Thursday, July 18, 2019

புற்றுநோயை அழிக்கும் வைரஸ்!

முற்றிலும் புதுமையான சிகிச்சை முறை இது. சாதாரண சளியை உண் டாக்கும் வைரசை ஏவிவிட்டு, புற்று நோயை பெருக்கும் செல்களை நேரடி யாகத் தாக்கி அழிக்கும் முறையை, தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஏற்கெனவே, தோல் புற்று, பிராஸ் டேட் புற்று போன்றவற்றையும் இதே முறையில் அழிக்க ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
என்றாலும், சிறுநீர்ப் பையில் உண்டாகும் ஒருவகை புற்று நோய் சற்று பரவலாக உள்ள ஒரு புற்றுநோய். தற்போது அறுவை சிகிச்சை தான் இதைப் போக்க ஒரே வழி. அதுவும் கணிசமானோருக்கு நல்ல பலனை தருவதில்லை.
எனவே, இங்கிலாந்தின் சர்ரே பல் கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹர்தேவ் பாந்தாவின் தலைமையிலான ஆராய்ச் சியாளர்கள், 'கோக்சாக்கி வைரஸ்' என்ற சாதாரண சளியை உண்டாக்கும் வைரஸ்களை செலுத்தி, சிறுநீர்ப்பை புற்றுநோயை குணப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.
ஆய்வக சோதனைகள் வெற்றி தரவே, முதல் கட்ட மனித நோயாளி களுக்கு இந்த சிகிச்சையை கொடுத்த னர்.
இதில் அந்த வைரஸ்கள், புற்று நோய் செல்களை நேரடியாக தாக்கி அழித்தன. எனவே, மேலும் விரிவான மனித சோதனைகளை நடத்த திட்ட மிட்டுள்ளனர், ஆராய்ச்சியாளர்கள்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...