Sunday, July 14, 2019

இரண்டாம் தாளில் தமிழ் மொழி கட்டாயம்; அஞ்சல் துறை அதிகாரிகள் விளக்கம்



சென்னை, ஜூலை 14  அஞ்சல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப நடை பெறும் தேர்வின் முதல்தாளில் தமிழ் உள்பட மாநில மொழிகள் புறக்கணிக்கப் பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கமளித்துள்ள அஞ்சல் துறை நிர்வாகம், "இரண்டாம் தாளில் தமிழ் மொழியில் 40 மதிப்பெண்கள் பெறாமல் யாரும் வேலைக்கு வர முடி யாது என்றும், வடநாட்டவர்கள் யாரும் பணிக்கு வர முடியாது' என்றும் அதி காரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய அஞ்சல் துறையின்கீழ் நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சல் நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள தபால்காரர், மெயில் கார்டு, உதவியாளர், பன்முகத் திறன் ஊழியர் உள்பட பல் வேறு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அஞ்சல்துறை பணிக ளுக்கான போட்டித் தேர்வு முறையில் இப்போது புதிய மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன. அதன்படி, அஞ்சல்துறை முதன்மைப் பணிகளுக்கான முதல்தாள் எழுத்துத் தேர்வினை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர் பாக அனைத்து தலைமை அஞ்சல் நிலை யங்களுக்கும் மத்திய தொலை தொடர்புத் துறை உதவி தலைமை இயக்குநர் சி.முத்து ராமன் ஜூலை 11-ஆம் தேதி ஒரு சுற்றறிக் கையை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அஞ்சல் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் என்று இரண்டு பகுதி களாகத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்தத் தேர்வுகளில் மொழியைத் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் தாள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கி லத்தில் மட்டுமே நடைபெறும். இரண் டாம் தாள் தேர்வு ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழி களில் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் புதிய தேர்வு முறைக்கு அஞ்சல் துறையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அகில இந்திய தபால் ஊழியர் சங்கத்தின் உதவி பொதுச் செயலாளரும், தபால்காரர்கள் மற்றும் பன்முகத் திறன் ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயலா ளருமான கண்ணன் கூறியது: காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மாநில மொழிகளில் எழுதலாம் என்று இருந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மொழிகளில் எழுத்துத் தேர்வினை எழுத மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த முடிவை கைவிட்டனர். 2015--16-ஆம் ஆண்டு காலிப் பணியிடங் களுக்கான தேர்வில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர்கள் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண் எடுத்தனர். இதுதொடர் பாக நீதிமன்றத்துக்குத் சென்றோம். இந்த பிரச்சினையை தொடர்ந்து, 2017-இல் அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஅய் விசாரணை யில் உள்ளது. இந்நிலையில், தபால் துறை தேர்வில் தமிழர்கள் வரக்கூடாது என்ற நோக்கத் தில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதில், ஆங்கிலம், இந்தியில் தான் தேர்வு எழுதவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வடநாட்டினர் இந்தி மொழியில் தேர்வு எழுதி வந்து விடுவார்கள். இதனால், தமிழர்களுக்கு வாய்ப்புகள் பறிக்கப்படும் நிலை உள்ளது என்றார் அவர்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...