கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட நோபல் அறிஞர் அமர்தியாசென் கூறியதாவது:
"தற்போது நாடு முழுவதும் 'ஜெய்சிறீராம்'
என்ற கூச்சல் வன்முறைக்கான அடையாளமாகப் போய் விட்டது. அது தற்போது மாற்று
மதத்தவரை கொலை செய்வதற்கும் பயன்படுகிறது. மேற்குவங்கம் தொன்று தொட்டு
பெண் தெய்வவழிபாடு மற்றும் பெண்வழிச் சமுதாயத்தில் வளர்ந்த மாநிலமாகும்.
இங்கு மாற்று மதத்தவரும் பெண் சமுகத்தை முன்னிறுத்தி வங்கத்தின்
அடையாளமாகத் திகழ்கின்றனர்.
ஆனால் தற்போது மேற்குவங்கத்தில் ராமநவமி
மிகவும் மோசமான வன்முறைக் கலாச்சாரத்துடன் கொண்டாடப்படுகிறது. ராமநவமியின்
போது கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களோடு ஊர்வலம் வருதல் வன்முறைக்கான
அடையாளங்களே!
இது வங்கத்திற்கான கலாச்சார அடையாளம்
அல்ல, நமது கலாச்சாரத்தோடு ஒத்தும் போகாது, இந்தியா அமைதியான மார்க்கத்தை
புத்தர் காலத்தில் இருந்தே பின்பற்றிய பண்பட்ட நாடாகும், குறுகிய கால
அரசியல் இலாபத்திற்காக அரசியல் கட்சியினர் வன்முறை முழக்கங்களை
எழுப்புகின்றனர். இது போன்ற முழக்கங்கள் அடங்கிவிடும். இந்தியா எதையுமே
நீண்ட தொலைநோக்குப் பார்வையில் தனதாக்கிக்கொள்ளும் தன்மை உடையது. ஆகையால்
தான் இதன் பன்முகக் கலாச்சாரம் இன்றும் அழகாக இருக்கிறது. இதை சிதைக்க
முடியாது. நான் எனது 4 வயது பேத்தியிடம் உனக்குப் பிடித்த முழக்கம் என்ன
என்று கேட்டேன். அதற்கு அவள் 'மாதுர்கா மாதுர்கா' (ஜெய் துர்க்கை) என்று
உணர்வு பொங்கக் கூறினாள். இதுதான் வங்கத் தின் கலாச்சாரம்.
'ஜெய்சிறீராம்' போன்ற முழக்கங்கள்
இந்தியாவிற்குச் சொந்தமானதும் அல்ல, மேற்கு வங்கத்தில் ஜெய்மா காளி,
ஜெய்துர்கா போன்ற முழக்கங்கள் இம்மாநில மக்களின் உணர்வுகளோடு
கலந்தவையாகும். அதே போல் இந்தியா முழுவதும் அந்த அந்தப் பகுதி மக்களுக்கு
என்று கலாச்சார முழக்கம் உள்ளது. இதில் எங்குமே 'ஜெய் சிறீ'ராம் கிடையாது.
ஆகவே தற்போது எழுப்பப்பட்டு வரும் 'ஜெய்
சிறீராம்' முழக்கம் வெறும் வன்முறைக்கான கூச்சல்கள் மட்டுமே, இதுவே
அவர்களின் அழிவிற்கான பாதை யாகவும் முடிந்துவிடும்" என்று கூறினார், இவர்
2018-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மாண வர்களிடையே உரையாற்றும் போதும் இந்திய
ஜன நாயகம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதை மக்கள் தான்
மீட்டெடுக்க வேண்டும் எனவும், நாம் அனைவரும் சர்வாதிகாரத்தை எதிர்த்துப்
போராட வேண்டும் எனவும், மதவாதத்துக்கு எதிரான போராட்டத்தை நாம் ஒரு போதும்
நிறுத்தி விடக்கூடாது என்றும் கூறியிருந்தார்.
மேற்குவங்கத்தில் 2018-ஆம் ஆண்டு ராம நவமி
நிகழ்வின் போது நீதிமன்ற தடையையும் மீறி 'ஜெய் சிறீராம்' என்று
கூச்சலிட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கான காவிக்கும்பல்கள் சாலைகளில் கத்தி,
துப்பாக்கி உள் ளிட்ட ஆயுதங்களை ஏந்திக் கொண்டு வலம் வந்தனர். மோடி
மற்றும் அமித்ஷா மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது 'ஜெய்
சிறீராம்' என்று கூறியே தமது உரையை ஆரம்பித்தனர்.
மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 'ஜெய்
சிறீராம்' என்று கூறச்சொல்லி மேற்கு வங்கத்தில் இஸ்லாமிய பேராசிரியர்,
டில்லி குர்காவில் ஒரு இஸ்லாமிய சிறுவன், மத்தியப்பிரதேசத்தில் இஸ்லாமிய
வணிகர், உத்தரப்பிரதேசத்தில் சாலையில் சென்றுகொண்டு இருந்த இஸ்லாமிய
இளைஞர்கள் முதலியோர் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஜார்கண்டில் 'ஜெய்
சிறீராம்' கூறச்சொல்லி திருமணமாகி 13 நாட்களான இஸ்லாமிய இளைஞர் ஒருவர்
அடித்துக் கொலை செய்யப்பட்டார். அசாம் மாநிலத்திலும் மூன்று முசுலிம்
இளைஞர்கள் இதே காரணத்துக்காகத் தாக்கப் பட்டுள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்திலும் தமிழக
உறுப்பினர்கள் பதவியேற்கும் போது பாஜக உறுப்பினர்கள் 'ஜெய் சிறீராம்' என்று
முழங்கினர். இதற்கு எதிர்வினையாக "பெரியார் வாழ்க!" என்ற முழக்கம்
எதிரொலித்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மேற்கு வங்க நாடாளு மன்ற
உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பேசும் போது "நாங்கள் (வங்காளிகள்),
திராவிடப் பாரம்பரியத்தில் வந்தவர்கள். எங்களுக்கு உங்கள்
கூச்சல்(ஜெய்சிறீராம்) மிகவும் அந்நியமானது" என்று கூறியதும் குறிப்
பிடத்தக்கது.
No comments:
Post a Comment