Saturday, July 20, 2019

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான‘நெக்ஸ்ட்’ தேர்வு மசோதாவை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் சட்டசபையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்




சென்னை, ஜூலை 20- முதுநிலை மருத் துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக எம்.பி.பி.எஸ். இறுதியாண் டில் நெக்ஸ்ட் என்ற பெயரில் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சட்டசபை யில் நேற்று (19.7.2019) எதிர்க்கட்சி தலைவர் மு..ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

மு..ஸ்டாலின்:- எம்.பி.பி.எஸ். கடைசி வருடம் மத்திய அரசே தேசியநெக்ஸ்ட்தேர்வு நடத்தும் என்று கூறியிருப்பதன் மூலம், மாநிலத்தில் இருக்கக்கூடிய மருத் துவ கல்லூரி கட்டுப்பாட்டை முழு வதுமாக மத்திய அரசு எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு ஆபத்து இப்போது ஏற்பட்டிருக்கின்றது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ கல்லூரிகளில் படிப்பவர் களுக்கு இந்தநெக்ஸ்ட்தேர்வில் இருந்து விலக்களிக்கலாம் என்பது சென்னையில் இருக்கக்கூடிய சென்னை மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி போன்றவற்றை அவமதிக்கக்கூடிய போக்காக அமைந்திருக்கின்றது.

மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் கூட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல் லூரிகள் இல்லை என்று மத்திய அரசு கருதுவது கூட்டாட்சி தத் துவத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய ஆபத்தாக அமைந் திருக்கின்றது.

எனவேநெக்ஸ்ட்தேர்வை அனுமதிக்கும் தேசிய மருத்துவ கழக மசோதாவை நம்முடைய தமிழக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். மருத்துவ கல்லூரிகள் நடத்துவது மாநிலங்களுடைய உரிமை என்பதை மத்திய அரசிற்கு நம்முடைய மாநில அரசு வலியு றுத்த வேண்டும்.

இதற்கு பதிலளித்து, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘நெக்ஸ்ட் தேர்வை நீங்கள் மட்டுமல்ல, நாங்களும் எதிர்க்கிறோம். இந்த தேர்வு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று ஏற்கனவே நாங்கள் பதிவு செய்து இருக்கிறோம். 2014-ம் ஆண்டிலே இதனை நாங்கள் எதிர்த்து இருக்கிறோம். அதனால் தான் இது மத்திய நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப் பட்டதுஎன்று கூறினார்.

இந்த தேர்வுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...