய முறைகளையும் எண்ணங்களையும் மேலும்...
No comments:
Post a Comment