Saturday, July 20, 2019

கோழியும், முட்டையும் சைவமாம் சொல்லுவது சிவசேனா

சிவசேனா வைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத், கோழியும், முட்டையும் சைவ ஆயுர்வேதம் எனத் தெரிவித்துள்ளார்.
உயிர்களைக் கொன்று தின்பது எல்லாமே மாமிச உணவு என்பதே உண்மை யாகும்.  ஒரு சிலர் கீரை மற் றும் பால் கூட அதில் சேர்ந் தது எனக் கூறி வருகின்றனர்.   குறிப்பாக ராமலிங்க வள்ள லாரை பின் பற்றுவோர் பால், தயிர், நெய் உள்ளிட்ட எதையும் உட்கொள்வது கிடையாது.  அதே நேரத்தில் நெடுநாட்களாக முட்டை சைவம் என்னும் பேச்சு நிலவி வருகிறது.
சிவசேனா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் (17.7.2019) மாநி லங்களவையில் ஆயுர்வேதம் குறித்து உரையாற்றினார்.  அவர் தனது உரையில், கோழிக்கறி என்பது சைவமா அல்லது அசைவமா என்பதை அமைச்சரவை முடிவு செய்ய வேண்டும்.    ஏற் கெனவே முட்டை சைவம் எனச் சொல்லப்படுகிறது.  கோழி முட்டையில் இருந்து வரும் போது அதை அசைவம் என சொல்லப்படுகிறது.
நான் ஒருமுறை நந்தார்பர் பகுதியில் உள்ள ஒரு சிற்றூ ருக்குச் சென்றிருந்தேன்.  அங்கு எனக்கு அளிக்கப்பட்ட உணவில் என்ன உள்ளது எனக் கேட்டேன்.  அவர்கள் அது  ஆயுர்வேதக் கோழி என கூறினர்.   மேலும் அதை உண்பதன் மூலம் அனைத்து நோயிலிருந்தும் நிவாரணம் பெற முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது ஏற்கெனவே சரண்சிங் பல்கலைக்கழகத் தில் ஆயுர்வேத முட்டை உற்பத்தி செய்வதாக சொன் னது நினைவுக்கு வந்தது.   எனவே கோழிக்கறி என்பது ஆயுர்வேதமா என்பதை ஆய்வாளர்கள் முடிவு செய்ய வேண்டும்.    ஆயுர்வேத முட் டைகள் சைவ உணவால் உரு வாக்கப்படுவதாக சொல்லப் படுகிறது.
எனவே அதில் உள்ள புரோட்டினை சைவர்களும் உண்ணுகின்றனர்.   அதிலி ருந்து வரும் கோழியும் சைவம் என பொருள் கொள் ளலாம்.   நாட்டில் ஒரு சில சைவர்கள் பால் மற்றும் பால் பொருட்களைச் சாப்பிடாத போதும் இந்தியாவில்  பல சைவர்கள் அவற்றை உண்ணு கின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...